உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

பிறந்த நாளை முன்னிட்டு நோர்வே ஒஸ்லோவில் இருந்து கபில் வழங்கிய உதவி, புகைப்படங்கள் காணொளி

காலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக, மீண்டும் ஓர் குடும்பத்தினர்க்கான வாழ்வாதார உதவிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வசித்து வரும் எப்சியா குடும்பத்தினருக்கான வாழ்வாதார உதவிகள் 28/02/2018 இன்றைய தினம் ,தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. எப்சியா குடும்பத்தினர் நிலையை கேள்வியுற்ற, காலையடி இணைய உதவும் கரங்கள் அமைப்பினர், அவர்களின் வசிப்பிடத்தை நோக்கி விரைந்தனர், வசிப்பதற்கு கூட நிரந்தர வீடு அற்ற ,

வாழ்வதற்கு எந்த வாழ்வாதாரமும் இன்றி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட அவர்களின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது.அது மட்டுமன்றி குடும்பத்தலைவர் பாரமான ,கடின வேலைகள் எதுவும் செய்ய முடியாத நிலையில், பெரும் காயங்களுக்கு உள்ளானவராகவும், காணப்பட்டார்.இந்த அவல நிலைகளை கண்ணுற்ற நம் அமைப்பினர், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவது என தீர்மானித்தனர்.

அதன்படி நோர்வே ஓஸ்லோவில் வாழ்ந்து வரும் ,கபில் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு .அவர்கள் வழங்கிய ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியுடன் குளிர்பானங்கள் மற்றும் தேநீர் விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்றை ,யாழ் முல்லைத்தீவு பிரதான வீதியின் ,மந்துவில் பகுதியில் அமைத்து கையளிக்கப்பட்டது,அது மட்டுமன்றி தளவாடங்கள், மேசைகள், கதிரைகள் மற்றும் வாளி, தேநீர் குவளைகள் சீனி, அங்கர் பால் மா, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட பால் வகைகள், உட்பட பிஸ்கட் வகைகள் பழங்கள் என்பனவும் வாங்கி வழங்கப்பட்டன,

அதன் விபரங்கள்

கடை அமைப்பதற்கான செலவு 57770

பொருட்கள் 21460

தளபாடங்கள் 14450

பழக்கலவை இயந்திம் 3650

வாளி தேனீர் குவளை 2465

பழங்கள் 600

சிற்றூண்டி செலவுகள். 900

பொருட்கள் ஏற்றிய 1200

போக்குவரத்து 1500

திறப்பு விழா பொருள்380

மொத்த செலவு 104375

பிறந்த நாளை முன்னிட்டு நோர்வே ஒஸ்லோவில் இருந்து கபில் வழங்கிய உதவிகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்களும் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளன. இந்த குடும்பத்தின் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வழிகாட்டியாக இருந்த கபில் அவர்களுக்கு, இணையத்தின் சார்பிலும்,காலையடி இணைய உதவும் கரங்களின் சார்பிலும், அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். கபில் அவர்கள் வாழ்வில் நோய் நொடிகளின்றி,பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழவும், சிறந்த கல்விமானாகவும் உலகம் போற்றும் உத்தமனாகவும் வாழ்ந்து பெற்றோருக்கும், நாட்டுக்கும் நல்மைந்தனாகவும் வாழ வேண்டுமெனவும் மனதார வாழ்த்துகிறோம்.

2,289..views

  • Jegatheeswaran:

    முதலில் கபிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அருமை அருமையான நல்ல உதவி செய்து இருக்கிறீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்.

  • Kalaiyadinet:

    உன் பிறந்தநாள்
    நீ பிறந்ததாக மட்டும்
    இல்லாமல்,
    நல்ல செயல் செய்ய
    பிறந்த ஆரம்பமாக
    இருக்கட்டும்,,

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கபில், உன் பிறந்த நாள் அன்று வறுமையில் வாழ்த்து கொண்டு இருந்த குடும்பம் ஒன்றுக்கு வாழ வழிகாட்டி இருக்கிறியள் வாழ்க வளமுடன் ,,

  • கடவுளின் இருப்பிடம் கல்லிலோ, மரக்கட்டையிலோ, மண்ணிலேயோ இல்லை.. கபில் போன்ற நல்ல மனிதர்களின் உணர்ச்சிகளிலும், எண்ணங்களிலும் தான்!

    கபிலனின் அழகான இந்த பிறந்த நாளில்.
    கவலை மறந்து. மகிழ்ச்சி பிறந்து.
    சோகம் தளர்ந்து. புன்னகை மலர்ந்து.
    உடல் ஆரோக்கியமும் ,
    மன நிம்மதியும் ,
    செல்வச் செழிப்புடனும் ,
    குடும்பத்தினரின் அன்புடனும் ,
    ஆதரவு பற்றுடனும்,
    கடவுள் அனுகிரகத்துடனும்
    எவ்வருடமும் அமைந்திட
    இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் …
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! கபிலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.