உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

உள்ளுறுப்புக்கள் உருகி அழியும் நோய் பற்றி தெரியுமா? (திடுக்கிடும் தகவல்)

எமது உள்ளுறுப்புக்கள் உருகும் நோய் பற்றி அறிந்துள்ளீர்களா? என்று கேட்டால் உங்கள் மனதில் விதவிதமான எண்ண ஓட்டங்கள் ஓடும். உருகுவதற்கு நமது உறுப்புக்கள் என்ன மெழுகா என்று திருப்பிக்கேட்பீர்கள். ஆனால் இதில் அடங்கியுள்ள உன்ண்மையை யாரும் இலகுவில் உணர்வதில்லை.

உடலின் உள்ளுறுப்புகள் உருகுமா?

நமது உள்ளுறுப்புகள் உருகும் என்பதை யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அது உண்மை. லட்சக்கணக்கான மக்கள் இந்நோயினால் உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

சாதாரணமாக நமக்கு வரும் வயிற்றுவலிகள் சாதாரணமானவைதான், அவற்றால் எதுவித பிரச்சினையும் இல்லை என்று விட்டுவிடலாம்.

ஆனால் இலகுவான ஏதாவதொரு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாத வயிற்று வலிகள் மிகவும் ஆபத்தானவைகள். மருந்து சாப்பிட்டும் சரியாகாமல் வெகு நாட்களாக வயிறு வலித்துக் கொண்டே இருந்தால் இந்த உள்ளுறுப்பு உருகும் நோய்க்கு நீங்கள் ஆட்பட்டிருக்கலாம்.
இந்நோய்க்கு நம் வயிற்றின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கணையம்தான்(Pancreas) முக்கிய காரணமாகிறது. கணையத்தில் ஏற்படுகிற கோளாறு அல்லது வீக்கம் கணைய அழற்சி எனப்படுகிறது (Pancreatitis). கணைய சுரப்பியின் தாறுமாறாக சுரத்தலே இந்த கோளாறுக்கு காரணம். உணவு சமிபாடடைய கணையம் சுரக்கும் என்சைம்களின் அளவு எல்லையைத் தாண்டுவதால் இப்படி கோளாறுகள் ஏற்படுகிறது.

சாதாரணமாக தொடர்ந்து ஏற்படும் வயிற்றுவலியானது சில நேரம் இந்த கணைய அழற்சிக்கு அறிகுறியாக இருக்கலாம். இது மிகவும் மோசமான ஒரு நோயாகும். ஆனால் நம்மில் சிலர் தொடர்ச்சியான வயிற்றுவலிக்கு மருந்து வாங்கி குடித்தால் சரியாகிவிடும் என்று கருதிவிடுகிறோம். ஆனால் விளைவுகள் மேலும் மோசமாகிவிடுகின்றன என்பதை இவ்விடத்தில் நாம் சிந்திக்கவேண்டும்.

கணயம் என்றால் என்ன தெரியுமா?

நமது வயிற்றின் மத்திய பாகத்தில் அவரைக்காய் போல குறுக்காக இருப்பதுதான் கணையம் (Pancreas).

மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு என்பதைப்போல கணையம் சிறிய உறுப்பாக இருந்தாலும் நம்முடைய உடலில் மிகப் பெரிய வேலையைச் செய்கிறது. இது நாம் உண்ணும் உணவைச் செரிக்க உதவும் நொதிப்பொருளை சுரக்கிறது.

உணவுப்பொருட்களை அரைத்து சத்துக்களை பிரித்தெடுக்க பெரும் உதவி செய்கிறது. திட உணவு இதனால்தான் திரவ உணவாகி, சத்துக்களாக பிரிக்கப்படுகிறது. கொழுப்பு, புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ் ஆகியவை பிரித்து உடலெங்கும் சக்தியூட்டுவதற்காக அனுப்பப்படுகின்றன. வயிற்றில் சுரக்கும் இந்த அமிலத்தை கட்டுப்படுத்தும் மற்றுமொரு திரவத்தையும் இது சுரக்கிறது.

இந்த என்சைம்கள் சரியாக சுரக்கப்படவில்லையெனில் உண்ணும் உணவு செரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு மலச்சிக்கல் உட்பட பல முக்கிய கோளாறுகள் உண்டாகி விடுகின்றன. மலம் மிகவும் கெட்டியாகப் போகும். அல்லது தண்ணீரைப் போல கழியும். இந்நிலை தொடர்ந்தால் பிரச்சினை பெரிதாகும். இச்சுரப்பிகளின் கோளாறுகளினால் உணவானது சரியாக கிரகிக்க முடியாமல் போய்விடும். எடை குறைதல் உண்டாகும்.

கணையத்தில் ஏற்படும் கட்டி அல்லது வீக்கம் அல்லது இந்த சுரப்புக் கோளாறுகள் காரணமாக வயிற்று வலி உண்டாகிறது. நாள்பட்ட வயிற்றுவலியை தொடர்ந்து அலட்சியம் செய்வோமேயானால் ஒரு கட்டத்தில் கணையமானது உருகத் தொடங்குகிறது. அதாவது உடையத் தொடங்குகிறது. அல்லது அழியத் தொடங்குகிறது.

பழுதடைந்த கணையம் சுரக்கும் அதிக அளவிலான திரவமானது உடலிலுள்ள மற்ற உறுப்புகளையும் சென்று கரைக்கத் துவங்குகிறது. அதாவது உருக்கத் தொடங்கி விடுகிறது. இறுதியில் மரணம் உண்டாகிறது.

மது அருந்துபவர்களுக்கு இந்த வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே அதிக அளவில் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் போன்ற பெரிய சோதனைகளை உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து இந்நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக மது அருந்தும் பழக்கத்தை உடனடியாக விட்டு விடுங்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் நமது உள்ளுறுப்புக்கள் உருகுமா இல்லையா?

301..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.