உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.

வணக்கம் உறவுகளே

காலையடி இணையம் ஆரம்பித்து இன்றுடன் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்து, ஏழாவது ஆண்டில் தனது பணியை ஆரம்பிக்கிறது .

ஆனாலும் இந்த ஆறாண்டு காலப்பயணம் என்பது சாதாரண பயணம் என்று சொல்ல முடியாத அளவிற்கு பல இடர்களை கடந்து இன்னல்களை சுமந்து சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல . நம் தாய் தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களைத் திறந்தவர்களின் குடும்பங்கள் , யுத்த காலத்தில் தம் அவயவங்களை இழந்தவர்கள் ,

 

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என பேரிடர்களை சந்தித்த எமது தொப்புள்க்கொடி உறவுகளைத் தேடித் தேடி ,தனது உதவிகளை வழங்கி வருகிறது காலையடி இணையத்தின் உதவும் கரங்கள் அமைப்பு . அந்த வகையில் இந்த உதவும் கரங்கள் அமைப்பினைத் தொடர்ந்து இயக்குவதற்கு ,அனைத்து விதமான உதவிகளையும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் எமது உறவுகளே வழங்கி வருகின்றார்கள்.அதிலும் குறிப்பாக எம் தாய் தேசத்தின் பன்னூர் மக்களே அதிக பங்களிப்பிணை வழங்கி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

 

அந்தவகையில் பலர் தாமே இணையத்தை தொடர்பு கொண்டு தமது பணத்தொகைகளை அன்பளிப்பு செய்வதன் மூலமும் ,வேறு சிலரோ , தம் உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நிதிஉதவி புரிந்தும்,நாம் மிகவும் சிரமங்களிற்கு மத்தியில் வாழ்ந்து வரும் குடும்பங்களை இனம்கண்டு ,உதவ முற்படும் போதெல்லாம் தாமே காலையடி இணையத்தின் உதவும் கரங்களைத் தொடர்பு கொண்டு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கியுள்ளார்கள்.இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் செய்யும் கொடைகளின் ஊடே ,இந்த உதவும் கரங்களின் செயற்பாடுகளை நடாத்தி செல்ல முடிகிறது.

 

பனி குளிர் பாராது பல இன்னல்களுக்கும், கஸ்ரங்களுக்கும் மத்தியில் உழைக்கும் பணங்களில் ,எம் மக்களின் தேவை கருதி வாரித்தரும் புலம்பெயர் மக்கள் அனைவருக்கும் ,காலையடி இணைய உதவும் கரங்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்வதுடன் ,தொடர்ந்தும் எம்முடன் கை கோர்த்து எமது மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் ,சிறுவர்களுக்கான கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் தோள் கொடுத்து நிற்குமாறும் கேட்டுக்கொள்கிறது . இருக்கின்ற போதே ஏழைகளிற்கு கொடுக்க முடியும் ,அப்படி கொடுக்காது போனால் நாமும் ஏழைகள் தான் என்பது இறை வாக்கு .

 

ஆனாலும் எம் உதவியை எதிர்பார்த்து நிற்கும் எம்மக்கள் ஏழைகள் அல்ல , மாறாக யுத்தத்தின் கொடுமையாலும்,இயற்கைப் பேரிடர்களினாலும் தம் சேமிப்புக்களையெல்லாம் இழந்து இன்று நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ளவர்களே! எங்கு சென்றாலும் தங்கள் உழைப்பிற்கு பின்னிற்பவர்கள் அல்ல எம் உறவுகள்!அவர்கள் மீண்டு எழுவதற்கான ஒரு வாய்ப்பினையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது.

