உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

இது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ

கோகிலவதனி கிளிநொச்சியில் வசித்துவருகிறார். 3 பிள்ளைகளின் தாயாரான இவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவர்,அத்துடன் கணவரை இழந்த வறுமையில் வாடும் விதவைத்தாய் என்பதால் தகவல் அறிந்து காலையடி குளுமம் இவரின் வீடு நோக்கி விரைந்தது .அங்கு அவரின் கஸ்ரங்களை கண்டும் கேட்டும் அறிந்துகொண்டது. பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த யுத்தத்தின்போது எனது கணவர் காயமடைந்து இடுப்பிற்கு கீழே
இயங்காமல் போய்விட்டது, அவரை பாதுகாப்பதற்க்கு பெரும் துயரப்பட்டேன், ஆனால்முடியாமல் போய்விட்டது .இந்த ஆண்டு ஆரம்பத்தில் நான் அவரை இழந்துவிட்டேன், என கலங்கிய கண்களுடன்
தன் நிலையை நம்மிடம் விவரித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

காலையடி உதவும் கரங்களின்
அமைப்பினர் வழங்கிய உதவி தன் வாழ்வின் வரப்பிரசாதமாய் அமைந்தது. என் வேண்டுகோளினை ஏற்று காலையடி இணைய உதவும் கரங்கள் எனக்கு உதவ முன்வந்தது. அதன்பிரகாரம் நான் கேட்டுக்கொண்டபடி, ஏற்கனவே
நடாத்தி வந்த அங்காடிக்கு பொருட்கள் இட்டு ,அதை மீள இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டேன். என் கோரிக்கையை ஏற்று புலம்பெயர்ந்து வாழும் காலையடி பனிப்புலம் உள்ளடங்கலான மக்களின் நிதி உதவியுடன் அமைத்துக்கொடுத்தார்கள்
இந்த வேளையில் எம்போன்ற நிர்க்கதியாக நிற்கும் உறவுகளுக்கு
உதவும் நல்ல உள்ளம் கொண்டவர்களை அன்புடன் நினைந்து
நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என நெகிழ்ச்சியுடன் தன் நன்றியை கூறினார்.

அதன்பிரகாரம்
கடந்த 13.09.2017 அன்று சம்பிரதாய பூர்வமாக காலையடி இயக்குனர்
திரு நிறஞ்சன் அவர்களால் அங்காடி மீளவும் புதுப்பொலிவுடன் திறந்துவைக்கப்பட்டு , வாழ்வாதாரத்திற்கான அடித்தளத்தை அமைத்து உதவி வழங்கப்பட்டது.

அதன்படி
அரிசி வகைகள், மா , சீனி பருப்பு உள்ளடங்கலாக சுமார் 111 பொருட்கள்
பெறுமதி 119004.00
மரக்க்கறி தேங்காய் கொள்வனவிற்க்கு பணமாக 5000.00
மேசை 3400.00
பனர் போட் 5463
தொலைபேசி அட்டை
5000.00

பொருட்கள் ஏற்றியது போக்கு வரவு செலவு
3000.00

மொத்த செலவு
140567

 

கருணை கொண்ட அன்பு உள்ளங்கள்,பெயர் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன,

சுப்பிரமணியம் -சுபாஷ்கர் ,,ஒஸ்லோ நோர்வே 500 ,க்ரோன்,

கிருத்திகன்-தஷாஜினி .ஒஸ்லோ நோர்வே 500 க்ரோன் ,,

சுவிஸ் வின்ரத்தூர் உதவும் கரங்கள் ஊடாக ,பாலச்சந்திரன் (சந்துரு) குடும்பம் – 150 சுவிஸ்  பிரான்க்,முரளி -250 சுவிஸ்  பிரான்க்,யசோ bridal சுவிஸ் 25000 ,ரூபா

செல்வம் சுதா, 200 யூரோ ஜேர்மன் ,

2,767..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.