உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

சுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ

சுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி காலையடி இணைய உதவும் கரங்களினால் நேற்று 27,062017 மன்னார் வண்ணாங்குளம் பகுதியில் வசித்துவரும் இளம் விதவைத்தாய் ஒருவருக்கு .

மோட்டார் தையல் இயந்திரமொன்றை அவரின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கி வைக்கப்பட்டது . இதற்கான நிதி உதவியினை நல் உள்ளம் கொண்ட சுவிற்சலாந்தின் Bern நகரில் வசித்து வரும் விக்னேஸ்வரன்குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்று வசித்து வரும் வேளையில் சித்திரை மாதம் இருபதாம் திகதி இவர்கள் இருந்த பகுதியில் இராணுவத்தினர் சுற்றி வளைப்புத் தாக்குதல் நடத்தினர் .

 

அந்தநேரத்தில் இப்பெண்ணின் கணவரும் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விட்டார். இந்தப்பெண் நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த வேளையில் எதுவுமே செய்ய முடியாத நிலையில் நிர்க்கதிக்குள்ளானார். அன்று இவரின் வாழ்வில் ஏற்பட்ட அவலநிலை இன்றுவரை வாழ்வில் ஒளி இழந்தே காணப்படுகிறது. இதுவரை உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையிலேயே மிகவும் சிரமத்துடன் வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளார்.

 

இந் நிலையிலேயே காலையடி இணைய உதவும் கரங்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளை அடுத்து நேரில் சென்று பார்வையிட்ட உதவும் கரங்களின் குழுவினர் ,அவரின் நிலை கண்டு அவருக்கு உதவ முன்வந்தனர்.அதன்பிரகாரம் சுவிற்சலாந்தில் வசிக்கும் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்படட 52200 ரூபா நிதி உதவியுடன் இவருக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கி வழங்கப்பட்டது.

 

இன்றைய சூழலில் தமது பிள்ளைகளை வளர்ப்பதற்க்காக இளம் விதவை தாய்மார் பலர் பணம் சம்பாதிக்க பல தவறான வழிகளை பின்பற்றி வருகின்றனர் ,இந்நிலையை மாற்றி இந்த வாழ்வாதாரத்தை வழங்கி வைப்பதனூடாக அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்டு ஓர் சாதாரண வாழ்க்கை முறைக்கு கொண்டு வர முடியும் .இதுபோன்ற பல குடும்பங்களின் வாழ்வில் காலையடி இணைய உதவும் கரங்கள் ஒளியேற்றி இருக்கிறது.

 

அந்த வகையில் இந்த வாழ்வாதார உதவிக்கான நிதியினை புலம்பெயர் உள்ளங்கள் பலர் வழங்கிவரும் நிலையில்,இம்முறை விக்னேஸ்வரன் குடும்பத்தினரின் நிதி உதவி இக்குடும்பத்திற்க்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது .இவர்களுக்கு காலையடி இணையம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது. அந்த வகையில் இக்குடும்பத்தினர்க்கு வாங்கி வழங்கப்பட்ட பொருட்களின் விலை விபரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது

தையல் இயந்திரம் 42 999

நூல்கள் ஏனைய பொருட்கள் 5180

போக்குவரத்து 1500

தையல் இயந்திரம் ஏற்றியது 2000

பணமாக வழங்கியது 1500

மின் இணைப்பு 600

ஏனைய செலவு 750

செலவு பெறுமதி 53029

வழங்கிய மொத்த தொகை 52.200

 

5,628..views

 • பகலவன்:

  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 • Veeran sakthivel:

  காலையடி இணைய உதவும் கரங்களை வாழ்த்துகின்றேன்
  அத்துடன் இந்த நிதி உதவியை வழங்கிய விக்னேஸ்வரன் குடும்பத்தினருக்கு எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் . மனம் உண்டானால் இடமுண்டு என்பார்கள் அது இதுதான்
  இவர்கள் போன்று நல் உள்ளம் படைத்தவர்கள் கொடை எண்ணம் கொண்டவர்கள் வெளியில் வரவேண்டும் பாதிக்கப்பட்ட எம் மக்கழுக்கு ஔி
  ஏற்றவேண்டும்.

 • ரவி பலன்:

  பிறருக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். என்றோ ஒருநாள் அது பிரதிபலனாக அமையும்..!!உங்களுக்கு

 • Mohan:

  வரும்போது எதுவும் கொண்டு வரவில்லை போகும்போது நாம் வாழ்ந்த பூமியிலை இருந்து ஒரு பிடி மண்ணைக்கூட கொண்டு போகப் போவதில்லை . வாழ்ந்த காலங்களில் நாலு பேருக்கு நல்லது செய்து புண்ணியத்தை சேர்த்து விட்டு போனால் அந்த நாலு பேருடைய மனதிலும் குடி இருப்போம் இதுக்கு உண்டான பலன் நம் பிள்ளைகளையே வந்து சேரும் . விக்கினேஸ்வரன் குடும்பத்துக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்போடும் வாழ்க என வாழ்த்துகிறேன்

 • அற்புதன்:

