உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலத்தின் கடமை எமை கை நீட்டி அழைக்கிறது. யுத்தம் தந்த வடுக்களைச் சுமந்தபடி நம் முன்னாள்போராளிகள்

யார் இவர்கள்?

ஒரு காலத்தில் நிமிர்ந்த
நடையுடனும், நேர் கொண்ட பார்வையுடனும்
இலட்சியத்தோடும்,சுதந்திர தாகத்தோடும் ஒரு குடையின் கீழ் பவனி வந்தவர்கள்.
ஆம் அன்று இவர்கள்
தான் எம் காவல் தெய்வங்கள்.இன்றோமுகவரி அற்றுப் போய்

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி,வாழ வழியற்றுப் போய் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்கள்.
தம் அன்றாட வாழ்விற்கே
பிச்சையெடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்கள்.
உறவுகளே
புனித மண் மீட்புப் போரிலே பல விழுப்புண்களை
பெற்று , இன்று அங்கவீனர்களாகி, தங்களைத் தாங்களே தாங்க
முடியாத அளவிற்கு , ஆளாகிப்போனவர்கள்
இவர்கள்.
அன்றாட வாழ்விற்காக
பல போராளிகள்
வாழ வழி தெரியாது சொல்லொணா துன்பத்தை
அனுபவித்து
கொண்டிருக்கிறார்கள்.
தங்களை பாதுகாக்க முடியாமலும், தம் குடும்பத்தை பாதுகாக்க எதுவித வழிகளுமின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

*யாருக்காக இந்நிலைக்கு
ஆளானார்கள்?

 

தம் இனம் கௌரவமாகவும்,
மானத்துடனும் ,சுய மரியாதையுடனும் வாழ வேண்டும் என எண்ணியவர்கள்.
அவர்கள்
நினைத்திருந்தால் எம்மை போல் அந்நிய தேசத்தில்
அடைக்கலம் புகுந்து சுகபோக வாழ்வை வாழ்ந்திருக்கலாம். ஆனால் தன்னலம் கருதாது ,நாம் வாழ
தங்கள் உறவுகளையும், உணர்வுகளையும்,
சந்தோசங்களையும் தாரை
வார்த்துப் புதைத்தவர்கள்.
எம்மைப்போலவே இரத்தமும் சதையும் ஆசாபாசங்களும் கொண்ட சாதாரண
மனிதப்பிறவிகள் தான்.ஆனாலும்
எம் இனத்திற்கான முகவரியைப் பெற்றுத்தர
முனைந்தவர்கள்.
இன்று புலம் பெயர்ந்து
நாம் வாழும் இந்த வசதியான வாழ்வின்
பின்னாலும், ஒவ்வொரு தமிழர்களின் வாழ்க்கைக்குப் பின்னாலும் நிச்சயம் ஒரு போராளியின் தியாகமும்
அர்ப்பணிப்பும் இருப்பதை யாரும் மறுத்து விட முடியாது !!

 

உறவுகளே இந்நிலை பற்றிய எம்மக்களின்
இன்றைய நிலைப்பாட்டை
நீங்கள் அறிந்து கொள்ள
உங்களின் புரிதலுக்காக அண்மையிலே நம் கண் முன்னே
நடந்தேறிய ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள முனைகிறோம்.

 

