உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  நோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் ,வீடியோand photos

  நோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத இரக்க குணமும், தாய்மை உள்ளமும் கொண்ட ஒருவரின் சிந்தனையால் எழுந்த உயர்ந்த நோக்கத்தில் பெண்ணொருவரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன்,

  சாவகச்சேரியை வசிப்பிடமாகக் கொண்ட ஐந்து பிள்ளைகளையுடைய

  குடும்பத்தைச் சேர்ந்த விதவைத் தாயாருக்கு காலையடி இணைய உதவும் கரங்களினால் வழாங்கி வைக்கப்பட்ட உதவி,

  ஐந்தாவது குழந்தையை பிரசவித்து ஐம்பதே நாட்களில் கணவரை இழந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான பெண் ஒருவர் செய்வதறியாது திகைத்து நின்ற வேளையில், காலையடி இணைய உதவும் கரங்களினால்
  இனங்காணப்பட்டு ,
  அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள்
  கடந்த 07.08.2017 அன்று சாவகச்சேரி பகுதியில் வைத்து வழங்கப்பட்டது.

  இதற்கான பண உதவியினை நோர்வேயை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நல்உள்ளம் கொண்ட ஒருவர் வழங்கியிருந்தார்.
  குடும்பத்தலைவரான ரிஷிகரன் ஒரு முன்னாள் போராளியாவார். இவருக்கு ஐந்து குழந்தைகள் .
  கடைசி குழந்தை பிறந்து ஐம்பதே நாட்கள் ஆன நிலையில் ரிஷிகரன் இறந்து விட , உதவிகள் எதுவுமின்றி ,குடும்பத்
  தலைவரை இழந்து ரிஷிகரனின் குடும்பம் தத்தளித்து வந்தது.
  பெண்ணின் சகோதரர்களும் தாய்மண் மீட்புப்போரிலே தம்மை ஆகுதியாக்கியவர்கள் தான்.

  பெண்ணின் தந்தையாரும் கிபீர்தாக்குதலில் ஏற்கனவே
  இறந்துவிட்ட நிலையில், தாயார் ஓருவரே ரிஷிகரனின் மனைவியுடன் உதவியாக இருந்துவருகிறார்.

   

  இவரும் வயது முதிர்ந்தவராகவே காணப்படுகின்றார்.
  இவர்களுக்கென சொந்தகாணி ,வீடு, தொழில்வசதி
  எதுவும் இல்லை ,அன்றாடம் தமது உணவுக்கே பெரும் சிரமங்களை எதிர்கொண்கொண்ட நிலையிலேயே இவர்களின்
  இந் நிலையறிந்தே காலையடி இணைய உதவும்கரங்கள் இவர்களின் வீடு நோக்கி விரைந்து
  இவர்களின் துன்பங்களை கேட்டறிந்து சுயதொழில் ஒன்றுக்கான வாய்ப்பை
  ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தனர்.
  இதன்படி புலம்பெயர் அன்பர் ஒருவரின் நிதி உதவியுடன்
  மிளகாய்த்தூள்அரைத்து பொதி செய்து சந்தைப்படுத்தி அதனூடாக கிடைக்கும் வருமானத்தை
  வைத்து தங்கள் செலவின் ஒருபகுதியை தங்களால் சரிசெய்ய முடியும் என அவர்கள் நம்பிக்கை
  வெளியிட்டனர்.
  அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க
  அவர்களின் உற்பத்திக்கான பொருட்கள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.
  புலம்பெயர் அன்பரால் வழங்கப்பட்ட பணம் 47 000 இலங்கை ரூபாவுக்கும் வாங்கி வழங்கப்பட்ட பொருட்களின் விபரங்களும் இங்கே
  இணைக்கப்பட்டுள்ளன.

  பொருள் விபரங்கள்.

  செத்தல் மிளகாய்
  52 கிலோ 11140
  53 கிலோ மல்லி 11029
  05 கிலோ சீரகம் 3350
  01 கிலோ மிளகு 1275
  10 கிலோ அரிசி 1000
  25 கிலோ சோம்பு 8509
  சரக்கு கறுவா 2080
  பொதிசெய்யும் பை 260
  தாச்சி 1100
  அகப்பை 100
  சிறுஉணவுப்பொதி 1090
  போக்கு வரவு 150
  ஏனைய செலவு 6597

  மொத்த செலவு 47980

   

  3,965

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.