உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

தொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் ) Share

தொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் வாழ்ந்து வரும் கணவன்மார் மற்றும் தந்தையாரையும் இழந்து பிள்ளைகளுடன் தனிமையில் ,ஏழ்மையில் வசித்து வரும் சகோதரிகள் இருவருக்குமான வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முகமாக இவர்களுக்காக,

காலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது.

ஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, (மூர்த்தி ஒஸ்லோ)
கந்தசாமி அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் இந்த நேரத்தில் இணையத்தின் சார்பாக கோடானகோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.அவரின் மனம் போல் அவரின் குடும்பமும் வாழ்வில் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எல்லோரின் சார்பிலும் ஆண்டவனைப் பிரார்த்திக்கொள்ளுவோம்.

அடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ்பவன் என்றுமே ஆண்டவனால் கைவிடப்படுவதில்லை ,அந்த வகையில் இந்த ஏழைத் தாய்மார்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த எம் ஊர் மைந்தன் மூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுவோம்.

வெறும் பாராட்டுக்களால் அவருக்கு நமது மகிழ்ச்சியை தெரிவிக்காமல் அவரைப்பின்பற்றி நாமும் நம் வாழ்வில் மனிதநேயத்தை பின்பற்றுவோம். கண்ணுக்குத் தெரிந்த மனிதரை மதிக்கா விட்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை என்கிறார் அன்னை திரேசா,அந்த வழியில் நாமும் நன்றே சிந்தித்து வாழ்வில் மனிதத்தை போற்றுவோம் .

IMG_5950IMG_5892IMG_5943IMG_5942IMG_5891IMG_5892IMG_5893IMG_5896IMG_5898IMG_5899IMG_5905IMG_5906IMG_5907IMG_5910IMG_5911IMG_5912IMG_5913IMG_5914IMG_5915IMG_5916IMG_5919IMG_5918IMG_5917IMG_5920IMG_5921IMG_5922IMG_5923IMG_5924IMG_5925IMG_5926IMG_5927IMG_5928IMG_5931IMG_5932IMG_5933IMG_5934IMG_5935IMG_5936IMG_5937IMG_5938IMG_5939IMG_5940IMG_5901IMG_5902IMG_5904

 காலையடி உதவும் கரங்களூடாக 300000 லட்ஷம் நிதியை தாயகத்தில் இறுகுடும்பங்களுக்கு வழங்கிய, மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தினருக்கு

காலையடி இணையம் உதவும் கரங்கள் சார்பாக உங்கள் குடும்பத்தினருக்கு கோடி நன்றிகள் ,தம்பன்

 

3,922..views

 • நான் அவன் இல்லை:

  புலத்தில் இருந்து தாயாக உறவுகளை நோக்கி புறப்படட நம்ம ஊர்மைந்தன் கொடைவேந்தனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

 • ravinthiran:

  யார் இந்த நல்ல மனிசன் வாழ்த்துக்கள் இன்றைய காலத்தில் கோவில் குளங்களுக்கு என்று அள்ளிக்கொடுக்கிற மக்கள் மத்திஜில் இரண்டு விதவை குடும்பங்களின் வாழ்க்கைஜீல் விளக்கு ஏத்தி வைத்த அந்த தெய்வம் தான் எல்லோரும் .சாமியை தேடி கோவில் குளம் என்று அலைவங்கள் இந்தக்குடும்பங்களுக்கு சாமியே நீங்கள் தான் ஐயா ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றுபெரியவங்கள் சொல்லி இருக்கிறார்கள் . கடவுள் கண்ணுக்கு தெரியாது அதேபோல் நீங்களும் குடும்பத்தோடு நீரோடி வாழ்க என வாழ்த்துகிறேன்

 • Prathap Sri:

  இன்றைக்கு நீங்கள் செய்த உதவி என்றுமே மறக்க முடியாததொண்டு. இதுபோல் பலரால் செய்ய முடிந்தும் செய்யாமல் இருக்கிறாா்கள் எனவே இவரை போல் எல்லோரும் உதவிக்கரம் நீட்டுவோமாக. . . ௐௐௐ
  உதவிகரம் செய்த மூா்த்தி சித்தப்பா விற்கு கோடான கோடி நண்றிகள்.

 • vinothiny .:

  முதலில் மூர்த்தி அண்ணர் அவர்களுக்கும் ,அவர் தம் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் ,
  ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு ஒருநாளுக்கான மீனை வாங்கிக் கொடுப்பதை விட அவனின் வாழ்நாள் தேவை கருதி மீனைப் பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்த வழி.அந்த வகையில் வாழ்வாதாரத்தினை இழந்து வாழ்க்கைத் துணையையும் இழந்து வாழ வழி தெரியாமல் தவித்து நின்ற சகோதரிகளுக்கும் ,கண்பார்வையை இழந்த மற்றொரு சகோதரிக்கும் ஆதரவினை அளித்து அவர்களை வாழ வைத்த மூர்த்தி அண்ணர் அவர்களை வாழ்த்த வயதில்லை ,வணங்குகின்றேன் .தாங்களும் தங்கள் குடும்பமும் ஆரோக்கியத்துடனும் ,மகிழ்ச்சியுடனும் வையத்தில் வாழ்வாங்கு வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்..

 • navitha:

  வணக்கம்
  முள்ளிவாய்க்கால் முள்ளிவாய்க்கால் என்று சர்வதேசம் வரை சென்றுவிட்ட்து ஆனால் அந்த மண்ணில் அவலப்பட்ட மக்களின் துயரை யார் துடைத்தார் 17m திகதி விளக்கேற்ற செல்லும் அரசியல் வாதிகள் தன்னிலும் கவனமெடுக்கிறார்களா விளக்கேற்ற செல்வது எதோ பெரிய யுத்தகாலம் மாதிரி
  பிதற்றிக்கொள்வார்கள் ஆனால் அந்தமண்ணிற்க்கே சென்று வர்த்தக நிலையத்தையும் கட்டி பொருட்களை இட்டு வாழ்வில் ஒளியேற்றி சென்ற மனிதனை என்னவென்று சொல்ல இதனை தான் தேசியத்தலைவர் பிரபாகரன்
  அவர்கள் சொல்லைவிடவும் செயலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார் உண்மைதானே யாருக்கும் தெரியாத மனிதன் பணத்தை கொடுத்தார்
  கடைகளை திறந்து வைத்தார் அந்த குடும்பங்களின் வாலிவ்வில் ஒளியேற்றி வைத்தார் நிச்சயம் அவர் 100 ஆண்டுகாலம் வாழ வேண்டும் வாழ்க வாழ்க

 • GOPAL_T:

  பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
  நன்மை கடலின் பெரிது.
  என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது என்பது வள்ளுவன் வாக்கு .இந்த வள்ளுவரின் கூற்றுக்கு அமைய செயல் பட்ட (பண் தமிழ் கலை பண் பாட்டுக் கழக நோர்வே)
  உபதலைவர் கந்தசாமி கிருஷ்னமூர்த்தியை மனதார பாராட்டுகிறேன் .

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.