உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

எங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே ????

12507261_870635739720996_3360125924739910399_n

1929781_870634303054473_5834386267907637335_n

29,859..views

 • பாஸ்கரன்:

  நாங்கள் இப்போ என்னதான் செய்கிறது ,,

  • செல்வா:

   மறுமலர்ச்சி மன்றமானது எனது அறிவிற்கு எட்டியவரை

   வேல்முருகன், கிருட்டி, தயாளன், ரவி, அமரர் இந்திரன்

   இவர்கள் தான் மன்றதின் முதுகெலும்பு. இவர்களைத்தான் இன்று

   கதைக்க வைக்க வேண்டும்.

   இவர்கள் கதைத்தால் மாத்திரமே மன்றம் மன்றமாக இருக்கும்.

   இப்பொழுது மன்றத்தில் இருப்பவர்கள் அரை குறையானவர்கள் .

   இவர்களின் நோக்கம் வெளிநாட்டு பணம் மாத்திரம்.
   இதற்கு கனடாவில் உள்ள ஒரு சிலர் அடுத்தவரின் பணத்தில்

   எமது ஊரில் தங்களை ஒரு பொதுநலவாதி என காட்டிக்கொண்டு

   தாங்கள் ஊருக்கு செல்லும் பொழுது தம்மை ஒரு மாலை அணிவித்து கௌரவித்தாலே போதுமென நினைக்கிறார்கள்.

   ம.மன்றத்தில் நடக்கும் வேறு எந்தவிதமான பிரச்சனைகளைப் பற்றியும்

   அவர்கள் சிந்திப்பதில்லை……

 • Rajan:

  திரும்பவும் ஒரு குழப்பத்தைச் செய்யலாம். ஆராவது ஒரு குடிகாரனைப் பிடிச்சுக் கொழுத்திப்போட்டு தீக்குளித்தார் பெருமகன் என்னலாம். உனக்குத் தெரியாததா பாஸ்கரா…………

  முடிஞ்சா இவையையும் தேடுங்கோ……………..

  சுவிசில் இருந்து வரும் காசைச் சுழட்டுவதுக்கு
  ஊர் ஏழைப் பிள்ளைகளை ஏய்த்துத் திரிகின்ற எத்தரத் தேடுகின்றோம்

  குடும்பங்களைக் குலைத்துக் குழந்தைகளைச் சீரழித்துக்
  குற்றவாழிகளை உருவாக்கும் குத்தல்களைத் தேடுகின்றோம்

  கோயில்களைக் கொள்ளையிட்டுக் கொட்டமடிக்கின்ற
  கொள்ளையரைத் தேடுகின்றோம்

  ஊரை இரண்டாக்கி ஊத்தைகளை ஊக்குவிக்கும்
  சூத்தையரைத் தேடுகின்றோம்

  • பாஸ்கரன்:

   தம்பி ராஜன் உங்களிடம் இருந்து என்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • visaran:

   தம்பி வெளிநாட்டு காசு உங்களுக்கு எதுவும் தெரியாது
   எங்களால் பல சண்டை காரர்களை உருவாக்க முடியும்

  • munaaluruppinar:

   தமிபி ,ராசா நீங்கள் யாரையும் தேட வேண்டாம் .இப்ப ஊரில ஆட்சி நடத்திற எழு சக்கரவர்த்திகளையும் வெளிஎற்றினாலே நம்ம ஊர் முன்னேறும் .நேருக்கு நேர் கருத்துக் கூறமுடியாத மக்கள் செல்வாக்கற்ற இந்த ஏழுபேரும் நடத்தும் மந்தமே எம்மூருக்குக் குந்தம் என்பது உண்மை .சிலவேளை அந்த ஏழுபேரில் நீரும் ஒருவராக இருக்கலாம் ,அல்லது அவர்களின் அடி வருடியாகவும் இருக்கலாம் .உங்களிடம் ஒரு கேள்வி ,நீங்கள் ஏன் மக்கள் கருத்துக்கு அன்சுகிரீர்கள் ?மக்கள் செல்வாக்கு எங்கு இருக்கிறது என்பது உங்களுக்கு நல்லாக விளங்கும் .அப்படி இருக்க நீங்கள் ஏன் மக்களுக்கு பயப்பிட வேண்டும் ?

   • visaran:

    தம்பி சிலர் சிந்திக்கும் திறமை குறைந்த ஆக்களை மண்டை கழுவி
    தனக்கு ஆக பயன்படுத்தும் நபர்களையும் தெர்யும்
    மக்களை முட்டாள் அக்குவரகளையும் தெர்யும்

  • nakkeeran:

   சரியாகச் சொன்னீர் ராஜன் ,ஆனால் ஊரிலுள்ள ஏழைச் சிறுவர்களை எம்மற்றுவதேன்பது ஏற்க்கமுடியாது .அங்கு இலவசக் கல்வி நடைபெறுவது யாவரும் அறிந்ததே .

  • oru uuththaiyan:

   தம்பி ராசா ,அப்ப ஊரிலை நடக்கிற அராஜகத்தைத் தட்டிக் கேட்கிற எல்லோரும் உன்பார்வையில் ஊத்தைகள் .நீர் மட்டும் எச்சில் இலை எடுக்கும் ஓர் அற்பன் இல்லையா ?

 • uur vilampi:

  ஆ .தமிழனின் தலைவிதியை நினைத்து தலையில கையை வைச்சு உட்காருங்கோ .

 • பாஸ்கரன்:

  ஓருடம் தேடி கஸ்ரபட வேண்டாம் தம்பி ராஜன், எல்லாரும் உங்கட ஊரிலைதான் இருக்கினம், ராஜன் நிங்கள் தேடுகிற ,அந்த 7 பெரும் ஊரிலைதான் ,இருக்கினம் உங்களளுக்கு தெரியாத ,,

 • uur vilampi:

  தம்பி ராசன் நீங்கள் உணர்ச்சிவசப்படுக்கியதை பாத்தா 8 ஆவது ஆளா வரக்கூடிய தகுதி உங்களுக்கு வந்திட்ட்டுது போல.எதுக்கும் 7 பேர்ல ஒராள் ஊரை விட்டோ அல்லது உலகத்தை விட்டோ ———சாச்சா அதை என்ர வாயாலை சொல்ல விரும்பேல்லை .ஒல் தி பெஸ்ட் உனக்கு

 • visaran:

  எமது கிராமத்தை இரண்டாக உடைக்கும் புலம் பேர் பணம்
  மேய் உனக்கு நேர்மை இருக்க
  ஊரில் பகைமைய உருவாக்கி வேடிக்கை பார்க்கும் நீ யார் ?
  குத்தகைக்கு கொடுக்க பட்ட அடிமை நீ
  இங்கு ஊரில் இளையோருடன் நஞ்சு விதை தூவி குளிர் காயும்
  நீ யார்

  • nakkeeran:

   எமது கிராமத்தை இரண்டாக உடைத்தது இன்றைய புலம் பெயர் பணமல்ல .அன்றைய எம்மூரை உருவாக்கிய பெரும் தலைவர் நடேசன் ஐயா அவர்களின் வெளியேற்றமே என நான் நினைக்கிறேன் .

