உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    இன்றைய ராசிபலன் (14/11/2018)

    இன்றைய ராசிபலன் (14/11/2018)

    • மேஷம்

      மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோ கத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

    • ரிஷபம்

      ரிஷபம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். வியாபா ரத்தில் புது ஒப்பந்தம் கையெ ழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப் பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

    • மிதுனம்

      மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலை களைபார்க்க வேண்டி வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலைவாங்குங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராட்டமான நாள்.

    • கடகம்

      கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

    • சிம்மம்

      சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

    • கன்னி

      கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறை யும். அக்கம்-பக்கம் வீட்டாரின்ஆதரவுப் பெருகும். வியாபாரத் தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.

    • துலாம்

      துலாம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

    • விருச்சிகம்

      விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மாறு பட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.

    • தனுசு

      தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

    • மகரம்

      மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும்.பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசைவாட்டும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில்புது  முயற்சிகள்  வேண்டாம்.  உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

    • கும்பம்

      கும்பம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி
      வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரியிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

    • மீனம்

      மீனம்: குடும்பத்தில் ஒற்று மை பிறக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக்கூடும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

    777

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.