உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கனேடிய தமிழர் மரபுரிமை மாதத்தில் செவிப்பறை கிழிக்க வந்த கொடியும் – தேம்பியழும் தமிழரும். படங்கள்

கடந்த 16ம் திகதி அவசர ஆந்தரமாக ஆரவாரமின்றி முறைக்கு மாறாக Canadian Tamil Heritage Society வெளிவிட்ட தமிழர் மரபுரிமை கொடியும் அதனது வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளும் உள்ளடங்கி சமூக நலன் விரும்பிகளது பல்வேறுபட்ட எடுத்தியம்பல்களுடன் சர்வதேச தமிழர்களது பார்வைக்காக கீழ்வரும் விமர்சன வரைபு தரப்படுகிறது. இந்த வரைபு முற்றிலும் சமூகநலன் சார்ந்த கருத்துக்களே தவிர வேறு எந்த நோக்கங்களும் கொண்டதல்ல என்பதை புடமிட்டு விடயத்துக்கு வருகிறோம்.

நீங்கள் வடிவமைத்துள்ள இந்த Canadian Tamil Heritage கொடியில் நிறையவே குறைபாடுகள் உள்ளது.. இக்கொடியை வடிவமைப்பது Canadian Tamil Heritage Society யினது தனிப்பட்ட வேலையல்ல பொதுவாக பகிரங்க அறிவித்தல் செய்து எமது சமூகத்திலுள்ள திறமை வாய்ந்த கலை வல்லுனர்களது கொடி வடிவமைப்புகளை பெற்று அவற்றுள் ஒன்றை தெரிவு செய்து சமூகத்தினுடைய வரலாற்று ரீதியிலான பாவனைக்கு விடவேண்டும்.

அதுவும் பகிரங்க கூட்டமொன்றில் ஊடகங்கள் முன்னிலையில் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புற வெளியிடவேண்டும். Canadian Tamil Heritage கொடியில் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது பறை மேளத்துக்கோ அல்லது நீங்கள் கூறும் முரசு வாத்திய கருவியே அல்ல – மாறாக தை மாதம் முழுவதும் பல பிரதேசங்களிலும் ஏற்றப்படவுள்ள இவ் வரலாறுக்கொடியில் தைப்பொங்கலோடு சம்பந்தப்பட்ட குறியீடுகளில் ஒன்றை அல்லது போதுவாக வள்ளுவர் பெருமானாரது உருவம் கொடியின் நடுவில் நிலை நிறுத்தப் படவேண்டும் என்பது சமூகத்திலுள்ள பலரது சுட்டிக் காடுத்தலாகவும். வேண்டுதலாகவும் உள்ளது.

அனைத்தும் நிறைந்து இப்படி ஏன் இருக்கக்கூடாது?

தை முதலாம் திகதி அதாவது ஜனவரி 1 ஆரம்பமாகும் Canadian Tamil Heritage நிகழ்வுகள் பல நடைபெற்றுள்ள நிலையில் நீங்கள் ஜனவரி 16ம் திகதி இக்கொடியை இரகசியமாக மக்கள் மத்தியில் திணிப்பதன் நோக்கம் என்ன? Canadian Tamil Heritage Society எனப்படும் நீங்கள் ஒளித்துப் பிடித்து விளையாடும் சிறுபிள்ளைத்தனமல்ல Canadian Tamil Heritage நிகழ்வுகளும் அதுசார்ந்த வரலாற்று பாதை வகுப்புகளும். என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். தவறுகளையும் குறை நிறைகளையும் சுட்டிக் காட்டவேண்டியது சமூக அக்கறையுள்ள ஊடகங்களதும் சமூக நலன் சார்ந்து வாழும் ஒவ்வொரு தனி மனிதனதும் கடமையாகும்.

பொதுவான அமைப்புகளில் தற்காலிக பதவிகளில் உள்ள உங்களில் சிலர் தமது பதவிக் காலத்தில் உங்களது பெயர் புகழுக்காக அவசர அந்தரப்பட்டு எதையாவது செய்துவிட்டுப்போக நினைக்கிறீர்கள். அது பொதுவான ஆசைதான் ஆனாலும் பொதுப்பணி என்ற பெயரில் நீங்கள் முறை தவறிச் செய்யும் சில வரலாறு சார்ந்த சேவைகள் எமது எதிர்காலச் சந்ததியினரது.வரலாறு பற்றிய அறிதலை மாற்றியமைத்து எமது பாரம்பரிய வரலாறு மாறுபட்டு போகுமென்பதை உணருங்கள்.

