உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

மரண அறிவித்தல் பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம்,

பணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள் 22.02.2018 அன்று பணிப்புலத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; அமரர்களான கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;

அமரர்களான கந்தையா (சாத்திரியார்) – சரஸ்வதி தம்பதியினரின் பாசம் மிகு மருமகனும்;

23.12.2017 அன்று சிவபதம் எய்திய புஷ்பராணி (குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்;

திரு. மகேஸ்வரன்,(நோர்வே), திரு. நகுலேஸ்வரன் (நோர்வே), திருமதி. மல்லிகா (டென்மார்க்), திரு. குருபரன் (சுவிஸ்), திருமதி. மஞ்சுளா (கனடா), திருமதி மாலதி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்;

மதிவதனா (நோர்வே), கலைவாணி (நோர்வே), உதயகுமார் (டென்மார்க்), சிவசக்தி (சுவிஸ்), திரு லோகநாதன் (கனடா), சிறீவண்ணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்;

பிரியங்கா, வித்தியாகர், யனார்தன், சோபிகா, யவீர், தணிகை, சுமூகன், சிவானுசா, கம்சலா, சிநேகா, சாத்வீகன், பிரவீனா, ராகவி, தசனா ஆகியோரின் பாசம் மிகு பேரனாரும்;

ராகவி, தசானா, ஆகியோரின் பாசமிகு பூட்டனாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப் படுகின்றனர்.

907..views

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள் 22.02.2018 அன்று இறைவனடி சேர்ந்தார் . என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்:

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
    வானுறையும் தெய்வத்துள் சென்ற
    அமரர் கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி)
    எங்கள் சித்தப்பா …
    அவர்கள் 22.02.2018 ல் சிவபதம் எய்தினார்
    என்ற சேதி அறிந்து மிகவும் துயருற்றோம்.
    அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
    எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,
    அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
    அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.