உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருத்துக் களம் -82

12729149_892437084207528_8022134334330586455_n

891..views

  • kannu:

    இன்றைய காளத்தில் தண்ணி அடிக்கிறது சந்தோசமாய் இருந்தாலும் தண்ணி அடிப்போம் சோகமாய் இருந்தாலும் தண்ணி அடிப்போம் , இப்போ நம்மட தமிழ் பொண்ணுகளே தண்ணி அடிக்க துவங்கி விட்டலவை ,இது புது உலகம் குடியும் குடித்தனமயும் இருப்பது குடும்பத்துக்கு நல்லது ,எல்லோரும் குடியுங்கோ

  • mohan:

    ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவன் குடித்து சீரளிகிறான் என்றால் அவன் தன்னைத் தானே
    புரிந்துகொள்ளவில்லை அதாவது (வாழ்க்கை என்னும் பாடத்தை சரியாக அறியவில்லை)இதை விடுத்து குடிப்பவர் குடிப்பதற்கு ஒரு போலியான காரனம் தான் மேல் குறிப்பிட்டவை என்பது என் தாழ்மையான கருத்து . உன்னையே நீ அறிவாய் … உன்னையே நீ அறிவாய் …

    • ponnammaa:

      மோகன் சும்மா சூப்பரா தன்ரை கருத்தை சொல்லியிருக்கிறார் .

  • ponnammaa:

    அப்ப ஆம்பிளையள் குடிக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு எண்டு சொல்ல வாறியள்.அதுக்கும் பொம்பிளையல் தான் காரணமாய் இருக்கும்.ஏனென்டால் ஆம்பிளையள் அப்பாவியள் கண்டியளோ ?

    • nakkeeran:

      ஆண்கள் குடித்து அழிவதற்குக் காரணம் அவர்களின் உழைப்பு என்றே கூறலாம் .நான் உழைக்கிறேன் நான் குடிக்கிறேன் என்பார்கள் ,மை கார் மை ரோட் மை பெட்ரோல் என்பார்கள் ,என்னுடைய பணத்தில்தான் குடிக்கிறேன் உன்னுடைய பணமல்ல என்பார்கள் .எனவே அவர்களின் மிஞ்சிய உழைப்பே அவர்களை அழிக்கிறது என்பது என்கருத்து .

      • ravi:

        நக்கீரனின் கருத்துப்படி உழைக்கிறவன் எல்லோரும் அல்லவா குடிக்க வேண்டும் .அப்படி நடைமுறையில் இல்லை .ஒரு சில உழைக்கிற வர்கத்தினர் உடம்பு நோவுக்காக ஒரு பெக் மருந்து எடுக்கின்றனர்.அதுவும் மருந்து என்ற பெயரில் .சிலர் அடுத்தவன் குடிக்கிறான் நானும் குடிப்போம் என நினைத்து குடிக்கிறான். இன்றைய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மினி பார்வைத்து குடியை கொடுத்து குடும்பத்துக்குள் குழப்பத்தை உண்டாக்கி மகிழ்கிறார்கள்.இதைக்கேட்டால் நீங்கள் வேறு பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு போறது
        இல்லையா என கேள்வி கேட்கிறார்கள்.இதனால் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு போவ
        தற்கு குடும்ப பெண்கள் தயங்குகிறார்கள் .இதை யாரிடம் சொல்ல .அதாவது அடுத்தவன்
        செய்கிறான் நாமும் செய்வோம் என்று எண்ணுகிறானே தவிர அதன் சாதக பாதங்களை சிந்திக்க தவறுகிறான் .குடிப்பது நம்மவர் மத்தியில் ஒரு பாசன் ஆகிவிட்டது.எனவே மோகன்
        கருத்தே என் கருத்தும் .

  • ,குமார்ன:

    குடிபழக்கம் உடலுக்கு குடும்பத்துக்கும் நல்லது எல்லோரும் குடியுங்கோ

  • குடிகார சங்கத்தின்
    உறுப்பினர் ஒருவர்
    தன் நண்பர்களுக்கு
    விருந்து வைக்க இரவு
    தன்னுடைய வீட்டில்
    இருந்த ஆட்டை திருடி
    சென்று,சமைத்து தின்று,
    காலையில் வீட்டிற்கு
    போக அங்கு ஆடு நின்று
    கொண்டு இருந்தது.
    இவனால் நம்ப
    முடியவே இல்லை
    தன் மனைவியிடம் ஆடு
    எப்படி வந்தது? என்று
    கேட்டான்
    இருக்குற ஆட்ட ஏன்
    கேக்குறீங்க.
    ராத்திரியிலே
    இருந்து நாய காணாம்
    அத தேடுங்க முதல்ல என்றாள்.