இக்கொடி வடிவமைப்பில் தமிழை கற்றுக்கொடுக்கும் தமிழ் பாடசாலை ( சர்வதேச ரீதியாக கிளைகளைக்கொண்டது) ஒன்றின் ஆசிரியர்கள் உள்ளடங்கலாக ஒருசில மேலதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். உங்களில் பல ஆசிரியர்களுக்கும் உங்களிடம் கல்விகற்று முதன்மை மாணவர்களாக வெளியேறி ஏனைய சிறார் மாணவர்களை வளி நடாத்தும் சில மாணவர்களுக்கும் இந்த Tamil Heritage நிகழ்வுகளில் காடசிப் படுத்தப் படும் பொங்கல் விழாவோடு சம்பந்தப்பட்ட பாத்திரப் பொருட்களுள் உள்ள அகப்பைக்கும் மோர் கடையும் மத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

பொங்கல் பானையோடு அகப்பைக்கு பதில் மத்தை வைத்து வரலாறு கற்ப்பிக்கும் எமது சமூகத்துக்கு வரலாற்று பதிவாக்கப் படவேண்டிய பொதுக்கொடி ஒற்றை தயாரிக்கும் முறையை தகுதிவாய்ந்த வல்லுநர்கள் வடிவமைப்பாளர்களிடமிருந்து பெற்று அதில் ஒன்றை ஏன் தெரிவு செய்யக் கூடாது? அவ்வாறு தெரிவு செய்யப்பட்டும் கொடியை முறைப்படி நீங்கள் ஏன் வெளியிட்டு அங்குரார்ப்பணம் செய்து மக்களிடம் அறிமுகப்படுத்தக் கூடாது? இவை அனைத்துக்கும் மாறாக அவசர அவசரமாக முறைதவறி Canadian Tamil Heritage Society என்ற பெயரில் உங்களுக்கு விரும்பிய இடங்களில் மட்டும் காலம் தாழ்த்தி இக்கொடியை ஏற்றவிளைந்ததன் நோக்கம் என்ன? கோடி பற்றிய சர்ச்சை 2016ல் முதலில் எழுந்தது.. மீண்டும் மாரு வடிவமைப்பில் 2018 தை 16ம் திகதி கொடியின் மாதிரி வரைபு வெளிவந்தபோது எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்கு முகமாக – இந்தக் கொடியில் நடுவில் இருப்பது வீரத்தை பறை சாற்றும் முரசு என கூறி கவி எழுதும் ஒருவரை பிடித்து அதிலுள்ள ஏட்டுச் சுவடுக்கும் முரசுக்கும் உலக வரை படத்துக்கும் அதன் நிறத்துக்கும் விளக்க கோவை வேறு எழுதியுள்ளீர்கள். கோடியில் நடுவில் இருப்பது முரசுதானா என பாருங்கள்.. அது முரசே கிடையாது. முரசின் தோற்றமும் கிடையாது..

தமிழர் மரபுரிமை கொடிக்கு தகுதியானது எது??

சமூகத்திலிருந்து எழும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் வெளிப்படையான பதிலளிக்க விளக்கமளிக்க முடியாத நீங்கள் இந்த வரலாறு சார்ந்த கட்டமைப்புகளில் இருந்துகொண்டு உங்களது மறுபக்கங்களை சிலர் திரும்பிப் பார்ப்பது நல்லது.

அதைவிடுத்து உங்களை நோக்கி பொதுநலன் சார்ந்து கேள்விகளை கேட்ப்போரையும் விளக்கம் கேட்ப்போரையும் – அவர் தேசியத்துக்கு எதிரானவர்போல கிடக்குது.. அவர் இப்ப பக்கம் மாறிவிட்டார் போலகிடக்குது. துரோகம் செய்கிறாற்போல கிடக்குது என்று பல்லவி கூறி நீங்கள் செய்யும் காரியங்களை நியாயப் படுத்திவிட்டு போகலாம் என தயவுசெய்து எண்ணாதீர்கள்.

இந்தக் கொடி முறைப்படி மறு சீரமைப்பு செய்யப்பட்டு தை மரபுத்திங்கள் பொங்கல் விழா சார்ந்த சின்னங்கள் தாங்கி தை மாத மரபு தாங்கி வராத வரையில் முழுமனதோடு தொன்மை போற்றும் தமிழர்களால் அங்கீகரிக்கப்படாது என்பது கவலைதரும் விடயமே.

தமிழர் சமூக நலன் விரும்பிகள்.

கனடா.

236..views

  • தமிழர் மரபுக் கொடி, தமிழர்; பாரம்பரியம், பண்பாடு, மரபுசார் விழுமியங்கள் போன்றவைகளின் குறியீடுகளாக சித்தரிக்கப்பட்டு, ஆகக் குறைந்த கோட்டுருவத்துடன் ‘செம்மையுற’ அமைக்கப்பெறல் வேண்டும். இதற்கான சிறப்புக்குழு அமைக்கப்பெற்று மிகுந்த ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டு, தீர்மாங்களின் பெறுபேறு விதிகளின் அடிப்படையில், வெளிவாரியாக போட்டிகளில் தேர்வுசெய்யப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பேறாக அமைக்கப் பெறுவதே சிறப்பு தரும். இன்றைய இளைய தலைமுறைக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துத்தான் பாருங்களேன்! வாழ்க தமிழ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.