உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

வலுவடையும் தாழமுக்கம் – நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு! புகைப்படங்கள்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க தாழ்வு நிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பில் வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மட்டத்திலான அவசர கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் கூட்டங்களை நடத்தியுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைவாக இந்த கூட்டம் நடைபெற்றது.

அடுத்து வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கை வானிலை அவதானிப்பு நிலையத்தினால் எதிர்வு கூறப்பட்டது.இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தற்போது 1100 கிலோமீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான முன்னாயத்த மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், சூறாவளி போன்ற அனர்த்தங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தாக்கம் ஏற்படுத்துமாயின் சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்களை எவ்வாறு குறைத்துக்கொள்வது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில்கிளிநொச்சியில் அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த கலந்துரையாடல் கிளிநெர்ச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் தலைமையில் இடம்பெற்றது.

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பில், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் சிவில் அமைப்புக்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமாயின் அவற்றுக்கான முன்னாயத்தம் மற்றும் அவசர நடவடிக்கைகள் நிவாரண சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.சூறாவளியால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்களை எவ்வாறு குறைத்துக்கொள்வது எனவும், விசேடமாக கடற்தொழிலாளர்கள் மற்றும் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு வெளியேற்றுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பாக அவசர அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு தொலைபோசி இலங்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 0212285330, 0772320528 இந்த இலக்கங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளமுடியும்.

207..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.