உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி !(வீடியோ இணைப்பு)

கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ! ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் . 

இக்குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த பொது பட்டகாலில் படும் என்பது போல் கருணாகரனை கைது செய்து புனர் வாழ்வு முகாமில் வைத்துள்ளனர் .மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்த பொது தலை மகனாக இருந்த பதினாறு வயது மகன் லீம்சன் ஏழ்மை நிலை காரணமாக சுருக்கிட்டு தற்கொலை செய்து மேலும் மோச நிலையை ஏற்ப்படுத்தி விட்டது மிகப் பரிதாபத்துக்குரியது .இன் நிலையில் இக் குடும்பத்துக்கு நோர்வேயில் உள்ள நல்ல மனம் உள்ள ஏழு குடும்பங்கள் இணைந்து ரூபா எண்பதினாயிரம் உதவியுள்ளது .ஆலையத் திருப்பணிக்கும் அன்னதானத்துக்கும் அள்ளிக் கொடுத்து தங்கள் பெயரை விளம்பரப் படுத்தும் கொடையாளிகள் உள்ள இக் காலத்தில் தம் பெயரை வெளியிடாது உதவி செய்த இக் குடும்பங்களை பாராட்ட வேண்டியதே !
இக் குடும்பங்கள் எல்லா வளமும் பெற்று சிறப்பாகவாழ இறைவன் அருள் புரிவான் என்பது திண்ணம் .

காலையடி இணையம்

DSC01952 DSC01953 DSC01954 DSC01957 DSC01958IMG_0001 (1)

5,662..views

 • தமிழன்:

  Valthukal

 • உதயன்:

  நேற்றேங்கள் தேசத்தில்
  நிமிர்ந்து நின்றவர்கள் …
  நடை பயில முடியாது
  நாணிய படி இன்று …

  வந்தேறு குடிகள்
  வந்து நிலம் பறித்ததால் ..
  உண்ண வழியின்றி
  உங்களிடம் பிச்சை வேண்டி …

  மரணத்தின் விளிம்பில்
  மழலைகள் தவிக்கிறது ..
  காக்க நீ தவறின் -உன்னை
  கடவுளும் மதியான் …

  ஒரு வாய் சோறு உண்ண வழியின்றி
  தெருவோரம் கிடக்கிறது -இந்த
  தெம்மாங்கு சிட்டுக்கள் –
  பாடையில் போக முன்னே
  பார் தமிழா உதவு ….

  நாளை இவர் கரங்கள் -உன்னை
  கூப்பியே வணங்கும் …

  • நக்கீரன்:

   நக்கீரன் நினைத்ததை
   நம் உதயன் விளம்பியதால்
   இக்கீரன் இனியிங்கு
   இயம்புதற்கு என்ன உண்டு
   எக்காலும் எம்வாழ்வு இந்நிலைதான்
   எனவேதான் எம்முறவுகளே
   நிக்காது உதவ முன் வருவீர்
   நிலையான பேரின்பம் பெற்றுய்வீர் .

 • பாஸ்கரன்:

  நல்ல பாட்டு

  http://www.youtube.com/watch?v=LEghA2RcK6c

 • Sutha:

  காலையடி உதவும் கரங்களுக்கு பாராட்டுக்கள் இந்த குடும்பத்தின் நியூஸ் நான் ஏதோ ஒரு இணையத்தில் வாசித்தேன் அப்போ எனக்குள்ளே ஒரு ஏக்கமும் கவலையும் இருந்தது ஏதாவது இந்த்த குடும்பத்துக்கு செய்யவேணும் என்று ஆனால் என்னிடம் அதுக்குரிய பணவசதியும் இல்லை . என்னால் அந்த குடும்பத்தை நினைத்து கவலைப்படத்தான் முடிந்ததே ஆனால் காலையடி உதவும்கரங்கள் சாதித்து விட்டார்கள் , இதற்கு உதவ முன் வந்த 7 குடும்பங்களையும் நான் கை கூப்பி வணக்குகிறேன் என்னும் இவர்கள் 100/ ஆண்டு காலம் வாழ்க ,,

 • பரமேஸ்வரன்:

  இந்த குடும்பத்துக்கு உயிர் கொடுத்த ஏழு குடும்பத்துக்கும் முதலில் நன்றி மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே, உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும்.உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்கிறார் சிவப்பிரகாசர்.

 • சதாசிவம் புவனேந்திரன்:

  இந்த உதவும் கரங்களை நடாத்துபவர்களே எங்களுக்கும் இப்படியான குடும்பங்களுக்கு உதவி செய்ய மனம் இருக்கின்றது நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது உங்களோடு தொடர்வு கொள்ள உங்களின் தொலை பேசி நம்பரை தயவு செய்து இதில் ஒரு முறை எழிதி விடவும் நோர்வே வாழ் ஏழு குடும்பத்துக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
  அரை ஜாண் வயற்றை
  நிறைக்க யார் யாரிடோமெல்லாமோ
  கை நீட்ட வேண்டி வருகின்றது…!
  உலகில் அதிகம் பேருக்கு
  இந்த அவலம் தான்…!
  குடிக்க பணம் கொடுக்கும் மனசு
  ஏழை படிக்க கொடுக்க மறுப்பதேன்..?
  கடவுள் உனக்கு பணம்
  தந்ததே கொடுக்க தானே தவிர
  வட்டிக்கு கொடுக்க அல்ல…
  நல்ல மனதோடு உதவி பார்…
  வயதான காலத்தில்
  அதில் ஒரு நிம்மதி தெரியும்..
  இதை நான் சொன்னால்
  பைத்தியக்காரன் என்று
  பட்டம் சூட்டும் உலகமடா இது

