உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். படங்கள் ,வீடியோ

தூரம் என்பதால் எம்மை கவனிப்பார் யாரும் இல்லை..ஒரு முன்னாள் போராளியின் ஆதங்கம்,,மன்னார் பிரதேசம் வட்டகண்டல் ஐ வசிப்பிடமாகக் கொண்ட முன்நாள் போராளி யசோதரன் அவர்கள் தாம் வாழும் பிரதேசத்தை யாரும் கவனித்து உதவ முன்வருவதில்லை என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

மிகுந்த வறுமையால் வாடி வரும் யசோதரனின் நிலையைக் கண்டு உதவ முன் வந்தோம்.அதன்படி கடந்த 08.08.2017 அன்று மன்னார் வட்டகண்டல் பகுதியில் காலையடி இணைய உதவும் கரங்களால் வாழ்வாதார உதவி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

 

இந்த உதவிக்கான நிதியினை வழங்கியிருந்தவர்கள் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் விஜி நெறி தம்பதிகள். இவர்கள் ஏற்கனவே பல உதவுங்கரங்களின் உதவிகளுக்கு நிதியினை வாரி வழங்கியிருந்தபோதும், இது அவரின் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட இரண்டாவது உதவியாகும். மன்னாரில் வசிக்கும் முன்னாள் போராளியான யசோதரன் இறுதி யுத்தத்தின்போது பாரிய காயங்களுக்கு உள்ளானவர்.

 

அவரது மனைவியும் காயங்களுக்கு உள்ளான ஒருவர் தான்.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. யசோதரனால் பெரிய வேலைகள் எதுவும் செய்யமுடியாது நிலையில், சுயதொழிலை மேற்கொள்வதற்கும் எந்தவித பொருளாதார நிலமைகளும் இல்லாத நிலையில் , தம் அன்றாட வாழ்வை நடாத்திச் செல்ல பாரிய சவாலை இவர்கள் எதிர்கொண்டனர். குழந்தைகளுக்கு பால்மா வாங்க வசதியின்றி பெரும் கஸ்ரங்களை எதிர்கொண்டனர்.

 

இந்த செய்தியை அறிந்த காலையடியின் உதவும் கரங்கள் அமைப்பு அவர்களின் வீடுநோக்கி விரைந்து அவர்களின் நிலைகளை கேட்டறிந்து உதவுவதற்கு முன்வந்தனர். அதன்படி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோழி வளர்ப்புக்கான உதவியை புரிவதற்க்கு உத்தேசித்தனர். அதன்பிரகாரம் விஜி ,நெறி தம்பதிகளினால் மனமுவந்து அளிக்கப்பட்ட 70.000 இலங்கை ரூபா நிதி உதவியுடன் யசோதரன் தம்பதிகளின் வேண்டுகோள் இனிதே நிறைவேற்றி வைக்கப்பட்டது.

 

இவ் உதவியானது காலையடி உதவும்கரங்களின் நிறுவுனர் தம்பன் அவர்களுடன் விஜி நெறி அவர்களும் இணைந்து 08.08.2017 அன்று வழங்கி வைத்தனர். பயனாளிகளின் நிலையைப் புரிந்து கொண்ட உதவும் கரங்கள் அமைப்பு நீண்ட தூரம் பயணித்து அவரின் வீட்டில் வைத்தே இவ்உதவிகளை வழங்கி வைத்தது. மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்ட உள்ளங்களின் வறுமை நிலையைப் புரிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் பேருதவி புரிந்து நிதியினை அள்ளி வழங்கி வரும் விஜி நெறி அவர்களுக்கு காலையடி இணைய உதவும் கரங்கள் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

 

அவர்களின் குடும்பம் நோய்நொடிகளின்றி நீண்ட காலம் ஆரோக்கியத்துடனும், மகழ்ச்சியுடனும் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றது. தொடர்ந்தும் விஜி , நெறி தம்பதிகளின் நிதியுதவியுடன் வழாங்கப்பட்ட உதவி பற்றிய விபரங்கள் இங்கே இணைக்கப்படுகிறது. அதன்படி கூடு கட்டிய செலவு 15000 கோழி 80 32000 கோழி தீவனம் உபகரணங்கள் 13260 குளிர்பானம் உணவு 1230 வரவேற்பு அணிகலன்1130 பொருட்கள் ஏற்றி இறக்கியது 2500 மருந்து செலவுக்கான பணம் 5000

மொத்த செலவீனம் 70120

880..views

  • Gopal-T:

    ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
    பொருள் -பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.