உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,

இரண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி திருமதி புஷ்பராணி பாலசுப்பிரமணியம்.

மண்ணுலகில் :21,07.1950,  விண்ணுலகில்:23.01.2015

வாழ்வெனும் பொய்கையில் மலர்வாகி எதிர்நீச்சலின் பலத்தில் வாழ்வாகி

காணிக்கை மலராய் ஆனீர் அன்பின் அம்மா நினைவில் நீங்கள் என்றும் எம்மோடு வாழ்வீர் இரண்டாம் ஆண்டின் அஞ்சலியாய் இதயம் நிறையுது கண்ணீரில் என்றும் நினைவில் வாடும் அன்புப் பிள்ளைகள்,மருமகள் பேரப்பிள்ளைகள் தமது அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழைக் குடும்பத்தின் வாழ்வில் விளக்கேற்றி உதவ அன்னாரின் பிள்ளைகள் முன் வந்துள்ளனர்.

அந்த வகையில் தொல்புரம் மேற்கு வீராவத்தை சுழிபுரம் முகவரியை சேர்ந்த முருகேசு மகாலிங்கம் என்பவரின் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதாலும்,அவர்களின் மகள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளபடியாலும் அவர்களின் குடும்பத்திற்கு உதவ அன்னாரின் பிள்ளைகள் முன்வந்துள்ளனர்.

காலையடி இணைய உதவும் கரங்களின் மூலம் இக்குடும்பத்தின் வாழ்வில் ஒளியேற்றும் பொருட்டு சுயதொழில் முயற்சியினை ஊக்குவிக்கும் வகையில் மீன்பிடி உபகரணங்கள் வாங்கும் பொருட்டு முற்பணமாக ரூபா 10.000 உம் வழங்கப்பட்டது.அத்துடன் பிள்ளைகளின் கல்விக்கான ஊக்கத்தொகையாக ரூபா 12.000 உம் வங்கிக் கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களின் மற்ற இரண்டு மகள்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு பாடசாலை சென்று வருவதற்கான துவிச்சக்கர வண்டி ஒன்றும் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கான உணவுக்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு அத்தியாவசியப் பொருட்களான 25 கிலோ அரிசி 10 கிலோ சீனி 20 கிலோ மா 5 கிலோ தேயிலை முதலான 12.000 ரூபா பெறுமதியான பொருட்களும் வாங்கி வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி இவ் உதவிகளை வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்கள் வழங்கி வைத்தார்.இவ் உதவியை வழங்கிய திருமதி புஷ்பராணி பாலசுப்பிரமணியம் பிள்ளைகளுக்கும் காலையடி நெற்றின் சார்பாக நன்றிகளை தெரிவித்து, அன்னையின் ஆத்மா சாந்தியடையவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்



 

2,038..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.