 • kaalaiyuurkkavignan:

  வந்திடுவாய் கந்தையா !
  —————————

  கோவணக் கட்டுடன் கோயிலில் அமர்ந்துள்ள
  கோவிந்தன் மருகனே முருகையா
  உன்னை வைத்தே ஊரை எம்மாற்றுவோரை
  என்னென்று சொல்வேன் என் அப்பனே முருகா
  நாலுமுழத் துண்டு ஒன்றுக்கே வழியற்ற உன்னைவத்து
  வேலுண்டு வினை தீர்க்க என்று நாமிருக்க
  கூழுக்கும் ஆசை கொண்டு மீசைக்கும் ஆசை கொள்ளும்
  நாளுக்கு ஒரு வேஷம் பொட்டெம்மை ஆட்டிவைக்கும்
  தோளுக்கு மிஞ்சிய தோழர்கட்கு அறிவுரைக்க
  யாழுக்கு ஒருமுறை நீ வந்திடுவாய் கந்தையா !

  காலையூர்க் கவிஞன்

  • visaran:

   காலையடி கவியே நீ ஏன் முருகனை
   அழைக்கிறாய் காசு இருந்தால் என்னவும் செய்யலாம்

   மன்றத்துக்கும் காசு கொடுங்கோ
   புதிய கட்டிடம் கட்டுவதற்கும் காசு கொடுங்கோ
   வெளிநாட்டு இருப்பவர்கலேய்

 • மறுமலர்ச்சி மன்றம் எப்போதும் பொது ஊர் சொத்து ,எங்கள் புலம் பெயர்ந்து வாழும் பண்டார உலக பண் மக்கள் சொத்து ,வீடு ,வீடாக குளிரையும் பார்க்காது
  புலம்பெயர்ந்த்து வாழும் மக்கள் குழவி தேன் சேர்ப்பது போல் பணத்தை சேர்த்து அதனுடன் பெரிய தொகை வழங்க்கிய கொடை வள்ளர் அவர்கள் குடும்பம், குடும்பத்தின் விருப்விருப்பத்கேற்க்க அவ் சொத்து பண்/பண்டார மக்களுக்குரியதே. இவ் யாவரும் தனிமையாக்குவது உலக எங்கள் புலம் பெயர்ந்து வாழும் பண்டார பண் மக்கள் ஏமாற்றுவதன் மூலம் சாபத்த்திற்க்கும் தனி நபர்கள் சொந்தம் கொள்வது மிக தவறு
  .( நிறுத்து) மறுமலர்ச்சி மன்றம் சொத்து விருப்பத்கேற்க்க மூலம் எப்போதும் சமுக பணி செய்த பின் தன்னுருமை ஆக்குவதன் மூலம் இவ்,அவ் சொத்தை உங்கள் /என்னுடைய சொத்து ஆக்குவது மிக ,மிக , தவறு ,அப்படி தவறின் பின் புலம்பேர் சட்டத்தரணி மூலம் செலவு நீங்களே/நாங்களே ஒப்படைக்கவேணும் .தனியோர் என்று கருதும் மறுமலர்ச்சி மன்றம். தனியார் சொத்து ஆகாமல் பொது சொத்து ஆகினால் நன்று, சிந்தீங்கள்
  ,எது நல்லதென்றுன்ரு,ஆண்டவன் நீதி ? தவறென்றால்? சாந்தை பிள்ளையார் ,
  பணிப்புல அம்மன்,இடும்மன் முருகன். ஆண்டவன் தீர்ப்பே சரியான தீர்ப்பு,,,,,,,,,,,,,, பண்டார பண் மக்கள்(ஆண்டவன் தீர்ப்பே சரியான தீர்ப்பு)

 • oruvan:

  மாரித் தவளை போல் நாம் கத்திகத்தி சாகவேண்டியதுதான் .ஆனால் ஒன்று மட்டும் உண்மை
  பகியால் விடப்பட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்த்தே ஒழிய மறுமலர்ச்சி மன்றக் கருத்து
  அல்ல . மன்றக் கருத்தாயின் அது மன்றச் செயளாளர் ஊடாக வரவேண்டும்.அப்படி எதுவும்
  மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை .

  • செல்வா:

   மறுமலர்ச்சி மன்றமானது எனது அறிவிற்கு எட்டியவரை

   வேல்முருகன், கிருட்டி, தயாளன், ரவி, அமரர் இந்திரன்

   இவர்கள் தான் மன்றதின் முதுகெலும்பு. இவர்களைத்தான் இன்று

   கதைக்க வைக்க வேண்டும்.

   இவர்கள் இன்று கதைப்பார்களா….????????

   ……

   • mohan:

    செல்வா உங்கள் அறிவிற்கு எட்டியது அரை,குறை .அந்த அரைகுறையை வைத்து நீங்களும்
    குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள். இதேபோல் மன்றத்துடன் காழ்புணர்ச்சி கொண்டவர்கள், மறுமலர்ச்சி மன்றத்தை விமர்சிப்பதையே கொள்கையாக
    உடையவர்கள் இவர்களிடமிருந்து நியாயம் எதிர்பார்ப்பது தவறு ,இதர்க்காக மறுமலர்ச்சி மன்ற நிர்வாகம் இவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம்மில்லை .இக்கருத்து எழுதுபவர்களில் யாராவது ஒருவர் மறுமலர்ச்சி மன்ற கட்டுமானப் பணிகளுக்கு உதவி செய்திருப்பார்களா என்பது ??? பண் இலவச படிப்பு சுவீஸ் விடையமாக நான் மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்துடன் கதைத்தபோது தங்களுடன் இதுவரை யாரும் கதைக்கவும் இல்லை ,
    தொடர்பு கொள்ளவுமில்லை என்றே கூறினார்கள்.இல்லை நாங்கள் மன்ற நிர்வாகத்துடன் கதைத்த நாங்கள் என்று யாராவது சொன்னால் தயவு செய்து யாருடன் யார் ,யார்கதைத்தது
    எப்போகதைத்தது ?என்ற விபரத்தை அறியத்தரவும் .நான் மீண்டும் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு சுமூக நிலை உருவாக பாடுபடுவேன்…..

    • காலையடியான்:

     மோகன் வணக்கம்

     மன்றத்தை உங்களுக்கு நல்லாகவே தெரியும் அண்ணா மன்ற நிருவாகம் யார் அண்ணா இப்ப, … எப்ப அண்ணா தெரின்சவயல் சொன்னா நானும் போஜிருப்பேன் எல்லே அண்ணா……… சுவிஸ் இலவசக்கல்ல்விக்கு என்ன பிரச்சனை அதை நீங்களே நேரடிஜாக சுவிஸ் ல் அவர்களிடம் கேட்டிருக்கலாமே நீங்கள் இரண்டு பகுதிஜோடன் நேரடிஜாகக்கதை யுன்கோவன் எதுக்கு சும்மா நாடகமாடுறியல் முதல்ல அண்ணா ஊர் சனத்தைசும் மன்ரத்தைஜும் ஒட்டுமைஜாக்குன்கோவன்
     அப்படி நடந்தால் மற்றது எல்லாம் தன்னால நடக்கும்

     அப்ப நான் போஜிட்டு வரன் மோகனனை ……………….