கடந்த ஆவணி மாதம்
தொண்டைமானாறு
செல்வச்சந்நிதி ஆலய தேர்த் திருவிழா உற்சவத்தின் போது நாம்
கைகூப்பித்தொழ வேண்டிய நம் மண்ணின்
மைந்தர்கள்,
முன்னாள் போராளிகள், நம் காவல் தெய்வங்கள்,
அண்ணளவாக 10 பேர் ஆலய முன்றலில் நின்றவண்ணம் ஆங்கே போய் வருபவர்களிடம் பிச்சைக்காக கையேந்தி நின்றனர். இவர்களின் குரலைக் கேட்டும் எம் மக்களோ அவர்களை
கண்டும் காணாதவர் போல விலகிச் சென்றனர்,அதிலும் அவர்களில் ஏழு பேர் பெண்கள்.காய்ந்து போன
உதடுகளும்,ஒட்டிப்போன கன்னங்களும் ,கண்களில்
ஏக்கமுடனும் காணப்பட்டனர்.
அவர்களின் இந்நிலையை
கண்டும் யாரும் அதுபற்றி
அலட்டிக் கொள்ளாமல்
தாம் உண்டு தம் வேலையுண்டு
என வாளாவிருந்தனர்

 

*இந்நிலை தொடர்ந்தால் வரலாறு எம்மை மன்னிக்குமா?

இல்லை.நிச்சயமாக இல்லை.
இதற்கான பதிலை ஒவ்வொரு ஈழத்தமிழனும்
சொல்லியே தீரவேண்டும்.
இல்லையெனில் அர்ப்பணிப்புகளையும்,
தியாகங்களையும்
புரிந்து கொள்ள முடியாத
ஒரு கேவலமான இனமாக நாம் வரலாற்றில் பதியப்பட்டு விடுவோம்.

 

இவர்களுக்கான விடிவுகாலம் தான் எப்போது ?

இவர்கள் வாழப்போகும் காலம் இன்னும் கொஞ்சம்தான் .
அதற்குள்
எத்தனை சவால்களை எத்தனை வேதனைகளை இவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

 

அன்புறவுகளே
மொத்தத்தமிழினமே
வெட்கப்பட்டுத் தலை
குனிய வேண்டிய காலகட்டத்தில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எனவே
நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றெண்ணாது,
நம்மால் இயன்றதை நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுப்போம்.
,நம் இனம்.நம் தொப்புள்க்கொடி உறவுகள்
இவர்களுக்கு நாம் உதவாவிடின் வேறு யார்
உதவ முன் வருவார்?

 

எனவே அன்பான உறவுகளே

மேற்குறிப்பிடப்பட்ட இந்தப் பத்து முன்னாள் போராளிகளும் உதவிக்கரம் தேடி தங்கள் கைகளை நீட்டியுள்ளனர்.

அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்து கொடுக்க காவையடி இணைய உதவும் கரங்கள் அமைப்பு முன்வந்துள்ளது.

எனவே எல்லோரும் இணைந்து தாங்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்கி முடிந்தவரை
அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்.சிறு துளியே பெருவெள்ளமாகும்.

எனவே உதவும் கரங்களின் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து உதவ முன்வாருங்கள்.
நாங்கள் ஒன்றிணைந்து
எம் மக்களின் பசியறிந்து
தாயுள்ளத்துடன்
உதவ முன்வருமாறு
அனைவரிடமும்
அன்புடனும்
உரிமையுடனும்
கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் உதவிகளை வழங்க
தொடர்புகளுக்கு

காலையடி இணைய
நிர்வாகி
பாஸ்கரன்(தம்பன்)
தொலைபேசி :0047-97946854

messenger( pulathil thamban)
அல்லது இணைய மின்னஞ்சல் முகவரிக்கோ
தொடர்பு கொண்டு அறியத்தாருங்கள்.

kalaiyadi.net@hotmail.com

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணலாம். எனவேஇறைவனை தேடி ஆலயத்திற்கு செல்ல
வேண்டியதில்லை.
இவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதன் மூலம்
இறைவன் உங்கள் வாழ்வை பன்மடங்கு
பிரகாசிக்கச்செய்வார்.

நன்றே செய்வோம்-அதை
இன்றே செய்வோம் என
ஒவ்வொருவரும் சங்கல்பம் கொள்வோம்

எனவே கரம் கொடுப்போம்.

வாரீர்!!!!

 

நன்றி
இணைய நிர்வாகம்.
காலையடி நெற்

921..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.