உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

ஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,,

ஓயாமல் சுழன்று ,

ஏழைகளின் வாழ்வை

குளிரவைக்கும்

காலையடி இணையமே..

 

உதிர்ந்து காய்ந்து

போக இருந்த

விடிவெள்ளி வீரர்களின்

கவலைகளை

துடைத்தெறிய வந்து

உதித்த கதிரவனே நீ

வாழி உன் புகழ் வாழி

 

கதிரவனின் கதிர்களை

கண்டு கடல் கண்ணீர்

விடுவதில்லை நீயும்

இடையூறுகளை கண்டு

கவலை கொள்வதில்ல

 

மண்ணில் மறந்து

போனாலும் காயம்

கண்ட இனம் உரமென

மீண்டும்

முளைத்திடவே இரவு

பகல் என உழைக்கும்

உன் சேவை வாழ்க

வளர்க

 

உதிர்ந்து போகும்

பூக்களாய் உன் சேவை

மலரவில்லை

வாடி நிக்கும்

மானிடர்களுக்கு

வாழ்வு கொடுத்து

சுவாசம் கொடுத்து

காவல் புரியும்

காலையடி உதவி கரமே

ஏழாவது வயதிலே

எட்டி கால்

வைக்கையிலே

ஈழத்திலே ஏழைகளின்

அன்பு உன்னை

வாழ்த்திடவே

துடிக்கிறதே உன் உதவி

கிடைத்த மனங்களும்

உணர்வாய் உன்னை

காதலித்து/உன்

ஆயுளுக்காய்

இறைவனை வேண்டி

நிற்கின்றன

 

காலையடி உதவி கரமே

நீண்டு கொண்டே

செல்லும் உன்

சேவைகள் தாயகம்

எங்கும் கால் பதித்து

தடுமாறி போகும்

எளியவரின் வாசல்

கதவை

திறந்துஉன்

நெஞ்சமெல்லாம்

பஞ்சம் இல்லா வசந்தம்

உருவாக்கி சொந்த

நிலங்களுக்கு மழை

பொழிய

காத்திருக்கும் மழை

மகள் போல

 

சொந்த இனத்தை வாழ

வைக்கும் மழையாக

சஞ்சரிக்க

வேண்டுமென மனதார

வாழ்த்தி

விடைபெறுகிறேன்

உங்கள் கவி அகிலன் ராஜா

718..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.