உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

பண்டத்தரிப்பு வடலியடைப்பு வீதியில் விபத்து. ஒருவர் பலியாகியதுடன் மூவர் . புகை படங்கள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இரு இளைஞர்கள் உட்பட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதுடன், இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரே இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுழிபுரம் பனிப்புலத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் ஜஸ்டின் மற்றும் திருநாவுக்கரசு கரன் எனும் 17 வயதான இருவரும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்று விட்டு மது போதையில் வந்துள்ளனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர்கள் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளனர்.

இதன்போது நால்வரும் படுகாயமடைந்த நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மற்றைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1,600..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.