உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்

காலையடி இணையம் மற்றும் காலையடி இணைய உதவும் கரங்கள் அமைப்பு. எட்டாவது அகவையில்.. அன்பு உறவுகளே
காலத்தின் கோலத்தில் சிதறுண்ட நாம், அதே காலத்தின் வேகத்தில் வளர்ந்த இலத்திரனியல் ஊடாக இணைந்து கொள்ளும் முயற்சியின் பயணத்தின் தொடராக, எம் உறவுகளின் உதவிகள், ஒத்தாசைகளுடன் நீண்ட பயணமாக பொது நோக்குடனும் , தாயக உறவுகளின்
வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முயற்சியிலும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் , வளர்ச்சிக்காகவும் சமூகபணியை மேற்கொண்டு , பக்கசார்பின்றி செயற்பட்டு வருகின்றோம்.

காலையடி இணையமானது தைத்திருநாளில் இனிதே ஆரம்பிக்கப்பட்டு,இன்று உங்கள்
மேலான அன்புடனும், ஆதரவுடனும் தமது எட்டாவது அகவையில் காலடி பதிக்கின்றது , என்ற மகிழ்ச்சியான செய்தியை
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை
கொள்கிறோம்.

 

இந்த வேளையிலே

கடந்து வந்த இந்த எட்டு ஆண்டுகளிலே

அன்புறவுகளே…..

உங்கள் அனைவரின் உதவிகளும்,
ஒத்தாசைகளும் இருந்ததால் தான் எம் இலக்கை நோக்கி எம்மால் கணிசமான அளவு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடிந்தது ,
என்பதை இந்த வேளையிலே பெருமையுடன்
உங்களுடன் பகிர்ந்து
கொள்கின்றோம்.

குறிப்பாக எமது பயணத்தில் எம்மோடு கைகோர்த்த எம் பண் ஊர் மண்ணின் மைந்தர்கள், நோர்வே வாழ் தமிழ்
உறவுகள், மற்றும் அண்டைய நாடுகளில் வாழ்ந்து வரும் கருணை உள்ளம் கொண்ட நல் உறவுகள் ,இணைய
அபிமானிகள், உதவிக்கரங்களை நீட்டும்
போதெல்லாம்
ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவிடும்
எம் உறவுகள், நண்பர்குழாம் என எல்லோரையும் எம்மனத்தில் இருத்தி தொடர்ந்து செல்கிறோம்…..

நம் தாய் தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களைத் திறந்தவர்களின் குடும்பங்கள் , யுத்த காலத்தில் தம் அவயவங்களை இழந்தவர்கள் ,
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என பேரிடர்களை சந்தித்த எமது தொப்புள்க்கொடி உறவுகளைத் தேடித் தேடி ,தனது உதவிகளை வழங்கி வருகிறது காலையடி இணையத்தின் உதவும் கரங்கள் அமைப்பு .

அந்த வகையில் இந்த உதவும் கரங்கள் அமைப்பினைத் தொடர்ந்து செவ்வனே இயங்குவதற்கு ,அனைத்து விதமான உதவிகளையும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் எமது உறவுகளே வழங்கி வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக எம் தாய் தேசத்தின் பன்னூர் மக்களே அதிக பங்களிப்பிணை வழங்கி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

நாம் கிளைகள் போல அங்காங்கே படர்ந்திருந்தாலும், நம் வேர் என்றும் ஒன்றே என்பதை அனைவரும்
அறிவோம்.

 

பனி குளிர் பாராது பல இன்னல்களுக்கும், கஸ்ரங்களுக்கும் மத்தியில் உழைக்கும் பணங்களில் ,எம் மக்களின் தேவை கருதி வாரித்தரும் புலம்பெயர் மக்கள் அனைவருக்கும் ,
காலையடி இணையம், மற்றும் உதவும் கரங்கள் அமைப்பும் இணைந்து வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்வதுடன் ,தொடர்ந்தும் எம்முடன் கை கோர்த்து எமது மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் ,சிறுவர்களுக்கான கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் தோள் கொடுத்து நிற்குமாறும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

எம்மக்களை இவ் இடர்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது.

 

புலம்பெயர் உறவுகளாகிய நீங்கள் எமக்கு அளித்த பேருதவியினால் தான் பல தடங்கல்களையும் தாண்டி எம் பயணம் தொடர்கிறது. இதேபோன்று எப்போதும் எம்முடன் இணைந்து ,எம் உறவுகளின் அவல வாழ்வை கடக்க உதவுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

தங்கள் அன்பிற்கும்,ஆதரவிற்கும்
இருகரம் கூப்பி நன்றிகளை
தெரிவிப்பதுடன்,
உங்கள் கரங்களை
இறுகப்பற்றிக்கொண்டு
தொடர்ந்தும்
பயணிப்போம் ,
ஆதரவு தாருங்கள் .

நன்றியுடன்
காலையடி இணையத்தளம், மற்றும்
உதவும் கரங்கள் அமைப்பு

1,181..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.