உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  காலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள் ) Share

   அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு குடும்பத்தின் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையால் எழுந்த கொள்கையின்படி ,உதவும் கரங்களை தொடர்பு கொண்ட ஒருவர் ,

  தன் எண்ணத்தை வெளிப்படுத்தி ,தன் பெயரை குறிப்பிடாமல் ஓர் ஏழை குடும்பத்திற்கு உதவ முன்வந்தார்.அந்த நல்ல மனிதருக்கு இந்த நேரத்திலே எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.அத்துடன் அவரின் இந்த செயல் மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் . அந்த வகையில் தன் கணவனை இழந்து பெரும் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்த இளம் விதவைத் தாய் ஒருவர் தன் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் ,தன் மகளின் கல்விக்காகவும் வேண்டி உதவும் கரங்களிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று ,

  இந்த இளம் குடும்பப் பெண்ணிற்கான உதவியினை (தன் பெயரை குறிப்பிட விரும்பாத )கருணை உள்ளம் கொண்ட ,இவரின் தாயாரின் ஞாபகார்த்த நன்கொடையில் இருந்து வழங்கினோம். அதன்படி இளம் விதவைத்தாயின் வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு ,மகள் பாடசாலைக்கு சென்று வருவதற்கான துவிச்சக்கரவண்டி ஒன்றினையும் , தாய் மிளகாய்த்தூள் தயாரித்து விற்பனை செய்ய தேவையான பொருட்களும் உதவும்கரங்கள் அமைப்பிரானால் வாங்கி வழங்கப்பட்டுள்ளது .

  இதன் மொத்த தொகை இலங்கை ரூபாயில் 53775 ஆகும்.

  இதே போன்று கடந்த காலங்களில் எம் இனம் அனுபவித்த இன்னல்கள் ஏராளம் ஏராளம் .எனவே அவர்களின் துன்பங்களை துடைத்தெறிந்து அவர்களும் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வழிகாட்டிடவேண்டிய பொறுப்பு நல்நிலையில் வாழும் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இந்த நிலைகளை கருத்திற் கொண்டே காலையடியின் உதவும் கரங்களும் செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் திரு திருமதி மூர்த்தி தம்பதிகள் இரண்டு குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை வழங்கி அந்தக் குடும்பங்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளனர்.

  அது போன்று இம்முறையும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் இந்த உதவியினை வழங்கியதன் மூலம் தன் கருணை உள்ளத்தை வெளிப்படுத்தி எம் உறவுகளின் வாழ்வு மேம்பட புதிய ஒளியை காட்டியிருக்கிறார். எல்லோர் மனங்களிலும் மாற்றம் ஏற்பட்டு எம் மக்களின் வாழ்வில் புதிய ஒளி பிறக்கட்டும். இந்த இளம் விதவைத்தாயின் வாழ்வில் ஒளியேற்றி இந்த உதவியினை வழங்கிய நபருக்கு ,காலையடி உதவும்கரங்களின் சார்பிலும் ,இக்குடும்பத்தின் சார்பிலும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம்.அத்துடன் அவரின் தாயாரின்ஆத்மா சாந்தி அடைய வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். கருணை உள்ளம் கொண்ட நீங்களும் ,உங்கள் குடும்பமும் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.உங்கள் கரங்களையும் இறுக பற்றிக் கொள்கின்றோம்.

  14976034_994142680731979_338903714_o 15033700_994143454065235_268537581_n 15033903_994142890731958_177546402_o 15033989_994142884065292_380283296_o 15034081_994142900731957_1052777399_o 15034136_994143114065269_1143192905_o 15034143_994143124065268_1706523139_o 15034266_994142670731980_1546903590_o 15034397_994142674065313_189791118_o 15044723_994143467398567_404030895_o 15050139_994143437398570_1322623716_n 15051919_994142907398623_1663170646_o 15053224_994143447398569_752193398_o 15053395_994143120731935_543147575_o 15060395_994143117398602_567834539_o 15064239_994143464065234_167963837_o

  4,058

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.