உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

திக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ

காலையடி இணைய உதவும் கரங்கள், 23.03.2018 நேற்றையதினம்,, குளிர்பான நிலையம் உள்ளடங்கலான பல்பொருள் வாணிப அங்காடி ஒன்றினை திரு துஷாந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு அமைத்து வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறப்பினர்,, திரு கௌரவ சிவாஜிலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு, தன் கரங்களினால் அங்காடியினை திறந்து வைத்து துஷாந்தனின் குடும்பத்தினரிடம் கையளித்தார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த துஷாந்தன் குடும்பத்தினருக்கே இவ் வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது . இவர்களின் நிலையறிந்து அவர்களின் வீடுநோக்கி விரைந்த காலையடி இணைய உதவும் கரங்கள் குளுவினர் ,வசிப்பதற்கு நிரந்தர வீடு இன்றியும், குடும்ப தலைவர் பாரிய வேலைகள் எதுவும் செய்யமுடியாமல் ஒருகால் முற்றாக இழந்திருப்பதனையும் கவனத்தில் கொண்டே , அவர்களுக்கான வாழ்வாதார உதவியினை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தனர்.

அதன்படி நோர்வே ஒஸ்லோ வாழ் புலம்பெயர் மக்கள் பலரால் இணைந்து வழங்கப்பட்ட (1 66 000) ஒருலட்சத்து அறுபத்து ஆறாயிரம் ரூபா நிதி உதவியினைக் கொண்டே, இந்தக் குடும்பத்தினர்க்கான வாழ்வாதார உதவியாக பல்பொருள் வாணிப நிலையம் அமைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது காலையடி இணையத்துக்கு கருத்து தெரிவித்த திரு சிவாஜிலிங்கம் அவர்கள் , சர்வதேச அங்கீகாரம் கிடைத்து இந்த மக்களுக்கான சிறப்பான வாழ்க்கைமுறை அமையும்வரை, புலம்பெயர் மக்களின் இதுபோன்ற உதவிகள் மிகவும் அவசியமானது என தெரிவித்தார்.

இவ் அங்காடிக்கான செலவீனங்கள் கடை கட்டுமான பணிக்கான மொத்தசெலவீனம் 55000 அரிசி மா சீனி பருப்பு உட்பட்ட நூற்றுக்கும் அதிகமான பொருட்கள், மற்றும் குழிர்பானம் தயாரிப்பதற்குத் தேவையான பழங்கள், கலவை இயந்திரம், அதற்கான கண்ணாடி குவளைகள் , பெயர்ப்லகை , தராசுப் படிகள் போன்றவற்றின் செலவீனம் 1,11,859 ரூபா மரக்கறிகள் கொள்வனவு செய்வதற்காக மேலதிகமாக வழங்கப்பட்ட பணம் 4000 பொருட்கள் ஏற்றிய செலவு 4500 ரூபா ஒதுக்கப்பட்ட நிதி 1 66 000 செலவான நிதி.

1 71 359 மேலதிகமாக செலவான நிதி. 5359 இந்தப்பல்பொருள் அங்காடியினை அமைத்து வழங்க உதவி புரிந்த நல்ல உள்ளங்கள், கிருத்திகன் தசாயினி ,50 000 இலங்கைரூபாய் ஒஸ்லோ நோர்வே ,, சாருஜன் ,,ஸ்ரீரஞ்சன், 500 க்ரோன் ஒஸ்லோ நோர்வே ,, பிரதாப் 500 க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,, மேனுஜன் 500 க்ரோன் ஒஸ்லோ நோர்வே ,, பெயர் குறிப்பிட விரும்பாத நபர் 1000 க்ரோன் ஒஸ்லோ நோர்வே ,, கபில் 500 க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,, கேசிகன் கேஜினி.1000 ,க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,, தமிழ்நிலா ,கேபிஷா , ரக்ஷகி, 1000 க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,, ஓஸ்லோ தளபதி வெறியன் 500 க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,, மற்றும் திரு சுபாஸ்கரன் மணியம் அவர்கள்.., 1000 க்ரோன் ஓஸ்லோ நோர்வே இவர்கள் அனைவருக்கும் காலையடி இணைய உதவும் கரங்களின் சார்பிலும்,துஷாந்தனின் குடும்பத்தினர் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை உதவும் கரங்கள் அமைப்பினர் தெரிவித்துக்கொள்வதுடன் அனைவரின் கரங்களையும் இறுகப்பற்றிக்கொள்கின்றோம்.

 

3,599..views

  • Gopal:

    மாடாய் உழைத்து, ஓடாய் தேய்ந்து ,உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து , துஷாந்தன் அவர்களின் குடும்பத்திற்க்கு வெளிச்சம் கொடுத்த நீங்கள் தான்
    அந்த குடும்பத்திற்க்கு கடவுள் .உங்களின் இந்த சேவை மென்மேலும் தொடர
    எனது வாழ்த்துக்கள்.

  • jegatheeswaran:

    நானும் இந்த உங்களின் கொடைக்கு வாழ்த்துக்கள். ஜெகதீஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.