  இந்த உலகில் மனிதநேயம் இன்று நிலைத்து வாழ்ந்து வருவதற்குக் காரணம் விக்கினேஸ்வரன் குடும்பத்தை போல் நல்ல மனம் படைத்த
  மனிதர்களால் தான் என்பது உலகம் அறிந்த உண்மை.
  .
  விக்கினேஸ்வரன் குடும்பத்தை போல் கருணை உள்ளம் படைத்த மனிதப் பண்புகள் பலருக்கு இல்லையென்றால்.இந்த உலக வாழ்வானது வெந்து. தணிந்த வெறுங்காடாகக் காட்சியளித்து விடும். விக்கினேஸ்வரன் குடும்பத்துக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! உதவி செய்யும் எண்ணம் உடையவர்களே உயர்ந்தவர்கள்,

  பசியோடு இருப்பவர்களைத் தாண்டி
  கடவுள் அபிஷேகத்திற்கு பால் கொண்டு
  செல்கின்ற மனிதர்களிடம் யார் சொல்வது.?

  பசியோடு இருப்பவர்களின் வயிற்றில் தான்
  கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை..

 • T.GOPAL:

  இயந்திர வாழ்க்கையின் இயற்கை சுழற்சியில்
  நொந்து நூலிழந்து போகும் மனிதர்கள் மத்தியில்
  தாணுண்டு தன் குடும்பமுண்டு என்று
  வாழ்வோரில் சுவீஸ் விக்னேஸ்வரன்
  இந்த உறவையும் தாண்டி இன்னொரு உறவு
  உண்டு என்று எண்ணி, செய்த உதவி அக்
  குடும்பத்திற்கு பேருதவி .இந்த உதவியைச்
  செய்த விக்னேஸ்வரனுக்கும் அவர் செய்த
  உதவியை உரிய இடத்திற்கு கொண்டுபோய்ச்
  சேர்த்த உதவும்கரங்களுக்கும் கோடானகோடி
  வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இதுபோன்ற
  உதவிகளைச் செய்ய ஆர்வமாக இருக்கும் உறவுகளுக்கும்
  உதவிகளை பெற்றுக்கொள்ள துடிக்ககும் தாயக உறவுகளுக்கும்
  உதவும்கரங்கள் ஓர் கலங்கரை விளக்காக திகழ வாழ்த்துகிறேன்

 • நான் தமிழன்:

  காலையடி இணைய உதவும் கரங்களை வாழ்த்துகின்றேன்
  அத்துடன் இந்த நிதி உதவியை வழங்கிய விக்னேஸ்வரன் குடும்பத்தினருக்கு எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்..
  பிறந்ததும் அழும் மனிதன்,இறந்ததும் பிறரை அழ வைக்கிறான்.ஒருவர் இறந்தபின் சூடப்படும் புகழ்மாலைகள் மறைந்தவரை கெளரவப்படுத்துவது மட்டுமல்ல,வாழ்வோருக்கும்,எடுத்துச்சொல்லப்படும் நல்வழிகளுமாகும். மறைந்தவர் ஒருவர், இவர் இப்படி வாழ்ந்தார் என்று புகழ்ந்து பேசுவது முக்கியமல்ல.நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.
  வாழ்த்துக்கள் என்றும் உங்கள் பனி தொடரட்டும் என்றும் உங்களுடன் நான் தமிழன்

  • அற்புதான்:

   சிலர் தாம் உதவக்கூடிய வாய்ப்பு இருந்தாலும் எந்த நிலையிலும் எந்தச் சூழலிலும் பிறர்க்கு உதவி செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் மன உளைச்சலுடன் பணத்ததோடு வாழும் ஓர் நிரந்தர நோயாளிகள்..

 • Mannar sutes:

  வணக்கம் காலையடி இணையத்துக்கு
  கைவிடப்பட்ட இடமென எமது இடத்தை
  நினைத்திருந்தோம் நீங்கள் தன்னும் எங்கள்
  இடம் நாடி வந்திருக்கிறீர்கள் அண்மையில்
  விதவை பெண்ணொருவருக்கு தைய்யல்
  இயந்திரம் ஒன்றை வளங்jகியிருந்தீர்கள்
  சிறந்த தெரிவுi மிகவும்வறுமையான குடும்பம் நாளாந்தம்
  உணவுக்கே பெரும் கஸ்ரத்தை எதிர்நோக்கிய குடும்பம்
  இங்குள்ள மக்களுக்கு உதவிபுரிய யாரும் வருவதில்லை
  இங்கு பல விதவை குடும்பங்கள் ஊனமுற்றவர் என பலர்
  வாள்கிறார்கள் இந்த தாய்க்கு உதவியதுபோன்று தொடர்ந்து
  உதவ முன்வருவீர்களா நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்
  முள்ளி வாய்க்கால் என ஓடி ஓடி உதவுகிறார்கள் யுத்தம் தொடர்ந்த
  காலம்தொட்டு இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலில் எல்லாத்தையும் தொலைத்துவிட்டு வந்து கிடக்கிறோம் .தூரம் என்பதற்க்காய்
  யாரும் எம்இடம் நாடி வருவதில்லை நல்ல பதில்தாருங்கள்
  அத்துடன் இந்த உதவியை புரிந்த விக்னேஸ்வரன் குடும்பத்திற்க்கும் உங்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
  Mannaar sutes

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.