    • செல்வா:

     தம்பி மோகன் நீங்கள் கதைத்தா….. அந்த நிர்வாகியின்

     பெயரை இங்கு உங்களால் குறிப்பிட முடியுமா.???????

     ஒரு நிர்வாகி என்றால் மக்களின் கேள்விக்கு பதில்

     அழிக்கவேண்டியது அவரது கடமை.

     அழிக்கவிட்டால் அவர் அரை குறைதான்…..

     மன்ற கட்டுமானப் பணிகளுக்கு உதவி செய்திருப்பார்களா ???

     செய்யாமால் இங்கு நாங்கள் வரவில்லை………

     • mohan:

      தாங்கள் ஒரு தெழிவு அற்றவர் என்பது தங்களின் கருத்தில் இருந்து புலப்படுகிறது .
      சம்பந்தப்பட்டவர்கள் என்னை அணுகினால் என்னால் சகல விளக்கமும் கொடுக்கமுடியும்
      இந்தப் பிரச்சனைக்கு மூல காரணம் சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றிக் கதைக்காதுதான்
      இதைவிடுத்து இடையில் உள்ளவர்கள் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி குளிர்
      காய எண்ணுகிறார்கள்.இது தான் உண்மை. மறுமலர்ச்சி மன்றம் ஒரு கட்டுக்கோப்பானது.அதர்க்கு அமையவே எல்லாம் சாத்தியப்படும்.கண்டபடி எல்லோரும்
      வந்து போக அது ஒரு வேச தாசி இடமில்லை.

     • mohan:

      அண்ணன் செல்வாவிற்கு தம்பி மோகன் எழுதுவது …
      நீங்கள் எந்த நிர்வாகியிடம் கேள்வி கேட்டு பதில் கூறவில்லை ?
      மன்ற கட்டுமானப் பணிகளுக்கு நீங்கள் உதவி செய்திருந்தால் எவரிடம் உங்கள்
      பங்களிப்பை செய்தீர்களோ அவரை அணுகி உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு
      அடையுங்கள் .அதுதான் ஒரு படித்தவனுக்கு அழகு .அதைவிடுத்து மன்ற நிர்வாகத்தை
      குறை கூறுவதில் என்ன நியாயம் செல்வா:?

     • suluththaan:

      பணத்துக்காக ஆடுபவல்தான் நீர் கூறும் வேசை .அண்ணா மோகன் ,மன்றத்தில் இப்போ என்ன நடக்கிறது ?
      ஊர் மக்களின் வளர்ச்சிக்கு உதவாது வந்தார் வரத்தாரின் வருமானத்துக்காக களியாட்டங்களுக்கு இடமளிப்பது வேசைத்தனமில்லையா

     • செல்வா:

      தம்பி மோகன் இதற்கும் பதில் உம்மிடம் உண்ட???

      நீரும் அந்த அரை,குறைகளில் ஒருவர் என்பதில்

      ஐயம் எனக்கு இல்லை…

     • mohan:

      அண்ணன் செல்வா 27-01-16இல் எழுதிய கருத்துக்கு தம்பி மோகனின் பதில் …..
      அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
      வழுக்காயும் கேடீன் பது.
      பொருள்- பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
      மக்களே போல்வர் கயவர் அவரன்ன
      ஒப்பாரி யாங்கண்ட தில்.
      பொருள்- குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

     • செல்வா:

      “இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
      மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
      மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

      எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
      நுண்பொருள் காண்ப தறிவு.

      அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.

 • தீசன்:

  வணக்கம் நண்பர்களே நமது மன்றம் இந்த கட்டடங்கள் கட்ட முன்பும் கட்டுண்டு இருக்கும் போதும் நமது ஊர் மற்றும் அயல் ஊர் மக்களினாலும் இளைஞர்களினாலும் இனைந்து பல கலை நிகழ்ச்சிகள் , விளையாட்டுபோட்டிகள், இன்னும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது எல்லார்க்கும் அறிந்தே இப்போது இளைஞர்கள் இல்லாமல் மக்கள் இல்லாமல் நமது மன்றம் வெறித்துப் போய் இருகிறது வெளிநாட்டவரை நம்பவைக்க எப்போவாவது செல்லும் சிறுவர்களை படம் எடுத்து இணையதளத்தில் போட்டு நாடகம் ஆடுகிறார்கள் நமது சிறப்பாக,செழிப்பாக இருந்த மன்றம் எங்கே எந்தவித அறிவிப்பும் இன்றி திருடர்கள் தமகவே தமக்குள்ளோ கூட்டம் கூட்டி மன்றம் தமது சொத்து என செல்கின்றனர் இந்த பணப்பேய்களின் ஆட்டத்தால் நமது மன்றம் யாருக்குமே பயன்படாமல் செல்லுகிறது யாராவது நமது பழைய மன்றத்தை திருப்பிதாருஞ்கள்

 • vimal:

  சரி காலத்துக்கு ஏற்ப போல் அவர்களும் மாறி விட்டார்கள் போல் ..
  எனக்கு நடந்த விடயம் .. நான் உருண்டு புழுதி குடித்து விளையாடிய வெற்றி மடம்.. 1996 ஆண்டுக்கு பின்பு 2015 ஆண்டு பின்பு சென்றேன் .. எல்லாமே மாறி விட்டது சரி பழைய நினைபில சும்மா அந்த நிலத்தில படுத்து இருந்தேன் இப்ப புதியதாய் இருக்கிற நிலத்தில புல்லு வெட்டுகிற ஒருவர் வந்து கேட்டார் என்ன உனக்கு வெறிஜோ இதில படுத்து இருக்கிறாய் என்று
  அந்த கேட்டவருக்கு ஒரு 17 – 18 வயது இருக்கும் .. அந்த நேரம் நாங்கள் கிரிட்டி அன்னைக்கும் சரி பகி அன்னைக்கும் சரி கொடுக்கிற மரியாதையோ தனி இப்ப என்ன நடக்குது ?
  இதில கிரிட்டி அன்ன சொன்னார் தான் எதோ ஒரு சின்ன விடயத்துக்கு விளக்கம் கேட்க ஒரு சின்ன ஆள் தனக்கு அடிக்க கை ஓங்குது என்று .. நான் அன்று பார்த்த கிரிட்டி அன்ன அப்படியே இருக்கிறார் அனால் .. நிர்வாகம் ? .. எங்கே .. அதெல்லாம் திரும்பி வராது என்பது எனது கருத்து ..

  • thayaa:

   மன்றம் என்ன கோப்பிரேசன் எண்டு நினைச்சனியே .அல்லது சத்திரமே ,உங்களுக்கு வீடுகல்லை பிரச்சனை எண்டால் சுடலையிலை போய்ப் படுக்கலாம் தானே .இது மன்றம் நினைவிருக்கட்டுக்கு .

