உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  கே.சி.எஸ்.ஐயர் கணித்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

  2020-ம் ஆண்டுக்கான முதல் நான்கு ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் ஏற்கெனவே செய்து வந்த காரியங்களில் முன்னேற்றம் உண்டாகத் தொடங்கும். தாமதமாக நடந்து வந்த செயல்களும் துரிதமாக நடக்கத் தொடங்கும். உழைப்பு கூடினாலும் பெயர், புகழ் இவற்றுக்கு ஏந்தக் குறைவும் ஏற்படாது. தைரியத்துடன் புதிய முயற்சிகளில் உட்படுவீர்கள். உங்களது கவர்ச்சியான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். குழந்தைகள் உங்களுக்கு நம்பிக்கை எட்டுவார்கள். சமுதாயப் பணிகளில் உடுபட்டு புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். மனதிற்கினிய குறுகிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெற்றோர் உங்களுக்கு இதரவாக இருப்பார்கள். அதேநேரம் அவர்களுக்கு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைப் பிறப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகவே தொடரும். வருமானம் படிப்படியாக உயரும். இதுவரை இருந்த எதிர்ப்புகள் அகலும்.

  13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களையும் திட்டமிட்டு செய்து முடித்து விடுவீர்கள். மனதில் இருந்த இனம் புரியாத பயம், கவலை நீங்கிவிடும். செய்தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்களை அனுசரித்துச் சென்று அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.  ஆலய, தரும காரியங்களிலும் உட்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் தருணத்தில் பெரியோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.

  19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். புதிய கடன்களை வாங்கி அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள். போட்டிகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தெளிவாக சிந்தித்து காரியமாற்றுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் மறைந்து குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். அவர்களின் உதவியால் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

  உத்யோகஸ்தர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். உங்களுக்கு சில தவிர்க்க முடியாத வேலைகளை ஓதுக்குவார்கள். அவைகள் கடினமாக இருந்தாலும் சிரமப்பட்டு முடித்து உங்களின் திறமைகளை வெளிப்படுத்துங்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேற சற்று சிரமப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுங்கள்.

  வியாபாரிகளுக்கு லாபம் சுமாராக வரும். சம்பந்தமில்லாத தொழிலில் உட்படுவது நல்லதல்ல. வண்டி,  வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடுதலாக ஏற்படும். வியாபாரச் சங்கங்களில் பொறுப்பு வகிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். அதே சமயம் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். மற்றபடி பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள்.

  அரசியல்வாதிகளுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கட்சியில் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். அதோடு போட்டிகளையும் சந்திக்க நேரிடும். இருப்பினும் போராட்டங்களில் புதிய வேகத்துடன் உட்படுவீர்கள். கட்சி ரீதியான பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் திட்டங்களைச் செயல்படுத்த சிரமப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் சில தடைகள் ஏற்படும். வருமானம் சீராக இராது. உங்களின் கடமையை உணர்ந்து செயல்படுவது உத்தமம். சக கலைஞர்களுடன் அன்யோன்யம் பாராட்டுங்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்தில் உள்ள உறவினர்களுக்கிடையில் சிறிது மனஸ்தாபங்கள் தோன்றும். அதே நேரம் பெற்றோர் வழியில் சிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளிடம் மனம் திறந்து பேச வேண்டாம். மாணவமணிகளுக்கு கல்வியில் மதிப்பெண்கள் சற்று கூடுதலாக வரும். அதேநேரம் நண்பர்களிடம் வீணாக சண்டைபோட்டுக் கொள்வீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே உட்படவும்.

  பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

  *****
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் பிடிவாத குணங்களைத் தளர்த்திக் கொண்டு செயலாற்றத் தொடங்குங்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக வாழப் பழகுவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் தானாக விலகி விடுவார்கள். செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். உங்களின் கீழ் வேலை செய்பவர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். செய்யும் காரியங்களில் சுறுசுறுப்புடன் உட்படுவீர்கள்.

  பழைய வாகனங்களைப் பராமரிக்கும் செலவுகளும் உண்டாகும். நல்லவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். உங்களின் பெருந்தன்மையினால் பெயர், புகழ் கூடப் பெறுவீர்கள். விலகியிருந்த உறவினர்களும் மறுபடியும் குடும்பத்துடன் வந்து சேருவார்கள். மற்றபடி உங்கள் பெயர், அந்தஸ்து, செல்வாக்கு இகியவை எப்பொழுதும்போல் இருந்து வரும் காலகட்டமிது.

  13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் குடும்ப சுமைகளை சுலபமாகத் தாங்குவீர்கள். பொருளாதார விஷயங்களும் ஒரே சீராக காணப்படினும், உறவினர்களுக்கு பண உதவியும், சரீரத்தால் உதவியும் செய்ய வேண்டிவரும். தேவையான நேரத்தில் நண்பர்கள் கைகொடுப்பார்கள். திடீர் பயணம் ஒன்று ஏற்பட்டு அதனால் முக்கிய திருப்புமுனை உண்டாகும் காலகட்டமிது.