 • thamilan:

  அரை ஜாண் வயற்றை
  நிறைக்க யார் யாரிடோமெல்லாமோ
  கை நீட்ட வேண்டி வருகின்றது…!
  உலகில் அதிகம் பேருக்கு
  இந்த அவலம் தான்…!
  குடிக்க பணம் கொடுக்கும் மனசு
  ஏழை படிக்க கொடுக்க மறுப்பதேன்..?
  கடவுள் உனக்கு பணம்
  தந்ததே கொடுக்க தானே தவிர
  வட்டிக்கு கொடுக்க அல்ல…
  நல்ல மனதோடு உதவி பார்…
  வயதான காலத்தில்
  அதில் ஒரு நிம்மதி தெரியும்..
  இதை நான் சொன்னால்
  பைத்தியக்காரன் என்று
  பட்டம் சூட்டும் உலகமடா இது , நிங்கள் சொல்வது உண்மை. நான் வசிக்கும் நாட்டில் பலர் வட்டிக்கு பணம் கொடுத்து வாழும் மானம் கேட்ட பிழைப்பு மனிதர்கள் வாழ்கிறார்கள் .அனால் இவர்களின் பிள்ளைகள் ரவுடி பிள்ளைகளை வளர்கிறது .

 • ruban:

  நிங்கள் செய்கிற சேவைக்கு இந்த பாடல் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் , நான் சொல்ல வேண்டியதை எல்லாம் இந்த பாட்டில் வருகிறது ,

  http://www.youtube.com/watch?v=YTM_u8xjTEI

 • அற்புதன்:

  மனதைரியத்தோடும், நம்பிக்கையோடும் செய்யும் எந்தச் செயலும் வெற்றிகரமாகவே அமையும்! அதிலும் உண்மையான பரிவோடு செய்யும் எந்தச் செயலும் தவறாக அமையாது. உயர்ந்த குணம் உடையவர் பலர் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது. இல்லை எனில், உலகம் இயங்காது, அதனில் உதவும் கரங்கள் நிகழ்த்தி வரும் அற்புதங்களுக்கு அளவே இல்லை .எத்தனை எத்தனைமுறை ஏழைகளின் வயிற்றில் பசியென்ற கொடுமையை காப்பாற்றியிருக்கிறார்கள்? இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தி உணர்த்தும் வழியில் முன்னிலைப்படுத்திக் சென்று கொண்டுருப்பவன் எம்மூரவன் என்று என்னும்போது உண்மையிலேயே நான் ஆச்சரிய குறியாகிறேன். தனியொரு மனிதனாய் நின்று எவ்வாறு ஒரு வகையிலான செயலை செய்ய வேண்டும் என்று எவ்வகையில் உணர்ந்தான் இவன்?இவனின் ஒழுக்கத்தை உணர்த்துகிறது இவனது பணிவுள்ளம்!இவ் பணிவுள்ளம் கொண்டவனுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள்! வேற வேற செய்திகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை கூட கருணை பண்பை விளக்கும் இவன் செயல்களுக்கு எங்களில் பெரும்பாலோர் கொடுப்பதில்லை! பணிவுள்ளம் கொண்டவனே இந்த உலகம் நீ நன்மை செய்யும் போது உன்னை கவனிக்காது தீமை செய்யும் போது உன்னை விமர்சிக்காமல் இருக்காது.பசுமை நாம் தேசம்.துணிந்து செல் உங்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். பணம் தரும் சந்தோஷத்தை விட ஏழைகளின் நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம்

 • சித்தன்:

  வலி உண்டு வாழ்வில் வந்து பார்க்க நபர் இல்லை இருந்தும் வால்குறோம் நாம் இந்த பூமியில்..இருந்தும் குடுக்க மறுக்கிறவர் எத்தனையோ.. என்றும் காப்போம் என்போம் என்பார்கள் எங்கள் இணையம் அது கலையடி உதவும் கரங்கள் லோ..தண்ணீர் ஊற்றும் போது கொஞ்சமாகத்தான் இருக்கும் அது தொடர்ந்து போகும் போது தான் அது பேரு வெள்ளமாகும் அதேபோல் தான் உங்கள் உதவும் கரங்களும்.வள்ளல் பெற்ற நாடோ நோர்வை அதை கட்டுவதற்கு உங்கு வாழும் நம் இனங்களோ பேரு மனம் படைத்தவர்களே.
  யார் உண்டு எம் வழியில் அதை தட்டிவிட்டு செல் என்பார்கள் பலநாட்டி.
  ஆனால் உன்னாட்டிலையோ அவையும் நம்பப்போல தான் என்பார்களோ பலபேர் ஆஹா ஆஹா அருமை அருமை உண்ணாட்டு மக்கள் வளவேனுமடா என்றும் எம்மை காகவேன்ருமட நோர்வையில் வாழும் அனைத்து எம் உறவுகளுக்கும் அந்த ஆண்டவன் துணை நிப்பான் உங்களுக்கு நல்ல மனம் உண்டு நீங்கள் நல்லா இருப்பிங்கள் வாழ்க வளமுடன்…சித்தன்

Leave a Reply

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.