   • vimal:

    இது மன்றம் நினைவிருக்கட்டுக்கு ? அப்படி என்றால் என்ன ? உனக்கும் அங்கு வந்து கேட்டவருக்கும் என்ன வித்தியாசம் ? சில வேளை உனது அப்பாவும் அவரது அப்பாவும் ஒண்டாய் இருக்குமோ ? இதில குடும்ப பிரட்சனை பத்தி கதைக்கவே இல்லை !!! பழைய மன்றம் எங்கே என்று தான் … “பர்தனங்கள் தான் உங்கட மன்ற இலட்சணத்தை “… பூட்டு போட்டு பூட்டிவைத்து இருகிரின்கள் …. விளையாடுகிறது என்றால் வீரர்கள் வேறு இடம் தேடி திரிய வேணும் … ஒரு சின்ன மன்றதுக்குள்லேயே நிறைய பிரிவுகள் !!! உரில உள்ளவர்கள் படிக்க ஒரு இடம் கொடுக்க மாடினம் கேட்டால் அவர்கள் வந்து எங்களை கேக்க வில்ல நாங்கள் கொடுக்க வில்ல ? இதில பெரிய இலட்சன கதை ..

    மன்றமாம் மன்றம் … ஒரு சின்ன விழா வைத்தாலே 10 குடும்பம் வருகிறது அருமை ….. உங்கட மன்ற இலட்சணத்தில

    நிர்வகம நடதுகிரின்கள் ? அடாவடி அடிமைத்தனம் தானே நிறைத்து இருக்குது !!!!

    கழுதைக்கு தெரிய போகுதா கற்பூர வாசனை !!!! மறுமலர்சி மண் வாசனை என்றால் என்ன என்று உனக்கு தெரிமா? …………………………………

    • செல்வா:

     தம்பி அருமை அருமை எனக்கும் தெரியும்.

     மறுமலர்சி மன்றம் மண் வாசனை என்ன என்று எனக்கும்

     தெரிம்.

     அதெல்லாம் இந்த அரைகுறைகளிற்கு விளங்கவா போகுது

    • eluvaril oruvan:

     விமல் மன்றத்திலை படுக்க விடவில்லை என்று கொக்கரிக்கும் நீ மன்றத்துக்காக எவ்வளவு பணம் கொடுத்தாய் ?கொடுத்திருந்தால் அதை நிரூபிக்க உன்னால் முடியுமா ?இது எண்கள் கஷ்டப்பட்ட சொத்து .இங்கு எவையும் வாலாட்ட முடியாது .குலைக்கிற நாய் கடிக்காது என்பதும் தெரியும் .முட்டை போட்ட கோழிக்குத்தான் தெரியும் வயித்தெரிச்சல் .சரி நான் வாறன் .

 • Ampaal Pakthan:

  வணக்கம்…
  மறுமலர்ச்சி மன்றம் வேறு அங்கெ நிமிர்ந்து நிக்கும் கட்டிடம் வேறு.
  மறு மலர்ச்சி மன்றம் குறிப்பிட்ட நபர்களால் தொடங்கப் பட்டு இருக்கலாம், அனால் கட்டிடம் கட்ட பொது மக்களின் பணமே பயன் பட்டது, மற்றும் படி மறு மலர்ச்சி மன்றம் தொடங்கியவர்களின் பணம் அல்ல. அகவே பொது மக்காளால் தெரிவு செய்யப் படும் பொது நபர்களே கட்டிடங்களுக்கு பொறுப்பு வகிக்க முடியும்.
  இந்தப் பிரச்சனைய சட்ட முலமாக அணுக சந்தர்ப்பம் இல்லையா…
  நிச்சயமாக தற்பொழுது மன்ற பிரதி நிதிகள் என்று குருபவர்களுக்கு யாருமே வழக்கு ஆட இனி பெரிய பண உதவி செய்ய முன் வர மாட்டார்கள்…
  ஆழ்ந்து சிந்தித்து பேசி சந்தோசமாக வாழ்வதே சிறந்தது…
  நன்றி vanakkam

  • செல்வா:

   எதையும் யோசிக்காமல் இங்கு இறங்கவில்லை

   கட்டிடம் கட்டுவதற்குத்தான் பல கோடி தேவை…

   வழக்காடுவதற்கு சில லச்சங்கள் போதும்……

   இதற்கு பொது மக்களின் பணமே பயன்பட்டது.

   இது தான் உண்மை.

 • பதவி மீது கொண்ட ஆசை யினால்
  சுயா நலவாதிகள்
  பெருகும் கலிகாலம் என்பதால்
  இங்்கேய் தருமம் என்பது வினா வாகும்
  அதர்மம் என்பது நியம் மாகும்
  யாரை குற்றம் சொல்ல
  யாருடன் போய் முறை விட
  காலம் தரும் முடிவுகள்
  விதி என்று நொந்து கொள்வோம்

 • ஊரவர் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும்.மற்றும் நியாயமான நல்லொழுக்கமுள்ள முறையில்.கருத்துக்களை தெரிவிக்கும்.மோகன். அவர்களே! நீங்கள் இந்தப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென நினைப்பது.தவறல்ல.ஆனால் இந்தப் பிரச்சனையை எளிதாக சரிசெய்யலாம்.என்று நினைப்பது தான் தவறு. என்னைப்பொருத்தவரை இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு மன்றத்தினர்களின் கைகளில் அல்ல. ஏனென்றால். இந்தப் பிரச்சனை தீர வேண்டும் என்று நினைப்பவர்களை விட.இப்பிரட்சனை தீரவே கூடாது என்று எண்ணுபவர்கள் தான் அதிகம். இதில் தெளிவாக பேசுபவனை விட குழப்பவாதிகளே அறிவாளியாக உள்ளனர்.ஆகவே இங்கே விவாதிப்பவர்களின் வார்த்தைகளை கொஞ்சம் கூர்ந்து கவனியிங்கள்.

  • suluththaan:

   அண்ணா ,அர்ப்புதனன்னா !நீங்கள் கூறுவது போல் பிரச்சனைத் தீர்வு அல்ல என்பது தவறு .பிரச்சனையே சர்வாதிகார மன்றமே .எழு பேர்தான் மன்றம் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா ?அப்படியானால் உங்கள் கருத்தையும் பொது நோக்குடைய ஒருவரும் ஏற்கமாட்டார்கள் .முதுசச் சொத்துக்குரிய எழு பெரும் விலகினாலே மன்றம் பொதுச் சொத்தாகும் .கள்ள உறுதி முடித்துக் கையகப் படுத்திய பகல்க் கொள்ளையர் எப்படி விட்டு விலகுவர் ?

