உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

அதிகம் பகிருங்கள்!!முகப்பரு பிரச்சினையை தீர்க்கும் நாட்டு மருந்து பாலும் வெள்ளை, பூண்டும்!!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனையோ வழிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் கால்சியம், புரோட்டீன் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்த பால் மிகவும் இன்றியமையாத ஒன்று.

அதேப் போல் பூண்டும் மிகுந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் சிறப்பான உணவுப் பொருள். ஆனால் உணவில் சேர்க்கும் பூண்டை நம்மில் பெரும்பாலான மக்கள் தூக்கி எறிந்துவிடுவோம். இதற்கு காரணம் அதன் சுவை தான்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? வேண்டுமெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

சளி மற்றும் காய்ச்சல் உங்களுக்கு திடீரென்று தீவிரமான சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.

முகப்பரு நீங்கள் முகப்பருவால் அதிகம் கஷ்டப்படுபவராயின், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

நுரையீரல் அழற்சி பூண்டு பால் நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சிறந்த ஓர் நிவாரணி. மேலும் இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.

நல்ல செரிமானம் செரிமானம் சீராக நடைபெற வேண்டுமானால் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.

வயிற்றுப் புழுக்கள் பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இடுப்பு மற்றும் பின்புற கால் வலி பூண்டு பாலில் உள்ள வலி நிவாரணி தன்மை, இடுப்பு மற்றும் பின்புற கால் வலியினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு நல்லது. எனவே உங்களுக்கு இப்பிரச்சனை இருந்தால் பூண்டு பாலை குடித்து நன்மைப் பெறுங்கள்.

பூண்டு பால் தேவையான பொருட்கள்:

பால் – 1 கப் பூண்டு – 3 பற்கள் மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 2 சிட்டிகை பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்

பூண்டு பால் செய்முறை *

முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு பூண்டை வேக வைக்க வேண்டும். * பூண்டு நன்கு வெந்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். பின் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கரண்டியால் பூண்டை நன்கு மசித்தால், பூண்டு பால் ரெடி!!!

 

 

468..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.