உங்கள் உதவியுடன் காலையடி இணைய உதவும் கரங்களும் தன்னால் முடிந்த சில குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டியுள்ளது.எனவே ஆறாவது ஆண்டை நிறைவு செய்து ஏழாவது ஆண்டில் காலடி பதிக்கும் உங்கள் இணையம் தன்பணியை தொடர்ந்து செவ்வனே ஆற்றுவதற்கு காலையடி இணைய உதவும் கரங்களோடு கை கோர்த்து நிற்கும்படி கேட்டுக்கொள்கிறோம் ,உங்கள் ஆதரவிற்கு நன்றி.

நன்றி காலையடி இணைய உதவும் கரங்கள்

 

15967239_1037843003028613_1038440843_o

1,564..views

 • Pathmanathan:

  அருமையான செயற்பாடுகளை புரிந்து பல குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த எமது ஊர் இணையம் ,காலையடியின் உதவும் கரங்கள் அமைப்பு என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன்,.தொடர்ந்தும் உங்கள் சேவை தொய்வின்றி தொடரட்டும் என வாழ்த்திக் கொண்டு ,இந்த உதவும் கரங்களின் நிதியுதவிக்களுக்கு அப்பால் ,தாயகத்திலிருந்து செயற்பட்டு வரும் உறவுகளுக்கும் இந்த நேரத்திலே நன்றிகளை கூறி,இணைய நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்களை கூறி ,தொடர்ந்தும் இணையம் 2017 ஆம் ஆண்டில் தனது சேவையினை தொய்வின்றி தொடர வேண்டி வாழ்த்துகிறேன்.

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  இயந்திர வாழ்க்கையின்
  இயற்கை சுழற்ச்சியில்
  நொந்து நூலிழந்து போகும்
  மனிதர்கள் மத்தியில்

  தவித்து நிற்க்கும் மக்களுக்கு
  தனது உதவும்கரங்களை நீட்டும்
  உத்தமரே நீ வாழி….

  போரில் உறவிழந்தோர்
  போரினால் உருக்குலைந்தோர்
  புண்பட்ட மக்கள் கூட்டம்
  புகலிடம் இழந்தவர்கள்
  தன்னங்கம் இழந்தவர்கள்
  நஞ்சு ஊட்டப்பட்டவர்கள்
  நடுத்தெருவில் நின்றவர்கள்
  பற்றுக்கோடாய் நிற்பதற்காய்

  பக்குவமாய் உருவாக்கப்பட்ட உதவும்கரங்கள் வாழிய .. வாழியவே

  உதவும்கரங்கள் உறுப்பினர்கள்
  ஊர் ஊராகச் சென்று
  உருக்குலைந்த குடும்பங்களை இனங்கண்டு
  உதவுவதே நோக்கமாக கொண்டு …

  கல்வி கொடுத்து
  கல்விக்கோர் கூடம் கொடுத்து
  கல்வி கற்க சீரும் கொடுத்து
  சொந்தமென வீடும் கொடுத்து
  சோறுண்ண வேலை கொடுத்து
  தொழுவதற்கோர் கோயில் கொடுத்து
  தோத்திர நூலும் கொடுத்து
  தொண்டாற்றும் உதவும்கரங்களின் பணியை
  தொழுகின்றோம் கோடிமுறை

  வாழ்த்துவோர்
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம்
  (நோர்வே)

 • K.A.B.saanthai:

  எம்மவரில் துவங்கியதோ ஒன்று
  ,இரண்டு ,மூன்று , இணையம் ஆனால் எம் ஊரில் உள்ளவர்கள் அன்றாடம் மற்றும் புலத்தில் உள்ளவர்கள் அன்றாடம் எம் சொந்த ஊர் ,சொந்த நாட்டு செய்தி அனைத்தையும் பார்க்கும் ஒரே இணையம் எங்கள் காலையடி இணையத்துக்கு வாழ்த்துக்கள் உங்கள் உதவிடும் கரங்களுக்கும் ,காலையடி இணையத்துக்கு எனது 6 வது ஆண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .

 • இழப்பிரியன்:

  ??அன்புடையீர்!??
?குன்றா நலமும்
?குறையா வளமும்
?மங்கா புகழும்
?மாசிலா செல்வமும்
?அன்புடை சுற்றமும் 
?அறமறிந்த நட்பும்
?பொங்கலோடு பொங்கி
?பொங்கியது தங்கி
?தங்கியது பெருகி
?பெருகியது உதவி
?உதவியது உவகை பெருக்கி
?பெருகிய உவகை பொங்கி
?பொங்கியது நிலைத்து
?நீடூழி வாழ இறை வணங்கி
வாழ்த்துகிறோம் !
??பொங்கல் நல் வாழ்த்துக்கள். இழப்பிரியன்

 • அற்புதன்:

  ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும்
  ஏழை மனிதர்களை மனிதனாக மட்டும்
  பார்த்து மதிக்கின்ற மன நிலையை
  எமக்குள் விதைத்து விட்டவனே !
  உன்னில் உள்ளதடா உண்மை..!

  இருளிலே மூழ்கியிருக்கும்.ஏழையின்
  வாழ்வில் ஒளியூட்டி வெளிச்சத்தைக்
  ஒளியேற்றும் வெளிச்சத்தீயே.! நீர்
  எங்களின் கைத்தட்டலுக்குரியவனடா.!

  மாற்றுத்திறனாளிகளுக்கும்
  ஊனமுற்றோர்களுக்கும்.தீனி
  போடும் உமது அறிவியலை.
  இந்த வானும் மண்ணும் கூட
  வணங்காமல் இல்லையடா.!
  முகமறியா முகங்கள் கூட
  உரிமையுடன் உறவாடி.இல்லார்
  வாழ்வில் ஒளியேற்றும் உமது
  முகவரியை வாழ்த்துதடா.!

  ஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி
  துன்பம் துடைத்து ஒளியேற்றும்
  கருணை உள்ளம் கொண்ட உத்தமனே.!

  அற்புதமான உன் இணையத்தில் நான்
  காணும் காட்சியெல்லாம் அந்தக்
  கடவுளின் காட்சியடா .! வணங்குகிறேன்.

  ஏழாவது ஆண்டில் இருந்து உலகழவில்
  ஊற்றெடுக்க உயர்வான கடவுள்களை
  அண்ணாந்து வணங்குகிறேன்…..

 • பற்றாளன் ,நோர்வே:

  காலையில் எழும் சூரியன் போல்
  காலையில் ஒலிக்கும் ஆலய மணியின் ஓசையை போல்

  வருடாந்தம் வரும் முதல் தைதிருநாள் அன்று
  பிறந்த ஒளி, ஒலி காலையடி இணையம் பிறந்த நாள் இன்று

  பிறந்த தைதிருநாளில் நீங்கள் உதவும்கரங்கள் பெயர் சூட்டி எம் நாடு
  எம் இன மக்களுக்கு உங்கள் சேவை தொடரணும் ……

  இலங்கை தமிழர் வாழணும்
  வாழணும் ஏழை தமிழன்

  தமிழன் வாழ்வு சிறக்க உதவும்கரங்கள்
  கைகள் நீட்டி உங்கள் பணி தொடரணும்……

  காலையடி இணையஉதவும்கரங்கள்
  ஆறுடன் சேர்த்து +100 வருடம் உங்கள் சேவை தொடரணும்……

  நன்றியுடன்: காலையடி இணையஉதவும்கரங்கள் பற்றாளன் ,நோர்வே

 • Arun Lanka:

  கண் சிறகில் உன் முயற்சியை வை
  கருவிழியும் பார்க்கும் பாதையை அல்ல
  உன் இதயத்தின் துணிவை.. பிறந்த தைதிருநாளில் நீங்கள் உதவும்கரங்கள் பெயர் சூட்டி எம் நாடு
  எம் இன மக்களுக்கு உங்கள் சேவை தொடரணும் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.