உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருத்துக்களம் .83

12814202_896257583825478_6975089526247033108_n

794..views

 • இந்தக் கேள்விக்கு உரிய பதிலை சின்னப் பிள்ளை ஒன்றைக் கூப்பிட்டு கேட்டாலும் கூட சொல்லும். புலி வர்க்கம் ஒழியவேண்டும்.என்று வெற்று கோஷங்கள்.போட்ட இரட்டை வேஷதாரிகள்.கூட இன்று யார் இருக்கிறார்கள் எங்களுக்கு எங்கே எங்கள் .தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று கண்ணீர் வடித்து வருகின்றனர்.

 • பாஸ்கரன்:

  குற்றச்செயல்கள் பெருகி வருவதற்கோ , ,இல்லை பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கோ காரணம் என்னவென்பது எல்லோருக்குமே வெட்டவெளிச்சமாக தெரிந்ததொரு விடயம் தான் .ஒரு நல்ல தலைமையின்மை தான் காரணம் .
  எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது .
  ஒரு பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போனார்களாம் .அப்போ மாப்பிள்ளையின்
  பழக்கவழக்கங்களைப் பற்றி விசாரித்த போது எங்கள் பையன் ரொம்பத் தங்கமானவரு.அவருக்கு எந்தக் கெட்ட பழக்கங்களுமே கிடையாது என்று சொன்னாங்களாம் .அதற்கு ஒருவன் அப்போ அன்னைக்கு ஒரு கடையோரம் வெற்றிலை போட்டுக்கொண்டிருப்பதை பார்த்தேனே என மாப்பிளையிடம் கேட்க ,ஒ அதுவா அது எப்பவுமே வெற்றிலை போடமாட்டேன் ,எப்போவாவது சிகரெட் பிடிக்கும் போது மட்டும் வாய் மணக்காம போட்டுக்குவேன் என்றாராம் .அப்போ சிகரெட் பிடிக்கிற பழக்கம் உனக்கு இருக்கா என்று கேட்க அப்படி இல்லை ,எப்போவாவது 1,2 பெக் எடுத்தா சிகரெட் பிடிப்பேன் என்றாராம்.அது வேறயா என்றதற்கு பெரிதாக தண்ணி அடிக்கும் பழக்கம் கிடையாது ,எப்போவாவது பொண்ணுங்களை தேடி போனா கொஞ்சம் பயமில்லாம இருக்க தண்ணி கொஞ்சமா அடிப்பேன் என்று சொன்னாராம் .
  அப்படி தான் இருக்கு நம்ம நாட்டோட நிலைமை .கலாச்சாரமும் ,பண்பாடுகளும் கேள்விக்குறியாக்கப்பட்டு மக்களே மாக்களாக ஆகி விட்ட பின் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் சீரழிந்து போய்க்கொண்டிருக்கும் கேவலமான கலாச்சாரத்துக்கு இன்று நாம் சொந்தக்காரர்களாகிக் கொண்டிருக்கின்றோம் என்பதே வேதனை .

 • nakkeeran:

  அவனின்றி ஓர் அணுவும் அடங்காது !

  • vasanth:

   சரியாய் சொன்னிங்கள் தம்பி நக்கீரன் எங்கள் தேசத்தின் தலைவர் அண்ணன் பிரபாகரன் இருந்த காலங்களில் இப்படியான குற்றச்செயல்கள் நடந்த குறைவு என்று தான் சொல்லுவேன் காரணம், அவர் இருக்கும் பொது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தார் ,தண்டனைகள் அதிகம் ஆனால் தான் தவறுகள் திருத்தப்படும் ,, என்ற கொள்கைக்குள் நம்ம ஈழத்து மக்களை வைத்து இருந்தார் , இது தான் உண்மை ,,,

 • சி.சிவானந்தம்:

  இந்தத் தலைப்பானது தற்காலத்தில் அகில உலகத்துக்குமே பொருத்தமானதாகும். நமது நாட்டில் மட்டும் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிக்கவில்லை அகில உலகத்திலுமே அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் என்னவெனில், விஞ்ஞானம் என்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொடுத்ததோ அன்றுமுதல் ஆண்வர்க்கத்தினரால் பெண்கள் கவர்ச்சிப் பொருட்களாகவும், ஆண்களின் காமவெறிக்கான போதைப் பொருள்போல பல கோணங்களில் காட்சிப் பொருட்கள் போலவும், வியாபாரப் பொருட்கள் போலவும் பணத்தின் வலிமையால் வீட்டுத் தொலைக்காட்சிகளில் வலம் வரத்தொடங்கினர். எனினும் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கட்டுப்படுத்தும் தகைமைகளை அரசாங்கங்களும்,வீட்டுப் பெரியோர்களும் பெற்றிருந்தனர். ஆனால்,தற்காலத்தில் இணைய வலையும், தொடு திரைக் கைத்தொலைபேசிகளும் ஆண்கள்,பெண்கள், குழந்தைகள்,சிறுவர்,பெரியோர், முதியவர் என்ற வேறுபாடின்றி அனைவருடைய கரங்களிலும் இருந்து செய்கின்ற விந்தைகளை அனைவரும் அறிவர்.எனவே இவைதான் தற்கால பாலியல் துஸ்பிரயோகங்களுக்குக் காரணமாகும்.

