உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

காலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்!!படங்கள்,வீடியோ

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் மாவீரர்களான அரசன்,மற்றும் இராசன் ஆகியோரின் பெற்றோர் இன்று உச்சக்கட்ட ஏழ்மையில் , ஏன் என்று கேட்பதற்கு கூட நாதியற்ற நிலையில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிப் போயிருக்கிறார்கள்.

ஆம் உறவுகளே!!!

கடந்த காலங்களில் நம் கதாநாயகர்களாகவும், தற்காலத்தில் தேவையற்றவர்களாகவவும் ஆகிப்போய்விட்ட நம் மாவீரரத்தெய்வங்கள் இருவரை ஈன்றெடுத்து, தாய் மண் விடுதலைக்காக ஆகுதியாக்கி விட்டு,இன்றோ வாழ வழியற்றுப்போய் நிற்கும் எம் தொப்புள்க்கொடி உறவுகள் தான் இவர்கள்.

 

ஆண்பிள்ளைகள் இருவரும் ஈழமண் மீட்பில் சரித்திரமாகி விட, நோய்வாய்ப்பட்ட ஒரே மகளின் ஆதரவில் வாழ்ந்து வரும் வேளையில் ,விதியின் வசத்தால் மகளும் கணவரை இழந்து விதவையாகிப்போக, சொல்லொணாத் துயரங்களுடன் தொடர்கிறது இவர்களது வாழ்க்கை.

இந்நிலைக்கு யார் காரணம்???

உறவுகளே!!! மாவீரர் நினைவு நாட்களுக்காக பெருமளவு நிதியை செலவுசெய்து மாவீரர்களை நினைவு கூரும் நாம் ,ஏன் அவர்களின் பெற்றோர்களை உடன்பிறந்தோரை மனைவியை பிள்ளைகளை மறந்து தவிக்க விடுகிறோமே???

இது யார் குற்றம்??

இந்நிலையை நன்கு உணர்ந்தே அன்று நம் தேசியத்தலைவர் அவர்கள் அன்புச்சோலை எனும் மூதாளர் பேணலகம் அமைப்பை நிறுவி அதன்மூலம் இவர்கள் போன்றவர்களுக்கான பணம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்தார். ஆனால் என்று எம் தாய்நாட்டின் நிலை மாறியதோ ,அன்றே இவர்களின் நிலையும் மாறிப் போனது.

 

இன்று அநேக மாவீரர் குடும்பங்களின் நிலை இதே கதி தான். இந்நிலையில் தான் கிளிநொச்சி மாவீரர் குடும்பத்தினரின் நிலை பற்றி கேள்வியுற்ற எம் உதவும் கரங்களின் அமைப்பினர், அவர்களின் வீடு நோக்கி விரைந்தனர்.அவர்களின் நிலை அறிந்து ,அவர்களுக்கான வாழ்வாதார உதவியை வழங்க முன்வந்தனர்.

 

அதன்படி நோர்வே ஓஸ்லோ நகரில் வாழ்ந்து வரும் சிறீஸ்கந்தராசா பிரதாப் அவர்களால் காலையடி இணைய உதவும் கரங்களுக்கு வழங்கப்பட்ட 78300 இலங்கை ரூபாய்கள் நிதியில் இருந்து இவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 

(இங்கே நல் இன முட்டையிடும் பேட்டுக்கோழிகளே இவர்களுக்கு வாங்கி வழங்கப்பட்டுள்ளது. ) அதன்படி 50 கோழிகள் 37000

கோழிக்கூடு 25000

கோழித்தீவனம் 9390

போக்குவரத்து 2000

பணமாக 2500

கோழி ஏற்றியது 2500

மொத்த செலவு 78390

இங்கே இந்தக்குடும்பத்திற்கான உதவிகளை வழங்க நிதி உதவி புரிந்த சிறீஸ்கந்தராசா பிரதாப் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் காலையடி இணைய உதவும் கரங்கள் சார்பாகவும் , உதவியினை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.

3,641..views

  • Jegatheeswaran:

    சூப்பர் என்ன ஒரு தேவையான உதவி உங்களுக்கு இல்ல பிரதாப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.