உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

இன்றைய ராசிபலன் (17/05/2018)

இன்றைய ராசிபலன் (17/05/2018)

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்று கொள்வார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். பணவரவு உண்டு-. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். இனிமையான நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • துலாம்

    துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். தொட்டது துலங்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • மீனம்

    மீனம்: உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

768..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.