உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    சென்னை பள்ளிகளில் வெடிகுண்டு: வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தியால் பதறிய பெற்றோர்கள் (வீடியோ இணைப்பு)

    சென்னையில் உள்ள ஒரு சில பள்ளிகளில் வெடிகுண்டு இருப்பதாக கிளம்பிய வதந்தியின் காரணமாக மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சென்னையின் அடையாறு, திருவான்மியூர்,ஈஞ்சம்பாக்கம், மந்தைவெளி மற்றும் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது.

    வெடிகுண்டு மிரட்டல் தகவல் பரவியதால் பள்ளிக்குழந்தைகளும், பெற்றோர்களும் பீதியடைந்தனர்.

    இதனையடுத்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் வந்து அழைத்துச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து அடையாறு திருவான்மியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக பொலிசார் தெரிவித்ததாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனம் சார்பில் ஏராளமான நடுநிலை, மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இவர்களுக்கு சொந்தமாக சென்னையை ஒட்டியுள்ள கேளம்பாக்கத்திலும் ஒரு பள்ளி உள்ளது.

    இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டறையை தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளி உள்பட, செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அனைத்து பள்ளிகளையும் வெடி குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம் என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

    இதையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறோம். வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே இது வதந்தியாக இருக்கலாம்

    யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    bomb_treat_002 bomb_treat_003

    743

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.