   மன்றத்தில் கோயில் என்ற பெயரில் ஒரு கூடாரம் அமைத்து ஏமாளிகளை ஏமாற்றிக் கொண்டிருப்பதை நீர் அறிவீரா ?
   ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன் ,ஒரு பெண் கோயிலில் நாய்கள் அசிங்கம் செய்கின்றன என தடைக் கதவு போடவென ஒரு தொகைப் பணத்தை ஏழில் ஒன்றிடம் கொடுக்க அவர் அதை ஒரு வாச்சரிடம் கொடுக்கச் சொன்னாராம் .அவர் கொடுத்து விட்டு சில நாட்களுக்குப் பின் கதவு படவில்லை என கொடுத்தவரிடம் விசாரித்தபோது அது எனது சம்பளத்துக்காக எடுத்து விட்டேன் எனக் கூறினாராம் .இதுதான் ஏழுபேர் நிர்வாகம் .இன்னும் கதவு போடப் படவும் இல்லை .

   • சுளுத்தான் அவர்களே! ஒருவரை குறை சொல்வது, ஒருவர் மீது. பொறாமைப்படுவது, ஒரு நிர்வாகத்தின் தலைமைத்துவம் ஒரு சிறு தவறு செய்தால்க்கூட அதை ஊதிப் பெரிதாக்குவது போன்ற பழிச்சொற்கள் எம்முடைய பலவீனங்கள்.இருப்பினும் இதில் நீங்கள் மன்ற நிர்வாகத்தின் மீது மிக தத்ரூபமாக ஒரு கதையொன்றை சித்தரித்து தயார் செய்திருக்கின்றீர்கள்.என்பது தான் உண்மை எதையும் நியாயப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் பொருந்தாத காரணங்களைக் கூறி மிகப்பெரிய பொய் ஒன்றை பலவீனமாக்க முயற்சிக்கின்றீர்கள்.என்பதும் உண்மை …

    மன்றத்திலுள்ள ஆலயத்தில் நாய்கள் அசிங்கம் செய்கின்றன என தடைக் கதவு போட ஒரு பெண் ஒரு தொகை பணத்தை நிர்வாகத்தினரிடம். வழங்கியது என்பது உண்மையல்ல. நெதர்லாந்தில் இருந்து.சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் என்பவர் சில மாதங்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்த போது. தடைக் கதவு போடுவதற்காக மன்ற நிர்வாகத்தினரிடம். முப்பதாயிரம் ரூபாய் பணம் உதவியாக வழங்கியுள்ளார். மேலும் சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் என்பவர் இப்பணத்தை வழங்கியதும். அல்லாமல். மன்ற நிர்வாகத்தினரிடம்.ஒரு சிறிய ஆலோசனையையும் சமர்ப்பித்திருந்தார்.அதாவது நாய் அசிங்கம் பண்ணிவிடும் என்கிற ஒரு காரணத்துக்காக. தடைக் கதவு போட்டால் ஆலையத்தின் முன் பக்க அழகு குறைய வாய்ப்புண்டு. ஆகையால் நாய் அசிங்கம் பண்ணி வைப்பதை சுத்தம் . செய்து, தடைக் கதவுற்றிற்குரிய இப்பணத்தை வேறு ஏதாவது ஒரு திட்டத்திற்கு பயன் படுத்தலாமே என்ற ஆலோசனையை சமர்ப்பித்திருந்தார். இது தான் உண்மை….!

    • suluththaan:

     அர்ப்புதன்னா ,நாய் வாலை நிமிர்த்த முடியாதென்பதை நான் நன்கு அறிவேன் .இருந்தும் உண்மைகள் வெளியில் வரவேண்டும் என்பதற்காக இச் சம்பவத்தைக் கூறினேன் .நீர் கூறிய உண்மை மூலம் மேலும் ஒரு உண்மை புலனாகிறது .கதவு போடவேனப் பலரிடம் பணம் பரித்திருக்கிராகள் போல் உள்ளது .இப்போது நகுலேஸ்வரன் பணம் கொடுத்ததும் தெரிய வருகிறது .ஆனால் நான் கூறிய பெண் பணம் கொடுத்தது உண்மை என்பது உறுதியாகக் கூறமுடியும் .அந்தப் பெண் வேதனைப் பட்டுக்கொண்டு வெளியில் சொல்லாது இருப்பது எனக்குத் தெரியும் .
     உங்களிடம் ஒருகேள்வி ,இதுபற்றி ஏன் மன்ற ஏழுபேர் பதிலளிக்க வில்லை .
     மன்றத்துக்கு இக் காணி யார் எழுதினார்கள் ?

     கள்ள உறுதி பற்றிய உண்மையை உம்மால் வெளியிட முடியுமா ?
     நான் ஒரு முன்னாள் உறுப்பினன் .உண்மைகள் அறிந்தவன் .இந்தக் கள்ள உறுதியுடன் சம்மந்தப் பட்டவர்களையும் அறிந்தவன் .

  • MOHAN:

   அன்புள்ள அற்புதன் …
   இங்கே விவாதிப்பவர்களின் வார்த்தைகளை கொஞ்சம் கூர்ந்து கவனிக்கும்படி குறிப்பிட்டு
   உள்ளீர் . அப்படி கூர்ந்து கவனிக்கும்போது தான் இவர்கள் குழப்பவாதிகள் அல்ல என்பது எனக்கு நன்கு புலப்படுகிறது .இவர்கள் யாவரும்

   பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
   ஆள்வினை இன்மை பழி.
   பொருள்-விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை
   அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

   • suluththaan:

    உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறர் பொருளைக்
    கள்ளத்தால் கொள்வோம் எனல் .

    பொருள் –ஒருவன் மற்றவருடைய பொருளைக் களவாட வேண்டு மென தன் மனதில் நினைப்பதே தீமையாகும் .

 • Rajan:

  ச்சா புதுக் கதையாக் கிடக்கு, மன்றத்தில சேவையாற்றும் ஒருவர்மேல் அபாண்டமாகப் பழி சுமத்தி பொலிசில் பொய்க் கேஸ் போட்டு உள்ள தள்ளப் பாத்தினம். அது பலிக்காமல் வெள்ளை சொள்ளையோட கேஸ் போடப் போனவையைப் பொலிஸ் எச்சரிக்கை செய்து அனுப்பினதுதான் மிச்சம். அது எடுபடேல்லை எண்டவுடன இப்ப புதுக் கதை உருவாக்கியிருக்கு. பேஸ் பேஸ் இதையும் சிலர் நம்புவினம்.

  ஆனால், நான் கேள்விப்பட்டபடி மன்றத்தில எந்தவொரு கொடுப்பனவும் காசோலை மூலமாகத்தானாம் கடந்த நாலுவரிசமா நடக்கிது.

  மற்ற முக்கியமான விசயம் மன்றம் கல்வி நிலையத்தை நடத்திறதுக்கு ஒரு மறுப்பும் சொல்லேல்லையாமே. மன்றம் மறுத்திருந்தா இப்பிடியொரு கல்வி நிலையமே ஊரில உருவாகியிருக்காது. எந்தவொரு கேள்வியும் கேட்காமல், கணக்கும் பாக்கமல் ரண்டு வரிசத்துக்கு மேல இதை இயங்க விட்டதின்ர பலன இப்ப அதின்ர இயக்குனர் வட்டியோட சேர்த்து செய்யிறார்.