  இந்த உலகையும்,மனிதன்,விலங்குகள்,பறவைகள், ஊர்வன,தாவரங்கள் என பலகோடிக் கணக்கான உயிர்களையும் படைத்த இறைவன் அனைத்திலும் ஆண்,பெண் என்ற வேறுபாட்டைக் கொடுத்துள்ளார். அத்துடன் அனைத்து உயிரினங்களுக்கும்,தாவரங்களுக்கும் இயற்கையின் காலநிலை மாற்றங்களுக்கேற்ப வாழக்கூடிய சக்தியையும் கொடுத்துள்ளார். ஆனால் மனிதருக்கு காலநிலை மாற்றங்களுக்கேற்ப வாழக்கூடிய சக்தியைக் கொடுக்கவில்லை. ஆதலால் மனிதருக்கு உறைவிடமும்,உடையும் தேவைப்பட்டது. இதன் விளைவே மனிதருக்கு பணத்தேவை ஏற்பட்டது. இதனாலேயே இறைவனால் வழங்கப்பட்ட பாலியல் வேறுபாட்டுணர்ச்சிகளைப் பணவேட்டைக்குப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
  எனவே கற்பென்னும் தகைமை பெற்ற பெண்கள் ஆண்வர்க்கத்தின் தவறான அடக்கு முறைகளுக்கும்,காமப் பசிக்கும் உள்ளாக்கப்பட்டு ஆதிகாலம் முதல் தற்காலம் வரை மனிதத்துவமற்ற கீழ்மைத்துவப் பிரசைகளாக்கப்பட்டதுவும் தற்கால பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது.

  இங்கு கருத்து வழங்கியவர்கள் கூறியதுபோல் தலைமைத்துவமின்மையைக் அதையே கருப்பொருளாகக் கருதி இணையத்தாரும் இந்த தலைப்பை வழங்கியுள்ளனர்போலும், ஆனால் தலைமைத்துவவின்மையைக் காரணமாக காட்டி கருத்து வழங்குவதற்கு தலைப்பும் பொருத்தமானதல்ல, இணையமும் பொருத்தமான ஊடகமல்ல. விளக்கம் தேவையற்றதென எண்ணுகிறேன்.

  நன்றி!

  சி.சிவானந்தம்.

  • vadivelan:

   அண்ணா நீங்கள் கூறுவன சரியே .மறுக்க முடியாது .ஆனால் விஞ்ஞானம் தொலைக்காட்சிகள் அன்றும (தமிழர் தலைவன் காலம் )இருந்தன .தலைவனின் கட்டுப்பாடே மக்களைக் கட்டிப் போட்டன .இதனால் பல சண்டியன் களின் விலாசமே இப்போது கிடையாது .ஆனால் இப்போ நல்லாட்சிக் காலத்தில் சில குரூப்புக்கள் முளை விட்டுள்ளதைக் காணமுடிகிறது .மின்கம்பத் தண்டனையே தமிழர் சமுதாயத்தை நல்ல நிலையில் வைத்திருந்தது .இன்று விளக்கமரியலும் இழுத்தடிப்பும் .இதுவே காரணம் என்பது என்கருத்து .

   • சி.சிவானந்தம்:

    தம்பி வடிவேலனே!
    தாங்கள் குறிப்பிடும் தலைவனின் காலகட்டத்தில் தாங்கள் கருதுமளவுக்கு இணைய வலையமைப்பபோ தொடுதிரைக் கைபேசிகளோ எல்லோர் கைகளுக்கும் வரவில்லை, யுத்தச் சூழல், மக்கள் மனநிலை,வாழ்க்கை நிலை முதலியன இன்றைய நிலைபோல் இருக்கவில்லை.தயவு செய்து யதார்த்தத்தை,சூழ்நிலைகளை உணர்ந்து கருத்துக்களை எழுதுங்கள்.போலிப் பெயர்களில் வந்து தாங்கள் எழுதும் கருத்துகள் பாதிப்புகள் பலவற்றை உருவாக்கும்.எனவே சிந்தித்து மக்களுக்கு நல்ல கருத்துகளை வழங்குங்கள். எமது அடுத்த சந்ததியினரையாவது நல்வழியில் நடாத்தக் கூடிய கருத்துகளை வழங்குங்கள்.

