உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    தமிழர் பகுதி கடற்கரைகளில் கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்;வரும் காலங்களில் மக்களும் கரையொதுங்குவார்கள் ,photos

    மன்னார்- கரடிக்குளி கடற்கரையில் இன்று காலை எரி காயங்களுடன் உயிரிழந்த நிலையில் திமிங்கிலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.

    எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னரே மன்னார் கடற்கரை ஓரங்களில் தொடர்ச்சியாக கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    கப்பலின் இரசாயன கழிவுகளினால் தங்களது வாழ்வாதாரத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் எரி காயங்களுடன் திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளமையினால் அப்பகுதி மீனவர்கள் மேலும் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

    இதேவேளை மட்டக்களப்பு- கிரான்குளம் கடற்கரையில் 3 கடல் ஆமைகள் மற்றும் ஒரு டொல்பின் மீன் உயிரிழந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

    மட்டக்களப்பு கடற்கரையில் மேலும் ஒரு டொல்பின் 

     மட்டக்களப்பு தாழங்குடா கடற்கரை பகுதியில் மேலும் ஒரு டொல்பின் மீன் இனம் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. சுமார் ஐந்து அரை அடி நீளம் உள்ள டொல்பின் மீன் இனமே இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

    உயிரிழந்த கடல்வாழ் உயிரினங்களை அம்பாறை வனஜீவராசிகள் மிருக வைத்திய பிரிவிற்கு அனுப்பி உடற்கூற்று பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த உடற்கூற்று அறிக்கை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுற்றுவட்ட உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ச்சியாக கரையொதுங்கும் இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள்

     இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இந்நிலையில், இன்று இவ்வாறு கரை ஒதுங்கிய 308 கடலாமைகள், 2 டொல்பின் மீன்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.

    மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் உட்பட டொல்பின் மீன் ஒன்றும் இன்று கரையொதுங்கியுள்ளது.  

    இதேவேளை அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட தொடர்ச்சியாக கரையொதுங்கும் இறந்த கடல் வாழ் உயிரினங்களினால் மக்கள் மத்தியில் அச்ச உண்ர்வு தோன்றியுள்ளது.

    அதிலும் குறிப்பாக தமிழர் பிரதேச களப்புக்களில்  இவ்வாறு  கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Gallery
    Gallery
    Gallery
    Gallery
    Gallery
    Gallery
    Gallery
    Gallery
    Gallery
    Gallery
    Gallery
    Gallery
    170

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.