உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

ஸ்ரீதேவியின் உயிரை பறித்த ஜாதகம்! திடீர் மரணம் நடக்கும் என்பது உறுதி..?

இந்திய சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருகிறது.

அவருடைய மரணம் குறித்து பல்வேறு காரணங்கள் இன்று வரையும் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த சர்ச்சைகளும் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

அவரின் இறப்பு பிறக்கும் முன் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.

ஏன் இப்படி நடந்தது?

இவ்வளவு சீக்கிரம் அவர் இறப்பதற்கு ஜாதக ரீதியான காரணங்கள் என்ன? எப்படி இறந்தார் என்ற பல சந்தேகங்கள் நமக்கு இருந்தாலும் ஏன் இறந்தார் என்றும் கொஞ்சம் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஸ்ரீதேவி மரணம் ஸ்ரீதேவியின் மரணத்துக்கு குடி, கார்டியாக் அரெஸ்ட் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏன் வேறுவிதமான சந்தேகங்கள் கூட எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.

பலருக்கும் இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதை நம்புகிற சிலருக்கு ஸ்ரீதேவியின் ஜாதக அமைப்பு பற்றிய அதளிவைத் தருவது தானே நியாயம்.அப்போதுதானே அவர்களுக்கும் சிறிது ஆறுதல் கிடைக்கும்.

ஸ்ரீதேவியின் ராசி – ரிஷபம்

ஸ்ரீதேவியினுடைய ராசி ரிஷபம், லக்கினம்- கடக லக்கினம். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆவார்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு வருகிற 2019 ஆம் ஆண்டு வரையிலும் சுயபுத்தி நடக்கிறது. அது மற்ற எல்லா யோக ஸ்தானங்களையும் மீறி செயல்படக்கூடிய ஆற்றல் உண்டு.

கடக லக்கினம், யோக ஜாதகம் கொண்டவர் தான். 2016 ஜூன் அவருடைய குரு திசை முடிந்து சனி திசையில் சனி புத்தி தொடங்கியது. 2 ஆம் வீட்டுக்கும் 7 ஆம் வீட்டுக்கும் அதிபதி மாரகாதிபதி என்று சொல்வார்கள்.

அது சிலசமயம் கொல்லும். சனி திசையில் சனி புத்தி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகியும் சுயபுத்தி கொன்றிருக்கிறது.

இரண்டரை வருடம் ஆகிவிட்டது என்று அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. 3 வருடம் 3 நாள் கடந்தபின் தான்அதன் பாதிப்புகள் குறையும்.

ஒரு ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது களத்திரஸ்தானம், கூட்டாளிகளின் ஸ்தானம் என்கிறது ஜோதிடகலை. அதே 7-ம் இடம், மாரகஸ்தானமும் ஆகிறது.

ஒரு திசை நடக்கும்பொழுது, அந்த திசை லக்கினத்திற்கு 7-ல் அமர்ந்த கிரகத்தின் திசையாக இருந்தால் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்ப கண்டம் ஏற்படும்.

ஸ்ரீதேவியின் ஜாதகத்தில், கடக லக்கினத்திற்கு 7-ல் அதாவது மகரத்தில் சனி அமர்ந்து அந்த திசையே நடந்ததால் அதுவும், சனி திசையில், சனி புக்தி 22.02.2019 வரை இருக்கிறது.

அந்த சனியே, லக்கினத்திற்கு 8-க்குரியவனாக அமைந்து ஏழாம் இடத்தில் அமர்ந்து மரணத்தை கொடுத்துவிட்டான். அதுமட்டுமல்ல இவர் ரிஷப இராசியில் பிறந்தவர்.

இறுதி கட்டம் வரை குறி வைத்த அஷ்டம சனி..

ரிஷப இராசிக்கு தற்காலம் அஷ்டம சனி நடக்கிறது. இதுவும் மேலும் இவருக்கு பாதித்துவிட்டது.

லக்கினத்திற்கு மூன்றாம் இடமான கன்னியில் அதாவது கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்ததால் இவரின் புகழ் கடல் கடந்ததாக அமைந்தது.

செவ்வாயை மீன குரு பார்வை செய்து, குரு மங்கள யோகம் தந்து இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் புகழுடன் திகழ வைத்தது.

யோக ஸ்தானம் யோகஸ்தானம் யோகஸ்தானம் என்கிற 5-ம் இடத்தை சந்திரன் மற்றும் குருவின் பார்வையும் இவருக்கு பெரிய யோக வாழ்க்கை கொடுத்தது.

இவ்வளவு சிறப்பு இருந்தும் சனி பகவான் 7-ம் இடத்தில் அமர்ந்து அதே திசையும் வந்து இவரின் உயிரை பறித்து, திரை உலகத்தையும், இவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

210..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.