  • sainkeetha:

    யாவும் சிறிது காரணம் தான் .வாழ்க்கைகு உகந்த வருமானம் கொள் .பாசமுள்ள துணையாளை பெறு.உண்மையான நட்பை பெறு.இவை இருந்தால் உன் வாழ்வு சிறக்கும்.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

  • ஊர் நலன் விரும்பி:

    இங்கே குறிப்பிட்ட காரணங்களும் ஓரளவுக்கு உண்மை என ஏற்றுக்கொண்டாலும் ,இவை எல்லாவறையும் விட தான் எதை செய்தாலும் செய்யலாம் ,யாரும் கேட்க முடியாது,என எண்ணும் ஆண்களின் சுயநலம் தான் இதற்கு முதற் காரணம் .இந்த ஆண்களின் குடியால் அழிந்து போன குடும்பங்கள் எத்தனை என்று எங்க ஊரை எடுத்துக் கொண்டாலே எல்லோருக்கும் நன்றாகப் புரியும்.குடும்பத்தையோ பிள்ளைகளையோ பொருட்படுத்தாமல் தான் மட்டும் எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும் என நினைக்கும் ஆணாதிக்க சமூகமே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் .

    • அளவுக்கதிகமாக ஆசைப்பட்டவனும் அளவுக்கதிகமாக கோபப்பட்டவளும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.இது என்னோட டயலாக் இல்லை ரஜனியோடது.ஆனால் உண்மை.

    • nakkeeran:

      உண்மையில் நீர் ஊர் நலன் விரும்பியே !

  • சி.சிவானந்தம்:

    இந்தத் கருத்துக்களத்துக்கான தலைப்பானது அகில உலகத்திலும் வாழ்கின்ற மனித குலத்துக்கும் பொருத்தமான,பொதுவானதொரு தலைப்பாகும்.
    எனவே இங்கு கருத்துக்களை எழுதுபவர்கள் எமது ஊர் மக்களை சுட்டி கருத்துக்களை வழங்குவது ஏற்புடையதல்ல.

    மேற்படி தலைப்புக்கு சிந்திப்பவனால் கூறப்பட்டிருக்கும் காரணங்கள் முற்காலத்தவையாகும் ஆனால் தற்காலத்தில் மங்கள விழா முதல்,மரண வீட்டு கடமைகள் வரை மது விருந்து முக்கியத்துவம் மிக்க விருந்தாகி விட்டது. மத அநுஷ்டானங்களுடன் கூடிய திருமண விழாவாயினும் சரி,மழலைகளின் பிறந்த நாள் விழாவாயினும் சரி, மங்கையரின் பூப்புனித நீராட்டு விழாவாயினும் சரி, மது விருந்தும்,மாமிச விருந்தும் முதல் விருந்தாகிவிட்டது. இதற்கும் மேலாக வீடுகளில் நடைபெறும் குடும்ப விழாவாயினும்சரி,குடும்ப விருந்தாயினும் சரி அவ்விடத்தில் இருக்கும் தத்தம் பிள்ளைகள் முன்னால் அப்பாக்கள் மதுவுண்டு மகிழ்வது மதுப் பழக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். பெற்றோர்களிடையே காணப்படும் மதுப்பழக்கமும்,புகை பிடிக்கும் பழக்கமும் சுமார் 48% பிள்ளைகளைப் பாதிக்கிறதென்றும், கற்பிணித் தாய்மார்களின் வயிற்றில் வளரும் சிசுவையும் பாதிக்கின்றது என்றும் ஆய்வுகள் பல கூறுகின்றன.எனவே இந்த நிலைகள் மதுப் பழக்கம் அதிகர்ப்பதற்கும், பல பேர் மதுவிற்கு அடிமையாகவும் தூண்டுகோலாக அமையும்.இதற்குமேலாக இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் அதிகளவில் மதுவுக்கு அடிமைகளாகி வருவது எதிர்காலத்தில் குடும்ப வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சொல்லாமலே அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

    இவற்றிற்கு மேலாக சிந்திப்பவனின் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, ஒரு மனிதனுக்கு அதிகளவு மதுப் பழக்கம் இருக்கிதெனில் அதற்கான முதற்காரணம் அவர் பல்வேறு காரணங்களால் அதிகப்படியான மன‍வழுத்தங்களுக்கு ஆளாகுதல், பரம்பரை வழி வருதல், சமுதாயச் சூழல் முதலியனவற்றையும் குறிப்பிடலாம்.

    மதுவை மறப்போம்! மகிழ்ச்சியாய் வாழ்வோம்!
    மழலைகள் வாழ்வினை மலர வைப்போம்!
    குடும்ப உறவுகளில் குதூகலிப்போம்!

    வாழ்க! வளமுடன்!

    நன்றி!

  • அகிலன்:

    அழிவுக்கு காரணம் :நண்பர்களின் தூண்டல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.