    நன்றி!

    • vadivelan:

     அண்ணா குறை நினையாதயுங்கோ .நான தலையில்லாத தவறென்றே கூறவந்தேன் .அக்காலத்தில் நடப்பதால் சொன்னேன் .

 • அகிலன்:

  பிரதான காரணம் ஊடகம்
  சினமா ..பாலியல் சம்மந்தமான விழுப்பு உணர்வு குறைவு (கல்வி இல்லை )

 • MANMATHAN:

  வசதி இல்லாதோர்க்குவன் புணர்வு !
  மேலதிகம் உடையோர்க்கு மென்புணர்வு!
  எல்லாம் அவரவர் தலை விதி .

 • mohan:

  பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிக்க காரணங்கள் ….
  1, விஞ்ஞான வளர்ச்சி
  2. பொருளாதார முன்னேற்றம்
  3.தாராளமான போதைப் பொருள் சுலபமாக கிடைப்பது
  4.பெற்றோரின் அறிவுரையை கேளாதாது( பெற்றோரை மதிக்காதது)
  5.பயம்மின்மை (எதையும் செய்யலாம் யார் கேட்பது )
  6.சட்டம் போட்டு தடுக்க வேண்டியவர்கள் உந்துகோலாக பின் இருத்தல்
  இவை தான் எமது தமிழ் பிரதேசங்களில் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிக்க காரணம்
  என்பது என் தாழ்மையான கருத்து .

  • vadivelan:

   உங்கள் ஆறாவது காரணத்துக்கு உரியவர்கள் இல்லாததே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் .

 • பாஸ்கரன்::

  மரண பயத்தை உருவாக்க வேணும் ,அப்போதான் நாட்டிலை நடக்கும் தவறுகளை தடுக்க முடியும் அந்த முறையை தான் எங்கள் தலைவனும் கடைபிடித்தார் அதனால் தான் அவர் இருந்த காலத்தில் குற்றங்கள் குறைவாக உள்ளது , ஒரு சின்னப்பிள்ளையை கேட்டலும் இதை தான் சொல்லும் ,என்னுடைய கருத்து ஒரு பெண்ணை கெடுத்து விட்டன் என்ற அவனை ஊரே சேர்ந்து அடித்துக் கொள்ளவேண்டும் , ஒருத்தன் செய்தல் அதுக்கு பெயர் கொலை ,ஒரு ஊரே சேர்ந்து செய்தல் அதுக்கு பெயர் கொலை இல்லை , அப்போதான் அடங்க்குவங்கள்

  • RAVI:

   மக்கள் முன்னிலையில் மரணதண்டனை கொடுக்கவேண்டும் .அப்போது தான் மரண பயம்
   ஏற்பட்டு குற்றங்கள் குறையும் .

 • kunathilagam santhai:

  இன்றைய இளையோரிடம் ஆன்மீக நாட்டம் வலுவாகக் குறைந்துள்ளதைக் காணமுடிகின்றது .புராணக் கதைகளைப் படிப்பது கேட்பது என்பவற்றில் ஈடுபாடு இல்லாததுடன் அவற்றில் நம்பிக்கையும் கொள்வதில்லை .ஆன்மீக ஈடுபாடு அற்றதால் அவர்களின் மனம் வைரம் கொள்வதுடன் பெற்றாரை ஆசிரியரை மதிக்காது விடுவது மட்டுமல்லாது அவர்களின் சொற்களையும் கேட்காது தம் மனம் போல் நடக்கின்றனர் .இதனால் அவர்கள் பாதை மாறிப் பயணிக்கின்றனர் .கடைசியில் பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் .எனவே பெற்றோர் பிள்ளைகளை ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களாக வளர்ப்பது முக்கியம் ,பெரும் பாலும் இளையோரே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடுவதால் அனைவரும் விழிப்புடன் இருந்தால் கூடிய அளவு குற்றச் செயல்களைக் கட்டுப் படுத்தலாம் இறைவனில் நம்பிக்கை உண்மையில் வைப்பவன் ஒருநாளும் இறைவனுக்கு ஏற்காத செயல்களில் ஈடுபடமாட்டான் .இறைவனை நம்புபவன் அன்பே சிவம் என்னும் கொள்கையில் நடக்க விரும்புவான் .இது என் கருத்து .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.