  • suluththaan:

   ஊரிலுள்ளவர்களுக்கு இது புதுக் கதையல்ல .அவர்களுக்கு இது பழங்கதை .வெளியில் இருக்கும் எம்மவரையே ஏமாற்றலாம் .ஆனால் நாங்களும் ஊரை முற்றாகத் துறக்க விலை ராஜன் .எந்த நேரமும் ஊர்த் தொடர்புடனேயே இருக்கிறோம் .அதனால் புத்க்கதை விடுவது நீர் என்பதும் தெரியும் .நீர் கூறும் அந்த மன்ற ஊழியரை உள்ளே தள்ள வேண்டாம் என முறைப்பாட்டுக்கார மைத்துனரே கேட்டுக் கொண்டதாகவும் அதன் பிரகாரம் அவர் மன்னிப்புக் கேட்டே கடும் எச்சரிக்கையுடன் விட்டதாகவும் நான் அறிகிறேன் .அப்படியிருக்க நீர் ஒரு புதுக் கதை விடுவது உமது நேர்மையை விளக்குகிறது .இது போலவே அங்கு நடக்கும் எல்லா விடையங்களும் .

   “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் “

 • nalavan:

  சுறா தலைமையில் அதிரடி சன்பவங்களை எதிர் பாருங்கள்
  பணிபுல மக்கலேய் விரைவில்

 • kaaththaan:

  எழு என்றால் …………………………..

  ஒன்றென்றால் அது ஏகனான இறைவன் .
  இரண்டென்றால் அது சிவமும் சக்தியும் .
  மூன்றேன்றால் பிரமா விஸ்ணு உருத்திரன் .
  நாலு என்றால் அப்பர் ,சம்மந்தர் ,சுந்தரர் ,மணிவாசகர் .
  ஐந்தேன்றால் பஞ்ச பாண்டவர் .
  ஆறு என்றால் கார்த்திகைப் பெண்கள் அறுவர் .
  எழு என்றால் அது எம்மூர் சர்வாதிகாரிகள் .

 • oruvan:

  நேரம் போகவில்லை எனில் (வேலை வெட்டி இல்லாதோர்) மறுமலர்ச்சி மன்றத்தை
  குறை சொல்லிக்கொண்டே இருங்கள் .அப்போதுதான் மன்றமும் சரியான பாதையை
  நோக்கிச் செல்லும் .இது மன்றத்துக்கு நீங்கள் செய்யும் பேர் உதவி.தயவு செய்து நிறுத்தாதீர்கள்.
  தொடருங்கள் உங்கள் பணியை…கீரைக் கடைக்கும் எதிர் கடை தேவை . அப்போது தான் எமக்கு நல்லது .

  • vadivelan:

   எழு பேரின் சொந்த நிலம் பனிப்புலம் மக்களுக்காக கந்தையா வாத்தியார் அன்பளிப்புச் செய்ததாக அறுமுக வித்தியாசாலை விளையாட்டுப் போட்டியில் பேசிய ஆசிரியர் குனத்திலகம் கூறினாரே .இது உண்மையா ?

   • oruvan:

    இதைப் பேசிய ஆசிரியர் குணத்திலகத்திடம் தான் கேட்கவேண்டும் என்று நான் கூறுகிறேன்.
    நீங்கள் அவரிடம் போய் கேளுங்கள்…

   • kunathilagam santhai:

    அந்த நிலம் ஏழு பேருக்குச் சொந்தமோ நான் அறியேன் .நான் எம் ஊரின் மறைந்த தர்மவான் களான செட்டியார்களின் அன்பளிப்பையே நினைவு கூர்ந்தேன் .வெற்றி மடம் மட்டுமல்ல எமது ஊரில் சைவத்தையும் தமிழையும் சாக விடாது பாதுகாத்துக் கொண்டிருக்கும் பாட சாலைகள் அனைத்தும் செட்டியார்களினாலேயே உருவாக்கப் பட்டவை எனக் கூறினேன் .அப்போது வெற்றிமடம் பெருநிலப் பரப்பையும் அமரர் கந்தையா வாத்தியார் (இது அண்மையில் நடந்தது அனைவரும் அறிவர் ) வெற்றி வேலவனுக்கு விளக்கு வைக்கவும் அந்த நிலத்தை பனிப்புலம் மக்கள் பொது நிலமாக உபயோகிக்க்கவுமென தர்மமாக எழுதிக் கொடுத்ததாகவும் நான் அறிந்ததைக் கூறினேன் .இது நான் மட்டும் கூறவில்லை .எம் ஊரிலுள்ள அனைவருக்கும் தெரியும் .நான் எம்மூருக்கு சேவை செய்த செட்டியார்களை நினைவூட்டும் போதே இதைக் கூறினேன் அவ்வளவுதான் என்னால் கூறமுடியும் .

    • nee:

     நீங்கள் சொன்ன பனிப்புலம் என்றது கொஞ்ச இடம் தான்
     நீங்கள் எப்படி சொளுவிங்கள் கலயடியையும் பனிப்புலம் என்று

     • KUNATHTHILAKAM:

      தம்பி ,பச்சையாகச் சொன்னால் பண்டாரங்கள் என்ற ஒரு சாதி வாழும் இடமே பனிப்புலம் .பணி+புலம் =பணிப்புலம் அதாவது பணி செய்கின்றவர்கள் வாழும் புலமே பணிப்புலம் .ஆலையங்களில் பணி செய்பவர்களே பண்டாரங்கள் .அவர்கள் வாழும் புலமே பணிப்புலம் .இந்தப் பணிப்புலம் விசாலமான ஒரு பெருநிலம் .அதில் ஒரு பகுதியே காலையடி .இன்னும் காலையடி என்பது பணிப்புலம் காலையடி என்றே அழைக்கப் படுகிறது .இது பணிப்புலம் கிராம சேவகர் என ஒரு பிரிவில் அடங்கும் இடமாகும் .
      தயவு செய்து பணிப்புலத்தைப் பிரிக்காதீர்கள் .நாம் அனைவரும் ஒரே இனம் .

     • nee:

      விலாசம் போடும் போது காலையடி பண்டதெருப்பு என்று தான் போடுகுரம்
      எண்கள் படசளையும் பண்ணாகம் வடக்கு என்று தான் இருக்குது
      பணிபுலதர்க்கு விருப்பம் என்றால் நீங்கள் எப்படி காலையடி உங்களோடு செர்ப்பின்கள்

     • KUNATHTHILAKAM:

      தம்பி நீ ,நீர் கூறும் விலாசம் சரிதான் .அது தபால்க் கந்தோர் பகுதி .பண்ணாகம் வடக்கு அ.மி .த.க என்பதும் சரிதான் .அதற்காக எமது கிராமம் பண்ணாகம் என்று கூற முடியுமா ?பல வருடங்களுக்கு முன் ஆரம்பமான இப் பாடசாலை பண்ணாகம் என்ற ஒரு கல்விப் பிரிவுக்குள் அடங்கியுள்ளதால் அப்போது வந்த பெயரே இது .

