உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

மரண அறிவித்தல் திரு சுப்புரமணியம்  திருக்கேதீஸ்வரன் 27.02.2018

ஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் – உயர்திரு. கந்தசாமி திருக்கேதீஸ் அவர்கள்:

ஊரில் நிகழும் எல்லா நிகழ்வுகளிலும் அவையில் முன்னிருந்து சிறப்பித்த எமது ஊர் சமூக சேவையில் முன்னோடியாக திகழ்ந்த உயர்திரு.

கந்தசாமி திருக்கேதீஸ்வரன் அவர்கள் 27.02.2018 செவ்வாய்க்கிழமை சிவபதம் எய்திய செய்தி எல்லோரையும் அதிரவைத்து விட்டது.

சிறந்த கல்விமான், ஊருக்கே பெருமை தேடித் தந்த உத்தமன், தாம் அதிபராக இருக்கும் பாடசாலையில் முனேற்றத்திற்காக அயராது உழைத்து தம் பணிக்கு பெருமை சேர்த்தவர். இனிய ஆனால் எளிமையான முறையில் வாழ்ந்து காட்டியவர்.

அன்னாரின் பிரிவு எமது ஊரை மட்டுமல்ல அயல் ஊர்களிலும் வாழ்பவர்களை ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டது. ஆன்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்போமாக

1,219..views

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

    எமது ஊர் ஓர் தலை சிறந்த கல்விமானை இழந்து தவிக்கிறது .
    அன்னார் மண்ணுலகில் மாண்புடன் வாழ்ந்து ,
    இல்லறத்தை நல்லறமாய் நடாத்தி,
    நன் மக்களை நலமுடன் வாழ வழி நாடத்தி ,
    கல்வித்தொண்டா ஆற்றி வந்த வேளை ,
    காலன் உங்களை கவர்ந்த சேதி
    அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
    எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
    அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

  • கல்வி அறிவை செதுக்கிய சிற்பி //
    காலனின் பிடியில் சிக்கி பிரிந்து சென்றதே //
    காலம் மெல்லாம் கரையாத கல்வியை சமுகத்திற்கு கொடுப்பாய் என்று இருக்க//
    கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு
    நீங்கள்
    விரைந்து சென்றது ஏன்??
    சாதனைகள் புரியும் வயதில் // சத்தம் இன்றி சாந்தியாகி போனது ஏன் //
    அன்று முதல் இன்று வரை உங்களுடன்
    பேசிய
    முகங்கள் வாடி போகவில்லை//
    இன்று உங்கள் துன்முகத்தை
    காண வைத்து அமைதியாகி போனீங்களே
    //சுய நலம் இன்றி உழைத்த குரல் // எட்டாத உயரத்துக்கு பறந்து
    போனாலும்//ஆறுமுகவித்தியாலைய
    அதிபரின்
    ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்
    அகிலன் ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.