உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

பசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ? ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ? வீடியோ, படங்கள் )

பசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ? ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ?… எண்ணங்கள் ஓடும் எனக்குள், ஆயிரம் கேள்விகள்… ஏனோ விடையில்லை…… எந்தப் பாவமும், எந்தத் தவறும் நான் செய்யவில்லை… ஏறாத கோவில்கள் ஏறித்தான் இறங்குகிறேன் நாளும்… என்னோடு ஒட்டிய என்னுயிர் பசியில் அழுதிட, ஏசுகிறேன் இறைவனை, ஏற்றம் பெறாதோ எங்களின் இந்த வாழ்வு……

ஏங்கிய விழிகளுடன் மூளாய் வேரன் பகுதியில் வறுமையின்
கோரப்பிடியில் வசிப்பதற்கு நல்ல குடிசையின்றி, உண்ண சத்தான உணவுகளின்றி அல்லல்படும் இவர்களின் நிலை கண்டு , அவர்களின் வாழ்வாதாரத்தில் ஒரு சிறு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, பன்னாட்டு நிறுவனமான
world vision தொண்டு நிறுவனத்தின் பணியாளர் திருவாளர்
வென்சஸ் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, காலையடி இணையம் இவர்களுக்கு உதவ முன்வந்தது.
அதன்படி காலையடி இணைய உதவும்கரங்கள் எட்டாவது அகவையில் கால் பதிக்கும் இவ்வேளையில், இக்
குடும்பத்தினருக்கான
உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
தைத்திருநாளை முன்னிட்டு இவ்வருட தைப்பொங்கலை இவர்கள் இனிதே பொங்கி மகிழ, அவர்களின் குடும்பத்தினருக்குத்
தேவையான பொங்கல் பொருட்களுடன்,
புத்தாடைகள்,மற்றும் உலர் உணவுகளான
மைசூர் பருப்பு ,சோயா,
கோதுமை மா,அரிசி,சீனி
உட்பட ஊட்டச்சத்து நிறைந்த பால்மாக்கள் போன்ற 25000 இலங்கை ரூபாய் பெறுமதியான
பொருட்கள் வழங்கி
வைக்கப்பட்டன.
இதற்கான நிதி உதவியினை சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும்
அழகு கலை நிபுணர் திருமதி
யசோதா ஈஸ்வரன் அவர்கள் வழங்கியிருந்தார்.
யசோதா ஈஸ்வரன் அவர்கள் ஏற்கனவே
உதவும் கரங்களின் மூலம் பல நிதி உதவிகளைப் புரிந்துளளவர் என்பது இங்கே குறிப்பிடப்படத்தக்கது.

அத்துடன் இந்தக்
குடும்பத்தினருக்குத் தேவையான உடைகளை
உடைகளை கொள்வனவு
செய்ய ஸ்ரீ முத்துமாரி புடவையகத்திற்குச் சென்ற போது,கடையின் உரிமையாளர் அவர்கள் ,மலிவு விலையில் ஆடைகளை
தந்தது மட்டுமல்லாமல்
ஆடை ஒன்றினை முற்றிலும் இலவசமாகவும் வழங்கியிருந்தார்.அது
மட்டுமன்றி குழந்தைகளுக்குத் தேவையான 500 இலங்கை ரூபா பெறுமதியான பிஸ்கட் பைக்கற்றுகளையும் வாங்கி வழங்கியிருந்தார்.இந்த வேளையில் அவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன் இந்நிகழ்வுகள் யாவும் இனிதே நடைபெற பூரண ஒத்துழைப்பை வழங்கிய world vision
நிறுவனம் மற்றும் வேரம்
சனசமூக நிலையத்தினர்க்கும்,
யசோதா ஈஸ்வரன் அவர்களுக்கும் காலையடியின் உதவும் கரங்கள் அமைப்பு தனது
நன்றியினை தெரிவித்துக்
கொள்கிறது.

இப்படிப்பட்ட தன்னார்வலர்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு கோரிக்கைக் குரலின் பின்னாலும், தீர்க்கப்படாத நம் சமூகச் சிக்கலின் பல விடயங்கள் மறைந்திருக்கின்றன. ‘அறம் செய விரும்பும்’ நல் உள்ளங்களின் உதவியோடு அந்த இருள் அகற்றும் பணி உதவும் கரங்களினால் தொடர்கிறது! தொடரும்.
அன்பான மக்களே
நம்மைப் பற்றியும்,நம் குடும்பம்,நம் பிள்ளைகள் என சிந்தித்துக் கொண்டிருக்காமல், நம் பார்வையை சற்று விசாலமாக்குவோம். நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பார்ப்போம். நமக்கும் கீழே பசி, பட்டினியால் வாடும் உள்ளங்களை நினைத்துப் பார்ப்போம்.

3,226..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.