      பனிப்புலம் என்பது காலையடி ,காலையடி தெற்கு ,செருக்கப் புலம் ,குஞ்சன் கலட்டி ,காடேறி கோயிலடி (சுழிபுரம் வடக்கு )கலட்டி ,சாந்தை ,செட்டி குறிச்சி ,சாத்தா ஓலை (சிவன்கோயிலடி )ஆகிய குரிச்சிகளை அடக்கி உள்ள ஒரு இடமாகும் .இத்தனை இடங்களிலும் வாழ்பவர் எம்மவர் சமூகமாகும் .

     • nee:

      அப்ப ஏன் குஞ்சம் கலட்டி ஆக்களை பிரித்து வைத்து இருகுரின்கள்
      அவங்களும் மனிசர் தானேய் கசபட்டவன் என்றால் சதி குரவு என்று ஒதிக்கி வைபுன்களோ

     • vadivelan:

      மதிப்புக்குரிய நீ அவர்களே ,உங்கள் கண்டுபிடிப்பு பாராட்ட வண்டியது.இங்கு ஆசிரியர் பனிப்புலம் ஒரு குடையின்கீழ் என்னும் கருத்தையே கூறியுள்ளதாகத் தெரிகிறது .சும்மா விதண்டாவாதம் செய்யாது கருத்தை ஒழுங்காக எழுதலாம் .குஞ்சன் கலட்டியையும் அடக்கித்தானே உள்ளது .பிறகேன் பிரிச்சுப் பார்க்கிறீர் ?எப்படியும் சாதி அமைப்பென்ற பாரம்பரியத்தை யாரும் கைவிட்டதாக இல்லை .அது அவர்களின் சொந்த விருப்பம் .அதை என் இங்கு கொண்டுவது குப்பையைக் கிளறுகிறாய் .இங்கு பல சாதியினரும் வாழ்ந்தாலும் அனைவரும் பணிப்புலத்தைச் சேர்ந்தவர்களே .

      இன்று வெளியில் நீ எங்கே இருக்கிறாய் என்றால் பனிப்புலம் என்றால் யாரைக் குறிக்கிறது என உன்னால் கூற முடியுமா ?பனிப்புலத்தில் எங்கே என்றால் செட்டிகுறிச்சி ,குன்சங்கலட்டி ,செருக்கப்புலம் என்று கூறினால் அவர்கள் உங்களை யாரென்று ஓரளவு அறிந்து கொள்வார்கள் .எனவே பனிப்புலம் என்பதைப் பிரித்துப் பார்க்காதீர்கள் .சமூகங்கள் பிரிந்துள்ளதே பழிய பனிப்புலம் பனிப்புலம் தான் .

     • nee:

      வடிவேலன் அவர்கலெய் சாந்தயான் வந்து தான் கலயடியையும்
      பிரிச்சு கொண்டு பொய் இருக்குறான் நீங்களும் கலயடிய பிரிக்க போறிங்களா
      நீங்கள் நீங்கலாக இருங்கள் அப்புறம் எல்லாம் ஒலிங்க நடக்கும்

     • nee:

      பண்ட தெருபில் இருந்து கொண்டு காலையடி எங்கு இருக்குது
      என்று கேட்டால் சொளுவங்கள்
      அது சரி உங்களால் சாதிய விட்டு கொடுக்க முடியவில்லை என்றால்
      நாங்கள எப்படி காலயடியை விட்டு கொடுப்போம்
      நீங்கள் கருணா மாதிரி சேந்து இருந்திட்டு உங்கட தேவைக்கு போல
      எல்லாத்தயும் மாத்துவிங்கள் நாங்கள் அதை பார்த்து கொண்டு இருக்க வேண்டும்

     • naan:

      இப்பவும் நீ சந்தை பாநிபுலம் காலடி எண்டு பிரிசே பாக்குறை .சந்தாயன் வந்து எண்டு ஆரை சொல்லுகிறாய் .நீ எங்கட ஆளையே சந்தயன் எண்டு சொல்லுகிறாய் .நீ உம்மையில் சாதிக் கலப்பை விருபுரீயா .உப்பிடி நின்டாகள் கனபேர் .

    • kunathilagam santhai:

     தம்பி ,மன்னிக்கவும் நான் பனிப்புலம் எங்கள் ஊர் என்ற நோக்கில் ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவே கூறினேன் .நீரோ தேவையற்ற விதத்தில் ஏதேதோ எல்லாம் கூறுகிறீர் .நான் சாதி பற்றி எதுவும் கூற வரவில்லை .சாதி ஒவ் வொருவருடைய விருப்பு வெறுப்புகள் .எனவே தயவு செய்து அது பற்றி நீங்கள் உங்கள் விருப்பப்படி நடவுங்கள் .அதற்க்கு நான் எதுவித கருத்தும் கூற வரவில்லை .ஆனால் நான் மிக நிதானத்துடன் கூறும் கருத்தை கொச்சைப் படுத்தாது இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .

 • ராசன்:

  பகீரதன் என்ட பொய்ப்பெயரில் ஆரோ ஒருதன் ஏழு பேர் ஏழரை என்டு கிளப்பிவிட்ட புரளியும் அதுக்குப் பின்னாலேயே இழுபடும் முட்டாள் கூட்டமும். பகியோட கதைச்ச பிறகல்லோ உண்மை தெரிஞ்சிது

  • thaasu:

   அ. பகீரதன்:
   January 8, 2016 at 4:28 pm
   பாடசாலைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் பாடசாலைகளில் முதலாம் ஆண்டில் கல்விகற்பதற்கு மாணவர்கள் இன்றி முதலாம் வகுப்பறை அழுதுகொண்டு இருக்கின்றது. பண்ணாகம் வடக்கு அ மி த க பாடசாலையில் மூன்றேமூன்று மாணவர்கள் தான் இதுவரை சேர்ந்துள்ளார்கள். சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயத்திலும் மூன்று மாணவர்களுக்கு மேல் சேர்ந்ததாக நான் அறியவில்லை. ஆனால் சாந்தை சிற்றம்பல வித்தியாசாலையில் 15 மாணவர்கள் வரை சேர்ந்திருக்கின்றார்கள். மாணவர்கள் அயலிலுள்ள பாடசாலைகளில் தான் கல்விகற்கவேண்டும். ஆசிரியர்களோ மாணவர்களோ இதுபற்றி சிந்திப்பதில்லை. தனவந்தர்கள் தங்கள் பிள்ளைகளை உயர் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு முன்னிற்கின்றார்கள். பிரத்தியேக வகுப்புகள் அந்ததந்த பாடசாலைகளில் அந்தந்த ஆசிரியர்களாலேயே நடாத்தப்படவேண்டுமே தவிர பிறரால் அல்ல. மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு அதற்கேற்றமுறையில் கற்பிக்கவேண்டும். அதைவிடுத்து கட்டிடங்கள் கட்டிகொண்டிருந்து பிரயோசனமில்லை. முதலில் நாலு மூன்று பிள்ளைகளை பெறும் வழிகளைப் பார்த்தால் எதிர்காலத்திலாவது பாடசாலைகளில் மாணவர்கள் சேருவார்கள்.