  19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் துணிந்து செயல்பட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற்று விடுவீர்கள். உங்களுக்கென்று தனி இடத்தைப் பிடித்து விடுவீர்கள். பொருளாதாரம் உயரத் தொடங்கும். மனதில் இருந்த கவலைகள் மறைந்து தெளிவுடன் காணப்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆக்கபூர்வமான வேலைகளில் செலவையும் பார்க்காமல் சந்தோஷமாக உட்படுவீர்கள். உங்கள் அறிவும் ஆற்றலும் உயர்ந்து காணப்படும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

  உத்யோகஸ்தர்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் சக ஊழியர்களின் ஆதரவுடன் வேலைப்பளு சற்று குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளவும். மற்றபடி தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். வேலையில் இருந்த கெடுபிடிகள் குறையும்.

  வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு சற்று பெருகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். அரசாங்கத்திலிருந்து சலுகைகளைப் பெறுவீர்கள். அதே நேரம் கடுமையாக உழைக்க நேரிடும். வண்டி, வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். மற்றபடி உங்களுக்கு நண்பர்கள் பக்கபலமாக இருக்கும் கால கட்டமிது. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். அதேநேரம் உங்களுக்குக் கீழ் வேலை செய்கின்றவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய மாட்டார்கள். அதனால் சுய முயற்சிகளைக் கூட்டிக்கொண்டு உழைக்க வேண்டி வரும். கால்நடைகளை மிகவும் கவனத்துடன் பராமரிக்கவும்.

  அரசியல்வாதிகள் தங்கள் எண்ணங்களை சரியான முறையில் வெளிப்படுத்தவும். அவைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். அதனால் முக்கிய பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். மற்றபடி கடந்த கால உழைப்புக்கு இந்தக் கால கட்டத்தில் பலன் கிடைக்கும். தேர்தல் பிரசாரத்திற்காக நேரம் ஒதுக்குவீர்கள். கலைத் துறையினரைப் பொருத்தவரை புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய பாணியில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். சக கலைஞர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வார்கள். சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சியைக் காண்பார்கள். பெண்மணிகள் விரக்தியில் இருந்து விடுபடுவீர்கள்.

  தங்களை நாடி வரும் நண்பர்களுக்குத் தயங்காமல் உதவி செய்வீர்கள். குடும்பத்தினரிடம் அன்பைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை நன்றாக பேண யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். இருப்பினும் பிறரிடம் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் தவறான பழக்கங்களைத் திருத்திக்கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். பெற்றோர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளவும். மற்றபடி உழைப்புக்கேற்ற மதிப்பெண்களை அள்ளுவார்கள். பிடிவாத குணத்தை விட்டொழிக்கவும்.

  பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

  *****

  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகை, ஆதரவு திடீரென்று கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகளும், கெளரவமும் கிடைக்கும். அறிவும் புத்திசாலித்தனமும் கூடும். குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் யோசித்து செயல்படுவீர்கள். எதிரிகளால் தொல்லைகளுக்கு உட்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட்டு விடுவார்கள். கடினமான வேலைகளையும் திறம்பட செய்து முடித்து விடுவீர்கள். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள். மற்றவர்களின் பேச்சைக் அலட்சியப்படுத்தாமல் மதிப்பு கொடுத்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். உங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள்.

  13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் நீண்ட நாளைய ஏதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். செய்தொழிலில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் உதவியும் ஆலோசனையும் கிடைக்கும். இதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். வருவாய்க்கு ஏற்ற செலவுகள் ஏற்படும். ஆகையால் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். மற்றபடி கடன் பிரச்னை ஏன்று எதுவும் ஏற்படாது. குடும்பத்தின் ஒற்றுமையைப் பேணுவீர்கள். உடன்பிறந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உடல் நலம், மன வளம் ஆகியவற்றை மேம்படுத்த யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். அதேநேரம் வாகன யோகபலன் இந்த காலகட்டத்தில் தடைப்பட்டிருக்கும் என்றும் கூற வேண்டும்.

  19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் முயற்சிக்கும் காரியங்களில் மட்டுமல்ல, மற்ற பொறுப்பான விஷயங்களிலும் கடமைகளிலும் சரியாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வருமானம் பல வகையிலும் வரத்தொடங்கும். குழந்தைகளால் மன நிம்மதி உண்டாகும். சிலருக்கு புதிய நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகமுண்டாகும். வம்பு வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் உண்டாகும். அதனால் சொத்து பிரச்னைகள் தீர்ந்து வருமானம் வரத்தொடங்கும்.

  உத்யோகஸ்தர்கள் அனைவரிடமும் சுமூகமாகப் பழகுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். அலுவலகப் பயணங்களால் ஓரளவு நன்மை உண்டாகும். தடைப்பட்டிருந்த எதிய உயர்வு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரம் உடலில் சோர்வு காணப்படுவதால் சுறுசுறுப்பு குறையும்.

  வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகள் கைகூடும் அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களைச் சார்ந்து செய்து வந்த தொழிலை தனித்து நின்று நடத்த முயல்வீர்கள். விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். கூடுதலாக உழைத்து, மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்க முனைவீர்கள். விவசாயிகளுக்கு மகசூலில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். மேலும் கூடுதல் வருமானத்தைப் பெற காய்
  கறிகள், பழங்கள், கிழங்குகள் பயிர் செய்து பலன் பெறலாம். அதே நேரம் உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு உதவிகளைச் செய்யுங்கள். விவசாயத்தைப் பெருக்க புதிய உபகரணங்களையும் வாங்குவீர்கள்.

  அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையோடு நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். உங்களின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மன நிம்மதி அடைவார்கள். வருமானமும் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களிடமிருந்து சிறுசிறு நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக் கொள்வீர்கள். ரசிகர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காரியமாற்றுவீர்கள்.

  பெண்மணிகளுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அதே நேரம் இந்த காலகட்டத்தில் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். மாணவமணிகள் தவறான வழியில் நண்பர்களோடு சேர்ந்து உட்படாமல் பெற்றோர் வழிகாட்டுதலின் படி நடந்து கொள்வீர்கள். அதிகம் பாடுபட்டு படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

  பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

  *****
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், இயில்யம் முடிய)

  18. 9. 2020 முதல் 12. 2. 2021 வரை உள்ள காலகட்டத்தில் மனதில் இருந்த இனம் புரியாத குழப்பங்கள் நீங்கி விடும். செய் தொழிலில் இருந்த தேக்கநிலை மறைந்து விறுவிறுப்பு கூடத் தொடங்கும். வருமானமும் உயரத் தொடங்கும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படத் தொடங்கும், புதிதாக ஏந்த ஓரு பாதிப்பும் ஏற்படாது. பெரும் பணக்காரர்களின் உதவியும் கிடைக்கும். செய்தொழிலை வெளியூர்களுக்கும் சென்று விரிவுபடுத்துவீர்கள். சிலருக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் உண்டாகும் வெளிநாடுகளுக்கு செல்ல விசா எதிர்பார்த்திருந்தவர்களுக்கு விசா கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகளுக்கு தடைபட்டிருந்த கல்வியும் தொடரும். தெய்வ வழிபாட்டிலும், ஆன்மிகத்திலும் மனதைச் செலுத்துவீர்கள். வருமானத்தில் ஒரு பகுதியை தரும காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.

  13. 2. 2021 முதல் 18. 9. 2021 வரை உள்ள காலகட்டத்தில் அரசாங்கக் கெடுபிடிகள் குறைந்து செய்தொழிலை செம்மையாக நடத்துவீர்கள். பேச்சில் நிதானம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வருமானம் வரத்தொடங்கும். பெற்றோர்களுடன் இணக்கமாக வாழ்வீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எதிர்காலத்திற்கு புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். உங்கள் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து சமநிலை தவறாமல் காரியமாற்றும் காலகட்டம் இது.

  19. 9. 2021 முதல் 17. 3. 2022 வரை உள்ள காலகட்டத்தில் பொது காரியங்களில் உட்படும் வாய்ப்பு கிடைக்கும். வழக்கு வியாஜ்யங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். மூத்த உடன் பிறந்தோரின் ஆதரவு நிரம்பக் கிடைக்கும், அவர்களுக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகமுண்டாகும். சிலர் புதிய வீட்டிற்கு மாறுவார்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்களும் மறுபடியும் குடும்பத்தில் இணைவார்கள். நேர்முக, மறைமுக ஏதிர்ப்புகள் நீங்கும். மனோ தைரியத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகத் துறைகளின் மூலமாக லாபம் கிடைக்கும்.  புதிய தொழில் நுட்பங்களைக் கற்று அவைகளை செய்தொழிலில் செயல்படுத்துவீர்கள். உடல்நலம், மனவளம் ஓங்க யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள்.

  உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சி காலகட்டங்களில் மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக எழியர்களும் உங்களுக்கு உதவுவார்கள். தற்காலிகப் பணி நீக்கத்தில் இருந்தவர்கள் குற்றமற்றவர்கள் ஏன்று நிரூபணமாகி வேலையில் சேர்ந்து விடுவார்கள்.

  வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் சில எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றைத் திறம்பட சமாளிப்பீர்கள். வியாபாரத்திற்காக கடன் வாங்க நேரிடும். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். உங்கள் செல்வாக்குக்கு ஏந்தக் குறையும் வராது. விவசாயிகளுக்கு மகசூலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். உழைப்புக்கேற்ற பலனை அடைவதில் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள்.

  அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லை வராது ஏன்றாலும் கவனமாக இருக்கவும். பேசும் நேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றபடி இந்த காலகட்டத்தில் நேர்த்தியாக செயலாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழும், பொருளும் அதிகரிக்கும். புதிய ஓப்பந்தங்களைப் பெற தாங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

  பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். குழந்தைகளின் ஏதிர்காலத்துக்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் மனதில் உற்சாகத்துடன் பாடங்களைப் படிப்பார்கள். ஓய்வு ஏடுப்பதைக் குறைத்துக் கொண்டு பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்களை அள்ளுங்கள். விளையாட்டுகளிலும் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.

  315

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.