உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ

கிளிநொச்சி முழங்காவில் குமுழமுனை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கான வாழ்வாதார உதவிகள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வாழ்ந்து வரும் தங்கராசா ஜெகதீஸ்வரன் அவர்களின் ,

நன்கொடை மூலம் கிடைத்த 50.000 இலங்கை ரூபாவை கொண்டு காலையடி இணைய உதவும் கரங்களினால் அவருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அதற்கமைய பல அத்தியாவசியப் பொருட்கள் உதவும் கரங்களின் அமைப்பினரால் வாங்கி வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் இந்த நிதி உதவியினை வழங்கிய திரு திருமதி ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு இவ் உதவியைப் பெற்றுக்கொண்ட இளம்தாயாரின் சார்பாகவும்

முட்டை இடும் கோழிகள்–28,

கோழித்தீவனம்—————03

நீர் வைக்கும் கலன்கள்—02

உணவுக் கலன்கள்———02

மா மூட்டை———————-01

புழுங்கல் அரிசி கிலோ—30

சிவப்பு அரிசி கிலோ——-25

பேபி சோப்———————-06

லக்ஸ் சோப்——————–05

ராணி சோப்——————–05

சம்போ பைக்கற்————–60

சலவைத்தூள் கிலோ——04

மிளகாய்த்தூள் கிலோ—-02

நூடுல்ஸ் பைக்கற்———–12

பெரிய நூடுல்ஸ் பைக்கற்02

கடலை கிலோ ——————01

பயறு கிலோ——————–01

எண்ணெய் போத்தல்——04

தேயிலை கிலோ ————-01

சீனி கலோ———————-10

ஐங்கர் பால் மா பைக்கற்-03

சோயா மீற் பைக்கற்——–10

சிக்னல் பற்பசை————–03

மீன் ரின்—————————03

உள்ளி கிலோ——————-01

பேபி பவுடர்———————–01

ஓடிக்கலோன் போத்தல்—-03

சொக்லேட் கிறீம் பிஸ்கட்–02

மைசூர் பருப்பு கிலோ——-02

பழப்புளி கிலோ—————-01

மொத்தம்—–54000 ரூபா

காலையடி இணைய உதவும் கரங்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு தங்களின் கரங்களையும் இறுகப் பற்றிக் கொள்கின்றோம். மேலும் இறுதி யுத்தத்தில் தனது மூன்று சகோதரர்களையும் பறி கொடுத்த நிலையில் வாழ்ந்து வரும் இப்பெண் புலம்பெயர் உறவுகளிடமிருந்து ஒரு அன்பான வேண்டுகோளினையும் முன் வைத்திருக்கின்றார்.

போரின்போது இரண்டு கால்களையும்,ஒரு கையையும்,மற்றும் ஒரு கண்ணையும் இழந்த நிலையில் வாழ்ந்து வரும் தனக்கு ,மாதாந்தம் கண்ணைப் பரிசோதனை செய்வதற்குத் தேவையான 5000 ரூபா பணவுதவியினை யாராவது செய்ய முன்வந்தால் அது தன் வாழ்வில் பேருதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.எனவே அன்புள்ளம் கொண்ட யாராவது இவருக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.பாரிய மனவுளைச்சலுக்கு ஆளாகி மரணித்துப்போகலாம் என்ற நிலயியில் இருந்து வந்த நிலையில் இவ் உதவியினை புரிந்த ஜெகதீஸ்வரன் குடும்பத்திற்கு வாழ்வில் சகல செல்வங்களும் குறைவின்றி கிடைக்க ஆண்டவனைப் பிரார்த்தித்து கொள்வோம்.

தொடர்புகளுக்கு , 0047 -97946854 ,தம்பன்

1,909..views

  • Sakthivel:

    நிச்சயம் இந்த இளம்தாய்க்கு உதவியவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் சொல்வதுடன் இவரின் மருத்துவ செலவுக்கு யாரும் உதவினால் இன்னும் பேருதவியாக இருக்கும் ்
    காலையடி இணையம் சார்பாக சென்றபோது நேரம் காலை ஒன்பது மணியை அடைந்திருந்தது அதுவரை அந்த சிறார்கள் தேனீர் கூட அருந்தவில்லை ்
    வறுமை ஒருபுறம் உதவிட யாரும் இல்லை என்பது மறுபுறம்
    கொழும்பில்தான் கண்மருத்துவம் செய்யவேண்டும் மாதம் ஒருமுறை செல்லவேண்டும் அதுகும் ஐந்து மாதங்களயக நடைபெறவில்லை
    இதனால் மற்றய கண்ணுக்கும் பாதிப்பு அதிகமாகவே காணப்படும்
    அப்படி பாதிக்கபட்டால் இவரின் வாள்க்கை இன்னும் கேள்விக்குறியாகமாறும் அதைவிட சிறார்கள் இருவரும் அனாதை ஆக்கபடுவார்கள் எனவே முடிந்தவரை உதவிகளை புரிந்திடவேண்டும்

  • கவி:

    தொடர்க…

  • தமிழன்,நோர்வே:

    ஜெகதீஸ்வரன் அண்ணை அவர்களின் சேவை போல் இன்னும் பலர் முன்வந்து வறியோர்க்கு கை கொடுப்பதன் மூலம் எம் இனம், எம் சமுதாயம் முன்னேற்றமடைகிறது. நீங்கள் வருடம் உழைக்கும் தொகையில்(வெளிநாட்டில் ) 5% ஒரு தடவை உங்களிலின் சம்பளத்தில் கொடுப்பத்தால் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை மலர்கிறது .நாம் செய்யும் சேவை மறுபிறப்பு பிறப்பது நிசசயம் ,நாம் மறுபிறப்பு பிறக்கும் போது முன் பிறப்பின் புண்ணியம் செய்வதன் மூலம் எமக்கு மறு பிறப்பெல்லாம் நல்லதே
    தொடரும் …

    தமிழன்,நோர்வே

  • T:GOPAL:

    ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு.
    ( கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்
    கூடியது வேறெதுவும் இல்லை.)

  • பண் மண்வாசம்:

    தம்பி ஜெகதீஸ்வரன் செய்த கொடை போல் பண்ணுர் மக்கள் அனைவரும் வறியோர்க்கு கை கொடுத்தால் தமிழீழத்தில் பல குடும்பத்தின் வாழ்க்கை ஒளியேற்ற பண்ணுர் சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்படுதல் அவசியம் என என் கருத்து. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.