உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    கொழும்பை சேர்ந்த 18 வயதுடைய பெண் ஒருவர் கோவிட் தொற்றால் மரணம்

    நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    அதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு இறுதியாக பதிவான கொரோனா மரணங்களில் 18 வயதுடைய பெண் ஒருவர் உள்ளிட்ட 35, 40 மற்றும் 71 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண்ணொருவரும், பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண்ணொருவரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பெண்ணொருவரும் மகரகம பிரதேசத்தைச் சேர்ந்த 71பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை 931 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 99, 653 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 94 036 பேர் குணமடைந்துள்ளதோடு , 4848 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வத்தளை பகுதியில் அண்மையில் திருமணம் முடித்த மணப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கண்டி – பல்லேகல கிரிக்கெட் மைதான ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    98

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.