   இது யார் கருத்து ?முழுப் பூசிநிக்காயச் சோற்றில் புதைக்கும் ராசாவே நீ ராசாவோ மந்திரியோ நானறியேன் .ஆனால் நீ யாரென்பதை நான் நன்கறிவேன் .இப்படியான புரட்டுக் காரர்களிடம்தான் மன்றம் நம்பிக்கைச் சொத்தா ?

 • பாஸ்கரன்:

  தம்பி ராசன்:
  பகி அண்ணையின் பெரும் உண்மை அவருடைய கொள்கைகளும் , அவருடையது தான்,இதிலை கருத்துக்கள் எழுதுகின்றவர்களின் கருத்தை பார்த்தல், எதோ சொத்துக்களில் நாங்கள் பங்கு கேக்கிற மாதிரி அல்லோ எழுதுறாங்கள் , நம் ஊர் இளைஞர்களின் கவனத்திற்கு , அந்த நல்ல மனம் படைத்த அந்த கடவுள் தான் நம்ம ஊர் தெய்வம் அன்ரி, எந்த நோக்கோடு அந்த வளவை கொடுத்தவோ அதன்படி செயல்பட்டால் நாங்கள் ஏன் கதைக்க போறோம் ,செயல்படாததாலை தான் அதை தட்டி கேட்கிறோம். , நம்ம ஊரிலை என்ன தப்பு நடந்தாலும் கேட்போம் , கேட்டுக்கொண்டே இருப்போம் , !

 • nalavan:

  ஒரு பிரச்னையும் அங்க நடக்க வில்லையா

 • suluththaan:

  அது எழு பேர் சொத்து ஆனபடியால் அங்கை எந்தப் பிரச்சனையும் வராது .

 • Unmai:

  உண்மை
  ஊரிலெ உறவுகள் வளவு வேண்டி சிரமதானம் செய்வாய் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அனால் வவல்வு வேண்டும் இடம் அங்கெ சென்று படிக்கும் இளம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு நிறைந்ததா.. அயலவர்கள் இடையூறு தராமல் இருப்பார்களா. அப்படி இடையூரு நடக்கும் போது அதில் இருந்து பிள்ளைகளை பாது காத்து கொள்வதற்கு போதுமான வசதிகள் உள்ளதா.. என்னவோ உரில் உள்ளவர்களுக்கு தான் அவர்களின் நிலைமை தெரியும், ஆகவே ஆலோசித்து வேண்டவும்.
  மற்றும்படி உங்களின் முயற்சி வெற்றி அளிக்க வாழ்த்துக்கள்..
  உண்மை

 • kalaijadiaan:

  மன்றத்திலை இருவர்களுடைய காப்புறுதி காசு கிடைக்கப்பெற்று இரண்டு கட்டிடத்தை கட்டி அவகளுடய பெயர்களை எழிதினீர்கள் அதை நாங்கள் ஏற்றுகொள்ளுகின்றோம். அது என்ன மன்ற வாசல்படியே தெரியாத ஒருவருடய பெயரை எழிதியுள்ளீர்கள். அவருடய மகன் காசு கொடுத்தபடியால் எழிதியுள்ளீர்கள் என்றால் காசு கொடுத்த அங்கத்தவர்கள் அனைவருடய தகப்பன்மாருடய பெயர்களையும் எழுதவேண்டியது தானே.

  • ORUVAN:

   அன்புள்ள காலையடியான் …
   தாங்கள் எங்கு இருக்கின்றீர்கள்? எதையும் சரியாக அறியாமல் கருத்தை எழுதாதீர்கள்.
   அப்படி எழுதினால் அது தங்களின் அறியாமையை அடுத்தவருக்கு எடுத்துக்காட்டும்.சுருங்கச்
   சொன்னால் எமது பல்லை குத்தி மற்றவனுக்கு மணக்க கொடுப்பதர்க்கு சமனானது .மன்றம்
   கட்ட ஆரம்பித்தபோது மன்றநிர்வாகத்தால் ஓர் வேண்டுகோள் விடப்பட்டது .அந்த வேண்டுகோள் யாதெனில்- யாராவது விரும்பினால் தங்கள் குடும்ப உறவுகள் நினைவாக
   ஏதாவது ஒன்றை பொறுப்பு எடுத்து அவர்களின் பெயரில் கட்டித்தரலாம் என்பதாகும்.
   அந்த வகையில் அமரர்களான சிவராமச்சந்திரன்.கனகசபை போன்றோர்களின் பெயர்கள்
   அங்கே எழுதப்பட்டுள்ளது. தாங்களும் விரும்பினால் தங்கள் குடும்ப உறவுகள் நினைவாக
   ஏதாவது செய்யலாம் …

 • Samuka nalan virumpi:

  எல்லோரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன்.தயவு செய்து இந்த மன்ற வாயிலில் கந்தையாவிட்கோ அல்லது அன்ரி அவர்களுக்கோ ஒரு சிலை எழுப்புவதற்கு ஆவன செய்யுமாறு மன்றநிர்வாகிகளை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

 • kalaiyadian:

  சமூகநலன்விரும்பி அவர்களுடை ஐடியா ஒரு நல்ல விடயம் வளவு கொடுத்தவர்களை விட்டுவிட்டு ஒருவன்அவர்களே ! நீங்கள் ஏன் தம்பையா வாத்தியை விட்டுவிட்டீர்கள் மறந்து விட்டீர்களா அல்லது மறைத்துவிட்டீகளா குற்றமுள்ளநெஞ்சு குறுகறக்கின்றதா நீங்கள் சொன்னமாதிரி ஞாபகமண்டபகளை அந்த வளவுக்கை எல்லாரும் கட்டவெளிகிட்டா மறுமலர்ச்சிமன்றம் என்ற பெயரை மாற்றி வேறு பெயர் வைக்கவேண்டிவரும்.

 • varnan:

  எங்கடை இடைக்கால சுடலை உப்பிடித்தான் இடுகாடாக இப்ப இருக்கிறது .விருத்தாசல வாத்தியாருக்கு நினைவு சமாதி கட்டியதும் எல்லோரும் கட்டி இப்ப எரிக்கிற இடம் மட்டுமே மிச்சம் .

  அதுபோல வெற்றி மடமும் ஒரு இடுகாடாக மாறுவதில் என்ன குறை ,

 • Aandavan:

  தம்பி சமூகநலன்விரும்பி காலையடியான் இருவருடைய ஆலோசனையின்படி வளவு கொடுத்தவரின் படத்தை முன்னுக்கு வைக்கலாம் ஆனால் கனடாவில் உள்ள மும்மூர்த்திகள் அருள் கொடுத்தால் தான் மன்றநிர்வாகம் முடிவெடுக்கும்.சுவிச்சு அங்கே தான் உள்ளது. மும்மூர்த்திகள் இப்ப நான்கு தெய்வமாக மாறியிருப்பதாக கேள்வி எனவே கனடாவில் உள்ள அந்த நான்கு தெய்வங்களும் முடிவெடுக்கவேண்டும்.பின்னர் தான் ஊரிலை மன்றம் முடிவு எடுக்கமுடியும்.
  இப்படிக்கு,
  ஆண்டவன்

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.