உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

யாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ

தன் தாய் மண்ணில் வாழ்ந்து வரும் பிள்ளைகள் மேலும் துன்பத்தை அனுபவிக்கக் கூடாது, அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்ட யாழ்ப்பாணம் காலையடியை சேர்ந்த அன்பர் ஒருவரால் தந்தையை இழந்த நான்கு பெண்பிள்ளைகளுக்கு அவர்களின் எதிர்கால கல்வியை மேம்படுத்தும் நோக்குடன்,,

,,அவர்களின் பெயரில், தலா 10.000ம் இலங்கை ரூபா வீதம் இலங்கை வங்கியில் வைப்புசெய்து, அதற்கான வங்கிப் புத்தகத்தை காலையடியின் உதவும்கரங்கள் ஊடாக வழங்கி வைத்தார். சாவகச்சேரியில் வாழ்ந்து வரும் இயற்கை எய்திய முன்னாள் போராளி ஒருவரின் பிள்ளைகளுக்கே இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது. கடந்த 01.01.2017 அன்று இயற்கை எய்திய முன்னாள் போராளி ஒருவரின் குடும்பம் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தது .

 

இவர்களின் துயரத்தை அறிந்த காலையடியின் உதவும் கரங்கள் அவர்களின் குடும்பத்திற்கு சுயதொழில் ஒன்றை செய்வதற்கான உதவிகளை ஏற்கனவே வழங்கியிருந்தது. இவர்களின் நிலை பற்றி அறிந்த யாழ் காலையடியை சேர்ந்த அன்பரொருவர், அவர்களின் குடும்பத்திற்கு மேலும் உதவும் நோக்குடன் பிள்ளைகளின் கல்விக்காக மேலதிகமாக உதவ எண்ணம் கொண்டு , அதன்பிரகாரம் காலையடி இணைய உதவும் கரங்களை தொடர்பு கொண்டு தன் உயர்ந்த எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

 

அதற்கமைய சாவகச்சேரி இலங்கை வங்கியில் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, வங்கிப்புத்தகங்களை காலையடி இணைய உதவும் கரங்களின் நிறுவனர் திரு தம்பன் அவர்கள் வழங்கியிருந்தார்.. இன்றைய காலகட்டத்தில் ஒரு பிள்ளைக்கு தேவை சிறந்த கல்வியே என்பதை புரிந்து கொண்டு அவர்களின் எதிர்காலம் இந்த அவனியில் சிறப்புடன் அமைய வழிகாட்டியாக இருந்த இந்த வள்ளலை மனதாரப் பாராட்டி வாழ்த்துகின்றோம் தாய்தந்தையை இழந்த சிறுவர்கள் அநாதரவாகக் கூடாது

 

,அவர்களின் கல்வி சிறப்படைந்தால் தான் அவர்களின் எதிர்காலம் சிறப்படையும், யாரிலும் தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படாது, என்ற மேலான கருத்துடன் இந்தமண்ணில் வாழுகின்ற சிறார்கள் ஒவ்வொருவரும் சிறப்புடன் வாழவோண்டும் என்று என எண்ணிய இந்தப்பெருந்தகை போன்று நாமும் சிந்திப்போம்.

 

இதைத்தான் தமிழ்ப்பெண்புலவர் ஔவையார் நாலடியாரில் அழகுறக் கூறியுள்ளார். நாலடியார் – பாடல் குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு என்று இதன் பொருள் :

 

இங்கே கல்வியினால் நாம் பெறும் அறநெறி தவறாத வாழ்க்கையை ஏனைய பொருட்கள் தரும் தோற்ற அழகோடு ஒப்பிடும்போது, அவை மிக மிக அற்பமானவை . ஏனெனில் நாம் வாழ்வில் வளர்ச்சி பெற கல்வியும் அறமுமே உதவுகின்றன நாம் உண்மை நெறிக்கு ஏற்ப நடுவுநிலைமையுடன் வாழ்கிறோம் என்ற பெருமிதமும் , அப்படி வாழ்வதற்கான நெறிகளைக் கற்றுத்தந்த கல்வியினால் நாம் பெறும் அழகே உண்மையான அழகாகும் என்பதே ஔவைப்பிராட்டியின் அறிவுரையுமாகும்.

 

எனவே கல்வியின் சிறப்பை உணர்ந்து, உதவிய இவரைப்போன்று எம் மண்ணின் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்தால் எதிர்கால பொருளாதாரமே மேலோங்கி நிற்கும், அறிவும்,அறமும் திறனும் கொண்ட குடியாக எம் மக்கள் வாழ்வர் என்பது திண்ணம். வைப்பிலிடப்பட்ட பணம் 4×10000 = 40 000 பாடசாலை உபகரணங்கள் 2700

மொத்தம் 42700

665..views

  • உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்..மிகவிரைவில் நானும் சிறிய உதவி செய்ய ஆவலாய் உள்ளேன்.

  • போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தொழில் வாய்ப்பு /சேவை செய்யும், காலையடி உதவும் கரங்கள் மேலும் தொடர பண் உலகம் வாழ்த்துவதுடன், உதவி செய்ய ஆர்வத்துடன்/ ஆவலாய் காலையடி உதவும் கரங்களுக்கு கை கொடுத்து ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து உதவிகளை
    பண் உலக மக்கள் காலையடி உதவும் கரங்களுக்கு உதவி கரம் நீட்டும் என
    எதிர்பார்க்கிறார்கள். ,,,,,,

    நன்றியுடன்

    பண் உலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.